ஜோதிட ரீதியாக செவ்வாய் என்றாலே வேகம், துணிவு, எல்லாவற்றிலும் அவசரம். எந்த ஒரு விஷயமும் உடனடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது என்றால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெற்று இலக்னம், இலக்னாதிபதி, இராசி இவற்றுடன் தொடர்பில் இருப்பார். #Iniyavan
சுய ஜாதகத்தில் செவ்வாய் எந்த பாவகத்தில் இருக்கின்றாரோ அல்லது எந்த கிரகத்துடன் இருக்கின்றாரோ அந்த பாவகம் அல்லது அந்த கிரகம் குறிக்கக்கூடிய விஷயங்களில் ஜாதகர் தன்னுடைய அவசரத் தன்மையை வெளிப்படுத்துவார்.
உதாரணத்திற்கு சுக்கிரனுடன் செவ்வாய் இணைந்திருக்கும் பொழுது சுகபோக விஷயங்களில் அதீத நாட்டம்,சிற்றின்ப விஷயங்களில் அதிக வேட்கை, கட்டுப்பாடின்மை, பொழுதுபோக்கு, திரைப்படம், உல்லாச விஷயங்கள் போன்றவற்றை உடனடியாக அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பார்.#IK_Astro_Services
உதாரணத்திற்கு செவ்வாய் 6 மற்றும் 10 ஆம் பாவகங்கள் அல்லது அந்த அதிபதிகளுடன் இணைந்திருக்கக்கூடிய பட்சத்தில் தொழில், வேலை போன்றவற்றில் ஜாதகர் அதிக ஈடுபாடு உடையவராக, எந்த ஒரு வேலையும் உடனடியாக முடித்து விடுபவராக, வேலையை தள்ளி போடாத சுபாவம் உடையவராக இருப்பார்.
செவ்வாய் ஒரு பாவகத்தை பார்க்கும்போது அந்த பாவகம் குறிக்கக்கூடிய விஷயங்களிலும், ஒரு கிரகத்தை பார்க்கும் பொழுது அந்த கிரகம் குறிக்கக்கூடிய விஷயங்களிலும் ஜாதகர் தன்னுடைய அவசரத் தன்மையை வெளிப்படுத்துவார். மேற்கண்ட விஷயங்களை உடனடியாக அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பார்.
செவ்வாய் என்றால் வேகம்.
வாகனங்களில் மிக வேகமாக செல்பவர்கள் இவர்களே,
அதிக வேகம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளால் நிறைய காயங்கள், தழும்புகள் போன்றவற்றை பெற்றிருப்பார்கள்.
செவ்வாய் என்றால் வைராக்கியம்.. வலுப்பெற்ற செவ்வாய் இலக்னம், இலக்னாதிபதி, இராசி இவற்றுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பட்சத்தில் ஜாதகர் வைராக்கியம் நிறைந்தவராக இருப்பார்.
நெருங்கிய உறவுகளாயினும் எவரிடமேனும் சண்டை அல்லது வாக்குவாதங்கள் ஏற்பட்டால் தானாக சென்று பேசவே மாட்டார்கள். (ரோசம் மிக்கவர்கள்) அவர்கள் எவராயினும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் அவராகவே வந்து பேசட்டும் என்று நினைப்பார்கள். (இவர்கள் மேல் தவறு இருந்தார்கள் கூட)#IK_Astro_Services
செவ்வாய் என்றால் துணிவு..
செவ்வாய் என்றால் வேகத்தை மட்டும் தருபவர் அல்ல, தைரியத்தை தருபவரும் அவரே. வலுப்பெற்ற செவ்வாய் இலக்னம், இலக்னாதிபதி, இராசி இவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பட்சத்தில் ஜாதகர் தைரியம் நிறைந்தவராக இருப்பார்.எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முன் நின்று செயல்படுபவராக இருப்பார்.சண்டைக்கு முதலில் வரும் வீரர்கள் இவர்கள். கோபத்தில் கை நீட்டும் குணம் கொண்டவர்கள்.
எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் உங்களால் ஒரு பிரச்சனையை சமாளிக்க முடிகிறது? பிறருடைய ஆதரவின்றி உங்களால் ஒரு காரியத்தை நிறைவேற்ற முடிகிறது என்றால் உங்கள் சுய ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருக்கின்றார் என்று அர்த்தம்.
சுய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்கள் பிறருக்கு, தான் பக்கபலமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். செவ்வாய் பலம் இழந்தவர்கள் தனக்கு பிறர் பக்கபலமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தன்னை பலவீனமாக உணரக்கூடிய தன்மைகள் இவர்களுக்கு உண்டு.
செவ்வாய் வலுப்பெற்று இலக்னம், இலக்னாதிபதி, இராசி இவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பட்சத்திலும், செவ்வாய் சுப கிரகங்களின் தொடர்பினில் பட்சத்தில் ஜாதகர் தன்னுடைய உடல்நிலை சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை உடையவராக இருப்பார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் பிட்னஸ், உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவார்.
சுய ஜாதகத்தில் செவ்வாய் நிலை சரி இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் பெரிய அளவிற்கான அக்கறை இருப்பதில்லை.
செவ்வாய் வலுப்பெற்று இலக்னம், இலக்னாதிபதி, இராசியுடன் தொடர்பு கொள்ள பட்சத்தில் பந்தபாசம் மிக்கவர்களாக இருந்தாலும், அன்பினை வெளிப்படுத்தத் தெரியாது. தன்னுடைய முரட்டுத்தனமான சுபாவத்தால் அவ்வப்போது குடும்ப உறுப்பினர்களின் எரிச்சலை சம்பாதித்துக்கொள்வார்கள். ஆனால் அதற்காக வருத்தப்படவும் மாட்டார்கள்.
முன் யோசனையின்றி ஒரு விஷயத்தை செய்துவிட்டு பின்னர் வருத்தப்படக்கூடிய குணமும் செவ்வாய் வலுப்பெற்றவர்களிடத்தில் இயல்பாகவே இருக்கும்.இப்படிப்பட்ட நிலையில் சுபர் தொடர்பு செவ்வாய் இருக்கும் பட்சத்தில் வேகம் இருந்தாலும் தேவையான நிதான குணமும் கலந்திருக்கும்.#IK_Astro_Services
எல்லா விஷயங்களிலும், தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வாழ்க்கை துணை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
பெண்களை எனும் பட்சத்தில் தனது கணவர் தன்னை மதிக்க வேண்டும், தனக்கான அங்கீகாரத்தை தர வேண்டும்.
எல்லா விஷயங்களிலும் கணவர் தன்னை முதன்மை படுத்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவராக இருப்பார்கள்
கணவருக்கு தொழில் நிலைகள், வருமான விஷயங்கள் சரியில்லை என்றால் கூட தான் முன் நின்று எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.(மேஷ ராசியில் உள்ள பெண்களை திருமணம் செய்து இருப்பவர்கள் இதை உணர முடியும்)
செவ்வாய் ஆறு மற்றும் பத்தாம் பாவக தொடர்பு..
செவ்வாய் நெருப்பிற்கு காரக கிரகம் என்பதால் நெருப்பு சார்ந்த தொழில்கள் சமையல், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், மின்சாரம் தொடர்புடைய தொழில்கள் அமையக்கூடும். செவ்வாய் நிலத்திற்கு காரக கிரகம் என்பதால் விவசாயம், நிலம் சார்ந்த தொழில்கள், இதோடு கட்டுமானம் சார்ந்த தொழில்கள் அமையலாம். செவ்வாய் பிறருக்கு பாதுகாப்பு உணர்வினை தரக்கூடிய கிரகம் என்பதால் பாதுகாப்பு சார்ந்த தொழில்களான காவல்துறை, ராணுவம், மருத்துவம்(உயிரினை பாதுகாப்பது) நிர்வாகத்துறை, uniform services போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பமிருக்கும்.
செவ்வாய் நிலத்திற்கும் காரகம் என்பதால் நிலத்தை நிர்வாகம் செய்பவர்களான அரசியல் சார்ந்த துறைகளிலும் இவர்களுக்கு விருப்பம் உண்டு.
சுய ஜாதகத்தில் செவ்வாய் நேரடி வலுப்பெற்று எவ்வித சுபர் தொடர்புமின்றி இலக்னம், இலக்னாதிபதி, இராசியுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பட்சத்தில் ஒரு சில தீய குணங்களும் இவர்களுக்கு இருக்கும்.
முன்கோபிகள்,எந்த ஒரு விஷயத்திற்கும் உடனே கோபம் கொள்வது, அவசரப்படுவது, Over Ego, Straight forward வளைந்து செல்லும் தன்மையே இவர்களிடத்த்தில் இல்லை, நாம் ஏன் வளைந்து போக வேண்டும்? நாம் என்ன தவறு செய்தோம் என்ற எண்ணம் உடையவர்கள். அவசரப்பட்டு ஒரு விஷயத்தை செய்து விடுவார்கள், ஒரு விஷயத்தினை செய்தால், அல்லது யாரையாவது எதிர்த்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் யாவை? என யோசிக்காமல் செயல்படும் தன்மை இவர்களுக்கு இருக்கும். இது போன்ற விஷயங்களில் சற்று தன்னை நிதானித்துக் கொள்வது நல்லது.
தன்னுடைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது மிக அவசியம். தேவை இல்லாமல் அதட்டிப் பேசுவது, தான் சொல்வது தான் சரி என்று பிடிவாதம் பிடிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.#Iniyavan
முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்தினை நல்கும். துர்க்கை அன்னையினையும் வழிபட்டு வரலாம்.
சஷ்டி விரதம் சிறப்பு தரும்.அனுதினமும் கந்த சஷ்டி கவசம் அல்லது கந்த குரு கவசம் போன்றவற்றை பாரயாணம் செய்யும் பட்சத்தில் இவர்களுக்கு தேவையான நிதானத்தை, தேவைப்படும் நேரத்தில் முருகப்பெருமான் தந்தருள்வதோடு முன்னேற்றத்தினையும் நல்குவார்.#IK_Astro_Services
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ
https://t.me/Astrologytamiltricks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக