ஞாயிறு, 18 டிசம்பர், 2022

குரு வக்ரம் பெற்றால்?



குழந்தைகள், தனம், மத நம்பிக்கைகள், ஆன்மீக விஷயங்கள், நீதி, நேர்மை,இரக்கம், போன்ற அறம் சார்ந்த விஷயங்கள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றிற்கு காரணமான கிரகம் குரு பகவான். குரு வக்ரமானவர்கள் மேற்கண்ட விஷயங்களை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். மதம், தெய்வ வழிபாடு, புராணக் கதைகள் மற்றும் இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள மேற்கண்ட விஷயங்களைச் சந்திக்கக்கூடியவர்களாகவும், மேற்கண்ட விஷயங்கள் பற்றி பல கேள்விகளை எழுப்பக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். #Iniyavan 
தன்னுடைய சொந்த மதத்தை பற்றியே விமர்சிக்க கூடியவராகவும், தங்களது மதத்தை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களாகவும் மதம், ஆன்மிக நடைமுறைகள் பற்றிய வித்தியாசமாக கேள்விகள் கேட்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
தன்னுடைய மத விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு பிற மதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ள விழுமியங்கள் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை பற்றியும் சிந்திப்பவர்கள்.
தங்களுடைய குழந்தைகளின் தேவைகளை அறிந்து அவற்றை முன்கூட்டியே நிறைவேற்றுபவர்கள்.
சுய ஜாதகத்தில் குரு எந்த பாவகத்தில் வக்கிரமாக இருக்கின்றாரோ அந்த பாவகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், எந்த ஆதிபத்யமோ அந்த ஆதிபத்யம் குறிக்கும் விஷயங்களில் விழிப்புணர்வாக இருப்பார்கள். உதாரணத்திற்கு இரண்டு மற்றும் பதினொன்றாம் பாவகங்களில் குரு வக்கிரமாக இருந்தால் தன்னுடைய லாபம், வருமானம், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறியாகச் செயல்படுவார்கள். #Iniyavan

குரு வக்ரமாக இருக்கும் போது ஆரம்ப காலகட்டங்களில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பணத்தை வரைமுறையின்றி செலவு செய்யக் கூடியவர்கள்.  பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பின்னடைவுகளைச் சந்தித்த பின்னர், பிறருடன் தன்னுடைய பொருளாதார நிலையை ஒப்பிட்டுப் பார்த்து கொண்டு பின்பு,தன்னுடைய வரவு செலவு சம்பந்தப்பட்ட விஷயங்களில்  மிகுந்த சுதாரிப்பாக செயல்படுவார்கள். பண விஷயங்களில் பிறரிடம் ஏமாறக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள். #Iniyavan
விட்டுக்கொடுத்துச் செல்வது சகிப்புத்தன்மை போன்ற  குணங்களால் ஆரம்ப காலகட்டங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்து பின்பு  அந்த விஷயங்களில் தன்னுடைய செயல்பாடுகளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக