தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் உச்சம் பெறுவது நல்லதல்ல ஏனெனில் அவர் நான்காம் இடத்தில் திக்பலமும் பெற்று மேற்கண்ட நிலையில் அதீத சுபத்துவம் அடைவதால் ஜட காரகத்துவ ரீதியாக ( சுப கடன் அதனால் நல்ல வீடு, வாகனம்) நல்ல பலன்கள் இருந்தாலும் சுக்கிரனுடைய உயிர் காரகத்துவம் சார்ந்த வாழ்க்கை துணை சார்ந்த விஷயங்களில் பாதிப்புகள் இருக்கும். சில நிலைகளில் எதிர்பாலின ஈர்ப்பே இல்லாதிருக்கலாம். இலக்னாதிபதியும் கெட்டிருக்க கூடிய பட்சத்தில் திருமணமே இல்லை.மேற்கண்ட நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன், இயற்கை பாபர்களான சனி அல்லது செவ்வாயின் பார்வையில் இருப்பது அல்லது கேதுவுடன் இணைந்திருப்பது நல்லதாகும். பொதுவாகவே அதிக சுபத்துவம் பெற்ற கிரகங்கள் ஏதேனும் ஒரு வகையில் பங்கத்தை அடைந்திருப்பது நல்லது.#Iniyavan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக