சனி, 21 ஜூன், 2025

லக்னாதிபதி நின்ற பாவகமும் உங்கள் வாழ்க்கையின் நோக்கமும்...



ஜோதிடத்தில், வாழ்க்கையின் ஆழமான பாதையைக் கூர்ந்து புரிந்து கொள்ள ஒரு முக்கியமான வழி, உங்கள்  அதிபதியான லக்னாதிபதியின் (Lagna Lord)  நிலையை கவனிப்பதாகும். இது உங்கள் ஆளுமையை வடிவமைக்கும் முக்கிய கிரகமாக இருக்கும், மேலும் உங்கள் ஆன்மா எதை நோக்கி இயற்கையாக ஈர்க்கப்படும் திசையை இது சரி படிக்கின்றது. இந்த லக்னாதிபதி எந்தத் திரிகோணத்தில் (Trikona)—தர்ம, அர்த்த, காம, அல்லது மோட்ச—நிலைகொண்டிருக்கிறதோ, அதன் அடிப்படையில் உங்கள் வாழ்க்கை நோக்கம் பல்வேறு விதமான சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கும்.#Iniyavan

தர்ம திரிகோணத்தில் இலக்னாதிபதி (1, 5, 9 வீடுகள்)

இந்த திரிகோணம் ஆன்மிக நோக்கம், தர்மம் மற்றும் கல்வியை பிரதிபலிக்கிறது.

1 ஆம் வீடு: நீங்கள் உங்கள் உண்மையான சுயத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். நீங்கள் பிறருக்கு வழிகாட்டி, ஆற்றல் மிகுந்தவர். மற்றவர்தளுடைய கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படுவது இவர்களுக்கு இயல்பான குணமாக இருக்கும். எல்லா வீடு சவால்களையும் எதிர் நோக்க கூடிய  தைரியத்தை பெற்றிருப்பார்கள்

5 ஆம் வீடு: கல்வி, குழந்தைகள், கலை மற்றும் படைப்பாற்றலுடன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை. உங்களுக்கான ஆனந்தம் கல்வியிலும் படைப்பாற்றலிலும் இருக்கும். பெரும்பாலும் லக்னாதிபதி இங்கே இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடிய குணம் அதிகம் இருக்கும். இரக்க மனப்பான்மை கொண்டவர்களாக பிறர் துன்பத்தை அனுபவிக்கும் பொழுது அதில் தன்னை பொருத்தி பார்த்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

9 ஆம் வீடு: ஆன்மிகம், உயர்ந்த ஞானம், நீண்ட பயணங்களில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கலாம். இயல்பிலேயே இறை பக்தியில் நாட்டம் இருக்கும்.குருமார்களின் ஆசிர்வாதம் பெற்றவர்கள், மெய் ஞான தத்துவங்கள் மற்றும் விசாலமான பார்வை, பெருந்தன்மையான குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். தந்தைக்காக சில தியாகங்களைச் செய்பவர்களாக இருக்கலாம்.தான தர்மங்களில் மிக விருப்பம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். தன்னலமின்றி பிறருடைய நலத்திற்காகவும் மனிதன் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாக பெற்று இருப்பார்கள்.#Iniyavan

அர்த்த திரிகோணத்தில் லக்னாதிபதி (2, 6, 10 வீடுகள்)

இவை பொருளாதார நிலைத்தன்மை, சேவை மற்றும் தனிப்பட்ட திறன்களுடன்  தொடர்புடையவை.

2 ஆம் வீடு: குடும்பம், செல்வம், பேச்சுத்திறன், மற்றும் மதிப்பீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிலையை அடைந்தாக வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடத்தில் பிரதானமாக இருக்கும்.

6 ஆம் வீடு: சவால்கள், எதிரிகள், போட்டிகள், சேவை. வாழ்க்கையின் நோக்கம் கடுமையான முயற்சியில் இருக்கலாம். பல சவால்களைப் கடந்து வாழ்க்கையில் முன்னேறக்கூடிய குணத்தை இயல்பாக பெற்று இருப்பார்கள். பெரும்பாலும் போராட்டமான சவால்கள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். போராடியே எதையும் பெற்றாக வேண்டும் என்ற கடினமான மனோபாவத்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.

10 ஆம் வீடு: தொழில், புகழ், பொது வாழ்க்கையில் விருப்பம், நீங்கள் சமூகத்திற்காக செயல்பட வேண்டும்.
தொழிலில் உயர்நிலையை அடைய வேண்டும் எனும் ஆளுமைத் திறன் உடையவர்களாக இருப்பார்கள்

காம திரிகோணத்தில் லக்னாதிபதி (3, 7, 11 வீடுகள்)

இவை ஆசைகள், உறவுகள் மற்றும் சமூக உறவுகளை பிரதிபலிக்கின்றன. ஜாதகரின் உடைய தனிப்பட்ட விருப்பங்களை இங்கு பிரதானமாக இருக்கும்

3 ஆம் வீடு: தைரியம், தொடர்புகள், கலைகள் சார்ந்த  தொழில் முயற்சிகள். சுய முயற்சியில் எதையும் பெற்றாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கக்கூடும்.

7 ஆம் வீடு: வாழ்க்கைத் துணை, கூட்டாளிகள், மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல், உறவுகள் மூலம் வளர்ச்சி. யாரையாவது சார்ந்து வாழுதல்..

11 ஆம் வீடு: நண்பர்கள், லாபங்கள், குழு உழைப்பு, தன்னுடைய அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வதே இவர்களுடைய முக்கிய வேலையாக இருக்கும்.#Iniyavan

உலகத்தில் கிடைக்கக்கூடிய எல்லாவிதமான சந்தோசங்களையும் அனுபவித்தாக வேண்டும் என்ற மனோபாவங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் எனும் மனநிலையே இவர்களுக்கு பிரதானமாக இருக்கும். வாழ்க்கைத் துணை மீது அதிக விருப்பம் மற்றும் எதிர்பார்புகள், பொழுதுபோக்கு மற்றும்உல்லாச விஷயங்களில் மற்றவர்களுடன் கூடுதல் இருக்கும் போது கொண்டவர்களாக இருப்பார்கள்.எல்லா விஷயங்களிலுமா தன்னுடைய லாபம், தன்னுடைய இன்பமே பிரதானம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். #Iniyavan 

மோட்ச திரிகோணத்தில் லக்னாதிபதி (4, 8, 12 வீடுகள்)

இவை ஆன்மிக வளர்ச்சி, உள்நோக்கு மற்றும் விடுதலைக்கான தேடல். முக்தியை நோக்கிய பாதை..

4 ஆம் வீடு: பாதுகாப்புணர்வு முக்கியம், எல்லா விஷயங்களும் தனக்கான மன அமைதி கெடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அன்னை மற்றும் குடும்பத்திற்காக வாழுதல்.. 

8 ஆம் வீடு: நிறைய மாற்றங்கள், மறைபொருள் விஷயங்களில் அதிக நாட்டம், நிறைய தடை தாமதங்களை சந்தித்தல், தனித்துவமான சிந்தனை திறன் கொண்டவர்களாக இருக்கலாம்..

12 ஆம் வீடு: தனிமை, துறவு, வெளிநாட்டு அனுபவங்கள், ஆன்மிக பயணம். போக விஷயங்களில் மற்றவர்களை விட சற்று கூடுதலான நாட்டம், பிறந்த இடத்தை தவிர்த்து வெளி தேசங்களுக்கு சென்று பொருளீட்டுவதில் ஆர்வம் அங்கே நிரந்தரமாக வசிப்பிடத்தை அமைத்துக் கொள்ளுதல்.

திரிகோணங்களின் செயல்பாடுகள்

பலவித கிரக நிலைகள் ஒரே நேரத்தில் பல திரிகோணங்களை செயல்படுத்தலாம். உதாரணமாக, லக்னாதிபதி 3ஆம் வீட்டில் இருந்தாலும், பல கிரகங்கள் 5 ஆம் வீட்டில் இருந்தால், தர்ம திரிகோணத்தில் லக்னாதிபதி நின்ற பலனும் உங்களுக்கு பொருந்தக்கூடும். அதுமட்டுமின்றி லக்னாதிபதி எந்த திரிகோண அதிபதியுடன் இணைந்துள்ளாரோ லக்னாதிபதியை எந்த திரிகோண அதிபதிகள் பார்க்கின்றார்களோ அதற்குரிய குணத்தையும் ஜாதகர் இயல்பாகவே பெற்றிருப்பார்.
உங்கள் லக்ன அதிபதி எந்த வீட்டில் இருக்கிறான் என்பதை ஆராய்வது, உங்கள் வாழ்க்கையின் சுயநிலை நோக்கத்தை அறிந்து கொள்ள உதவும். இது உங்கள் வாழ்க்கையை பெரியளவிலான எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் இன்றி உங்களுக்கான வாழ்வினை தெளிவாகவும், சீராகவும் வழிநடத்த உதவும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக