திங்கள், 19 டிசம்பர், 2022

சனி வக்ரம் பெற்றால்



சனி வக்ரமாக இருந்தாலும், எப்பொழுதுமே வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுவுடன் இணைந்திருந்தாலும் இந்தப் பதிவு பொருந்தும்..

கடின உழைப்பு, தாமதங்கள், விரக்தி மற்றும் சலிப்பு, சோம்பல், தொடர் முயற்சி, பொறுத்திருத்தல்  போன்றவற்றிற்கு காரகம் பெற்ற கிரகம் சனி பகவானாவார்.
நாடி ஜோதிடத்தில் சனியைக் கர்மகாரகன் என்று அழைப்பர்.
கர்மா என்பது இங்கே தொழில் என்று பொருள்படும். நாடி ஜோதிடத்தில் சனி வைத்தே  ஒருவரின் தொழில் நிலையை நிர்ணயிப்பார்.
அந்த வகையில் ஒருவரின் தொழில், வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றையும் சனி குறிப்பார்.  அதோடு சனி எந்த ஒரு விஷயத்திலும் பலனைப் பெறுவதற்கான கால அளவு, அதற்கான உழைப்பு, கட்டுப்பாடுகள், வரம்புகள் போன்றவற்றை சுட்டிக்காட்டும் கிரகமாகும். பிறப்பு ஜாதகத்தில் சனி வக்ரமாக இருக்கும்போது மேற்கண்ட விஷயங்கள் அவருடைய வாழ்வில் தீவிரம் அடைகின்றன என்று அர்த்தம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமான உழைப்பை தர வேண்டியிருக்கும். அதற்கான அங்கீகாரம் தாமதமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக்கூடும்.#Iniyavan
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடாக இருப்பார்கள். தனக்கு ஏற்ற தொழில் இது தானா என அவ்வப்போது  சந்தேகிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
சொந்த வாழ்க்கையாகட்டும், தொழிலாகட்டும், தன்னுடைய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.ஆனால் தன்னுடைய சோம்பல் குணத்தால் இவற்றை நிறைவேற்றுவதில்  நம்மிடத்தில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து திடீரென்று சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். ஆனால் நாளடைவில் மீண்டும் சோம்பல் குணம் இவர்களைப் பற்றிக் கொள்ளவும் தாங்களே அனுமதிப்பார்கள். தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற ஈடுபாட்டை மட்டும் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் இன்று தட்டிக் கழிக்கக் கூடிய பொறுப்பு நாளை வேறு ஏதேனும் ஒரு வடிவில் நம்மையே வந்து சேரும் என்பதில் இயல்பிலேயே  தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.ஆரம்ப காலகட்டங்களில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய மாற்றங்கள், தடைகள்,தாமதங்கள், விரக்தியான சூழல் போன்றவற்றை சந்தித்து பின்பு, செய்துதான் ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்வார்கள்.#Iniyavan
சனி தற்பெருமை, புகழ்ச்சி போன்றவற்றிற்கு எதிரான கிரகம்,
பிறப்பு ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்ற நிலையில் இருக்கும்பொழுது எந்த விஷயத்தை நினைத்து பெருமை கொள்கிறார்களோ, நாளடைவில் அவர்களுக்கு எதிராக மாறும். அதை உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களைப் பெற்று எந்த ஒரு ஏமாற்றத்தையும் முன்கூட்டியே எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எவரிடத்திலும் அதிகப்பற்றுடன் இருப்பது தமக்கு மன வருத்தத்தைத் தரும் என்பதை உணர்ந்தவர்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.#Iniyavan

ஆரம்ப காலகட்டங்களில் இயல்பாகச் செய்யக்கூடிய விஷயங்களில் கூட  தடை தாமதங்களை சந்தித்தாலும்,  பின்பு எந்த ஒரு விஷயத்திற்கும் தன்னுடைய இருமடங்கு உழைப்பு தேவை என்பதை உணர்ந்து உழைப்பினைத்  தருவதை வழக்கப்படுத்திக் கொண்டு, தடை தாமதமின்றி எதையும் சாதித்துக் காட்டுவார்கள். #Iniyavan
ஆனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், சனி என்பவர் கடின உழைப்பு,தொடர் முயற்சி, நீண்ட காலப் பொறுமை  போன்றவற்றிற்கு காரணமான கிரகம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும், கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சியைத் தரவேண்டும். 
தருவார்கள்.. சாதிப்பார்கள்....#Iniyavan
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக