வியாழன், 6 அக்டோபர், 2022

திருமண பொருத்த நுட்பங்கள்

திருமண பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக களத்திரகாரகன் சுக்கிரனுடன் நிலை, ஏழாம் வீட்டு அதிபதியின் நிலை, ஏழாம் வீட்டுடன் தொடர்பு கொண்டுள்ள கிரகங்களின் நிலை கண்டிப்பாக ஆராயப்பட வேண்டும். #Iniyavan 

இலக்ன ராசிக்கு 2,7, எட்டாம் இடங்களில் பாப கிரகங்கள் இருப்பது திருமண வாழ்க்கையில் சண்டை, சச்சரவினை ஏற்படுத்தும் என்றாலும் தசா வராத பொழுது அது குறித்து பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை.
7-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும் சுபர்களுடைய தொடர்பு இருப்பின் அல்லது சுபர்களுடைய வீடுகளாக இருப்பின் பிரச்சினை இருக்காது.#Iniyavan

ஏழாம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்து எவ்வித சுபர் தொடர்பும் இல்லாத நிலையில் வீடு கொடுத்தவன் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
ஏழாம் வீட்டில் பாப  கிரகங்கள் இருக்கும் பொழுது வீடு கொடுத்தவனும் பலவீனமாக இருக்கக்கூடிய பட்சத்தில் ஏழில்  நின்ற பாப கிரகங்கள்களின் தசாக்காலங்கள் கண்டிப்பாக மண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுத்தும்.
ஏழாம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்கும் பொழுது ஏழாம் வீட்டு அதிபதியின் நிலை, களத்திரகாரகன் சுக்கிரனுடைய நிலையும் கவனிக்கபட வேண்டும்.

ஏழில் பாப கிரகங்கள் இருந்தாலும் ஏழாம் வீட்டு அதிபதி மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும்போது மண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது.#Iniyavan

சுப கிரகங்கள் ஏழாம் வீட்டு அதிபதியாகி தனித்த நிலையில் நீசம் பெற்று இருக்கும் பொழுது இயற்கை பாபர்களின் பார்வை, இணைவு இல்லாதவரை பெரிய பாதிப்பை செய்வதில்லை.
நீசமான சுப கிரகத்தை  மற்றொரு இயற்கை சுபகிரகம் பார்ப்பது,நீசமான சுபக்கிரகம் சந்திர அதியோகத்தில் இருப்பது போன்றவை நல்ல அமைப்பு.

களத்திரகாரகன் சுக்கிரன் அல்லது ஏழாம் அதிபதியாக இருக்கக்கூடிய இயற்கை சுப கிரகங்கள் நீசம் பெற்ற நிலையில் இருக்கும்பொழுது  முன் பின் ராசிகளில்  இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய்,ராகு இணைந்திருக்கும் போது டிகிரி அடிப்படையில் இணைந்து உள்ளனரா என்பதையும் கவனமாக பார்க்கவேண்டும்.
உதாரணமாக கன்னியில் சுக்கிரனும், துலாத்தில் சனியும் இருக்கும்பொழுது இருவருக்குமான இடைவெளி குறைவாக இருக்கும் பொழுது (12 டிகரிக்குள்) சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் மணவாழ்க்கையில் பாதிப்பை தரும்.

தனுசு லக்னமாகி லக்னத்தில் குரு திக் பலம் அடைந்து ஏழாம் வீட்டையும், ஏழாம் வீட்டு அதிபதி புதனையும் (சிம்மத்தில் புதன்) பார்த்தபோதும், களத்திரகாரகனான சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்ற நிலையிலிருந்து, துலாத்தில் இருக்கக்கூடிய சனியுடன் டிகிரி அடிப்படையில் நெருங்கியிருந்த காரணத்தினால், அவயோக கிரக தசாகாலத்தில் சுக்கிர புத்தியில் மணவாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்ட நிலைகளும் உண்டு.
சுக்கிரன் பலவீனத்தால் திருமணத்தில் தடை, தாமதங்களை சந்திப்பவர்களாக இருக்கக்கூடியவர்கள் சுக்ரனுக்குரிய வெண் மொட்சை பரிகாரத்தையும், ஆண்டாள் வழிபாட்டையும் ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக கடைபிடித்து வரும் பொழுது தடை நீங்கி திருமணம் நல்ல படியாக நடக்கும்.
சுக்திரனுடைய  பலவீனத்தால் மண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடியவர்கள் வெள்ளிக்கிழமைதோறும், அதிகாலையில் சுக்கிர ஓரையில், ஸ்ரீ ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் வழிபட்டு வருவது நல்லதாகும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f

https://www.facebook.com/groups/374176721571838/?ref=share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக