சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் பாவக அதிபதி நல்ல நிலையில் இருப்பது, ஐந்தாம் பாவகத்தோடு தொடர்பு கொண்ட கிரகங்கள் சுபகிரங்களாக இருக்கக்கூடிய பட்சத்தில் ஒருவர் ஒரு விஷயத்திற்காக திட்டமிட்டு திட்டத்தின் படியே செயலாற்றி வெற்றி பெறுவார். #Iniyavan
எல்லோரிடத்திலும் திட்டமிட்டு செய்யக்கூடிய குணம் இருக்காது .ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும்போது மட்டுமே ஒருவர் திட்டமிட்டு செயலாற்றக்கூடிய மனதினை இயல்பாக கொண்டிருப்பார்.
மனதளவில் ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து, அதனைப் பின்பற்றி செயலாற்றுவது ஐந்தாம் பாவகத்தின் நிலையைப் பொருத்தது ஆகும்.
மனதளவில் எந்த ஒரு விஷயத்திற்கும் நீங்கள் தயாராக இருந்தால்தான் அதற்கான திட்டத்தினை மேற்கொள்வீர்கள். திட்டத்தின் படி செயலாற்றுவீர்கள். ஐந்தாம் பாவகம் ஆழ்மனதைக் குறிக்கும்.
ஒவ்வொரு நாள் காலையிலும், அல்லது ஒவ்வொரு நாளின் இரவிலோ மறுநாளுக்கான முக்கியமான செயல்கள் என்னவெஎன்று பட்டியலிட்டு அதன்படி மேற்கொள்பவர்களுக்கு ஐந்தாம் பாவகம் நிச்சயம் வலுப்பெற்று இருக்கும்.
ஐந்தாம் அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுதும் அல்லது ஐந்தாம் பாவகம் பாபர்கள் தொடர்பு பெற்று இருக்கும்போது குற்றச் செயல்களை செய்வதற்கு ஜாதகர் அஞ்சமாட்டார்.
சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும்போது ஒருவருக்கு இழிவான செயல்களை செய்வதற்கு பயப்படுவார்.தெரிந்தோ தெரியாமலோ, ஒரு குற்றச் செயலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அவருடைய மனசாட்சி இது தவறு, இதனால் உனக்கு பாதிப்பு வரும் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கும்.#Iniyavan
ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும் போது ஜாதகர் தன்னுடைய பெயருக்கோ புகழுக்கோ எவ்வித பங்கமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு மனம் இயல்பாகவே தெளிவானதாக, தூய்மையாக இருக்கும். மனம் தெளிவடைந்து விட்டாலே எந்த விஷயத்திலும் பெரிய பிரச்சனை யாருக்கும் ஏற்படப் போவதில்லை.
ஐந்தாம் இடம் பாபர்களின் தொடர்பினை பெற்று, ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும் போது ஜாதகர் தவறான வழியில் சென்றாலும், பின்பு அதனால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து தன்னைத்தானே சீர் செய்து சரி செய்து கொள்வார்.
ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி மற்றும் மனோக்காரகனான சந்திரன் முற்றிலுமாக பலமிழந்து இருக்கும்போது மட்டுமே ஒருவர் படுபாதக குற்றச்செயல்களில் ஈடுபட முடியும்.இலக்னத்திற்கு கிடைத்துள்ள சுபர் தொடர்பு, இலக்னாதிபதியின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.#Iniyavan
இயற்கை பாபகிரகங்கள் ஐந்தாம் வீட்டு அதிபதியாகி ஆட்சி பெரும் பொழுது அவர்கள் சுபர்களின் தொடர்பினை பெற்றிருப்பது நல்லது. மேற்கொண்டு மற்றொரு பாபர் தொடர்பினை பெறாது இருப்பது நல்லது.
ஐந்தாம் பாவகம் சரி இல்லாத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
எண்ணங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.ஏனெனில் எண்ணங்கள்தான் செயல்களாகின்றன. ஒருவர் செய்வது சரியோ, தவறோ அவருடைய எண்ணங்களை பொறுத்தே அவை செயல்களாகின்றன.இதை உணர்ந்தே முன்னோர் "எண்ணம் போல் வாழ்வு" என்பதை வகுத்துள்ளனர்.
தன்னுடைய எண்ணங்களை செய்து சரி செய்து கொள்ள அனுதினமும் குலதெய்வ வழிபாட்டையோ அல்லது இஷ்ட தெய்வ வழிபாட்டையோ கடைபிடிப்பது அவசியம்.#Iniyavan
பிறருக்கு உதவுதல், தர்ம செயல்களில் ஈடுபடுதல் போன்றவை மனதை தூய்மையாக்கும். இதன் மூலம் நல்ல குணங்களும், நற்பயன்களும் மனதில் உதயமாகும்.எகாதசி, பவுர்ணமி போன்ற நாட்களில் விரதம் இருந்து இறைவனைத் தியானிப்பது மனதின் தூய்மைக்கு உதவும்.நேர்மறை சிந்தனை வளர்க்கக்கூடிய புத்தகங்களை படித்தல்,நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடத்தில் நட்பினை உருவாக்கிக் கொள்ளுதல், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மேற்கொள்ளக்கூடிய நல்ல ஆன்மீக உரைகளை அவ்வப்போது கேட்டு வருதல் போன்றவை நலம் தரும்.இதுவரை மனதளவில் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்ற செயல்களை உணர்ந்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருதல் போன்றவை மனதை தூய்மையாக வைத்திருக்க உதவும்.மனம் தெளிவடைந்து விட்டாலே தெளிவான திட்டங்கள் தோன்றுவிடும். திட்டங்கள் படி செயலாற்றினால் ஒரு கட்டத்தில் வெற்றி நிச்சயம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ
https://t.me/Astrologytamiltricks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக