புதன், 21 டிசம்பர், 2022

புதன் வக்ரம் பெற்றால்




புதன் வக்ரமாக இருந்தாலும், எப்பொழுதுமே வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுவுடன் இணைந்திருந்தாலும் இந்தப் பதிவு பொருந்தும்..
ஒருவரது புத்திசாலித்தனம், சமயோசித புத்தி மற்றும் செயல்பாடு, தகவல் தொடர்பு கொள்ளும் திறன், வியாபார யுக்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறன், வணிக நடவடிக்கைகள், எதையும் தனக்கு லாபமாக மாற்றும் திறன், எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையையும் பெரிய பாதிப்பின்றி சமாளிக்கக்கூடிய திறன்,
விரைவாக முடிவெடுக்கக் கூடிய திறன், எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஜோதிடம் போன்ற மறைபொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கணிதத் திறமை, ஓவியம் போன்ற நுண்கலைகள் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றிற்கு காரகம் பெற்ற கிரகம் புதன் ஆவார். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது மேற்கண்ட குணங்களை அவரிடத்தில் காண இயலும். #Iniyavan 
இதே புதன் வக்ரமாக இருக்கும்போது மேற்கண்ட விஷயங்களில் பல படிப்பினைகளைப் பெற்ற பின்பு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடியவராக இருப்பார்கள்.
பிறப்பு ஜாதகத்தில் புதன் வக்ரமாக இருக்கும்போது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்ப காலங்களில் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். தவறான தகவல்களால் பாதிக்கப்படுகிறார்கள். 
இவர்கள் சொல்வது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பொதுவாகவே ஒரு கிரகம் வக்ரமாக இருக்கும்போது அந்த கிரகத்தின் காரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குழப்பங்களையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்து படிப்பினைகளை தொடர்ந்து பெற்ற பின்பு அதே விஷயங்களில் நிபுணத்துவத்தை அடைவார்கள். அவர்கள் பெற்ற அனுபவத்திற்கு ஏற்ப இதன் கால அளவு மாறுபடும்.

#Iniyavan

புதன் தகவல் தொடர்பிற்கு முக்கிய காரணம் என்பதால் புதன் வக்ரம் பெற்றவர்கள், ஒரு கருத்தைச் சொல்வதில் பிறருக்கு அனுப்புவதில் முன்னர் பெற்ற இழப்புகள், தடைகள் மற்றும் குழப்பங்களாலும் பின்பு இரட்டிப்பு எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள்.சாதாரணமாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை பிறருக்கு அனுப்புவதில் கூட பலமுறை அதை சரி பார்த்த பின்பு அனுப்புவார்கள். தனக்கு வரக்கூடிய செய்தியும் சரியானதா என்பதை உறுதி செய்து கொள்வார்கள். ஏனெனில் தவறான செய்தியை பெற்றதன் மூலம் முன்னர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

வங்கியில் பிறருக்கு பணம் அனுப்புதல், Online transaction காசோலை சம்பந்தப்பட்ட விஷயங்களில்  கணக்கு எண்களை மிகுந்த கவனமாக சரிபார்த்து கொள்வார்கள்.#Iniyavan
ஒரு விஷயத்தை, இப்படித்தான் நடக்கும் என்று கணிப்பதிலும் நாளடைவில் அவர்கள் பெற்ற முன் அனுபவங்கள், படிப்பினைகள், தோல்விகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு சரியாக கணிப்பவர்கள் இவர்கள்தான்.
ஆனால் அதற்கு சில காலங்கள் பிடிக்கும் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலில் இடர்பாடுகளை சந்தித்தாலும் பின்பு அனுபவத்தின் மூலமாக மற்றவர்களை விட நடைமுறை வாழ்க்கையில் திறமையாகச் செயல்படுவார்கள்.#Iniyavan

புதன் வக்ரம் பெற்றவர்கள், தான் சொல்வதுதான்  ஆணித்தரமானது, தன்னுடைய கருத்துக்கள்தான் உண்மையானது என்று வாதாடக்கூடியவர்கள். உண்மையில் அதனை மறுக்கவும் இயலாது.
ஏனெனில் அவர்கள் சொல்லகூடிய விஷயத்தில் ஏற்கனவே தெளிவான உண்மையை அறிந்து வைத்திருப்பார்கள். அதை மறுக்கும் பட்சத்தில் அவர்களால் ஏற்க இயலாது. ஏனெனில் அதற்காக அதிக காலத்தை செலவழித்தும் இருப்பார்கள்.

 எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் தன்னுடைய பங்களிப்பிலும் சரி, தன்னுடைய லாபத்திலும் சரி எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள்.#Iniyavan

ஒரு விஷயத்தில்தான் ஈடுபடும் போது, அதில் தன்னுடைய பங்களிப்பு என்ன? தனக்கான லாபம் என்ன? என்பதிலும் மிகுந்த கவனமாக இருப்பார்கள். ஒரு கலையை கற்றுக் கொள்வதற்கு பல வழிமுறைகள், வகைகள் இருந்தாலும் அதில் தனக்கு சரியானது எதுவென்று தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர்கள். தேர்ந்தெடுத்த விஷயத்தில் தன்னை நிரூபித்து நிலை நிறுத்திக் கொள்வார்கள். அவர்கள் பெற்ற படிப்பினைகள் மற்றும் அனுபவங்கள் அதற்கேற்ப அதன் கால அளவு மாறுபடும்.
முன்னர் பெற்ற படிப்பினைகளும், அனுபவங்களும் இவருடைய வாழ்க்கை செயல்பாடுகளில் (புதனது காரகத்துவங்களில்) முக்கியப் பங்கு வகிக்கும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக