கேள்வி:- என் குடும்பத்தில் அம்மா வழியில் நாக சாபம் உள்ளது என எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஜாதகத்தில் அதன் அமைப்பு உள்ளது. இதற்கு்முன் இரண்டு தலை முறையாக இதற்கான பரிகாரமோ இல்லை பிராயசித்தமோ செய்யவில்லை. அவர்கள் இதை பற்றி அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் இதை பற்றி அறிந்த பிறகு அதற்கான மன்னிப்பு, நாகத்திற்கு தீபம் , சீர் எடுத்தல் எனச் செய்தேன். இப்போதும் வாரவாரம் ஆலயம் சென்று தீபம் இட்டு வணக்கி வருகிறேன்.
எனது வேண்டுதல் ஏற்க பட்டு சாபம் நிவர்த்தி பெற்றதா?
நன்றி
பதில்:-
நீங்கள் கேட்ட கேள்வியின் படி உதயாதிபதி சூரியன், உள்கட்டத்திலும் வெளி கட்டத்திலும் எட்டில் நின்று ராகு கேதுக்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவ்வகையில் ராகு கேதுக்களின் காரகத்துவம் சார்ந்த பாம்பு தொடர்பான கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.சாபம் நிவர்த்தி பெற்றதா? என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தெய்வ வழிபாடுகளை சுட்டிக்காட்டக்கூடிய ஒன்பதாம் இடம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
உதயத்திற்கு ஒன்பதாம் அதிபதியான செவ்வாய் வெளிக்கட்டத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது நன்மையே என்றாலும் ஒன்பதாம் இடத்தில் அட்டமாதிபதி உட்கார்ந்து, மேற்கொண்டு பாம்புடன் இணைந்து இருப்பதும்
உதயாதிபதி சூரியனே எட்டாம் இடத்தில் பாம்புகளை சுட்டிக் காட்டக்கூடிய ராகு கேதுக்களின் தொடர்பில் இருப்பதால் இன்னும் முழுமையாக நிவர்த்தி பெறவில்லை.
ஒன்பதாம் அதிபதி செவ்வாயும் உள்கட்டத்தில் சனியுடன் இணைந்து இருப்பதாலும் ஆருடத்தில் சனி நிற்பதாலும் இன்னும் ஒரு வருடத்திற்கு நீங்கள் மேற்கொண்ட வழிபாடுகளை தொடர்ந்து செய்து வரும் பொழுது ஒரு வருடத்திற்கு பின்பு சாபநிவர்த்தியை முழுமையாக அடையப் பெறுவீர்கள்.
உதயத்திற்கு உள் மற்றும் வெளிக்கட்ட குருவின் பார்வை இருப்பதால் நீங்கள் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும். வாழ்த்துக்கள்.
ஜாமக்கோள் பிரசன்னம் மற்றும் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138
https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
https://t.me/Astrologytamiltricks
https://www.facebook.com/groups/3741
தெளிவான விளக்கம் சார்..அருமை
பதிலளிநீக்கு