சுப கிரகங்கள் மறைந்தால் அதாவது லக்னத்திற்கு மறைவு ஸ்தான வீடுகளில் நின்றால் பார்வை பலம் குறையுமா என்று கேட்டால் கிடையாது. பார்வை பலம் கண்டிப்பாக இருக்கும். ஒரு கிரகத்தின் பார்வை பலம் என்பது எதனைப் பொருத்து அமையும் என்றால் அந்த கிரகத்தின் ஸ்தான பலத்தை பொறுத்துதான் அமையும். அதாவது அக்கிரகம் உச்சமா? ஆட்சியா? மூலத்திரிகோண வீட்டில் உள்ளதா? நட்பு வீடா? பகை வீடா? நீசநிலையா? என்பதை பொறுத்தது அதாவது மேற்கண்ட நிலைகளில் கிரகம் எந்த அளவிற்கு வலுவான அளவில் ஸ்தான பலத்தை பெற்றுள்ளதோ அதற்கு ஏற்ப பார்வை பலம் இருக்கும் என்பதே நிதர்சனம். #Iniyavan
மறைவு ஸ்தானத்தில் நின்று விடுவதால் ஒரு இயற்கை சுப கிரகத்தின் பார்வை பலம் குறைந்து என எடுப்பது தவறான கருத்தாகும்.
உதாரணமாக சிம்ம லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு குரு 12 இல், கடகத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் போது, அவருக்கு பார்வை பலம் இல்லை என எடுப்பது தவறான கருத்து.இங்கே குரு ஸ்தான பல அடிப்படையில் உச்சம் பெற்ற நிலையில் இருப்பதால், பார்வை பலம் இயல்பை விட அதிகமாக இருக்கும்.
இதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்றால் அவர் பார்வை படக்கூடிய பாவகங்கள் அல்லது பார்வை பெறக்கூடிய கிரகங்கள் வாயிலாக ஜாதகர் பலன்களை அனுபவிப்பார்.
4 ஆம் பாவகத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் நான்காம் இடம் குறிக்கும் விஷயங்களான நிலம், வீடு, வாகனம், கல்வி, தாயார் ஆதரவு போன்றவற்றில் நல்ல பலன்களை பெறுவார்.
ஆறாம் பாவகத்திற்கு குரு பார்வை இருப்பதால் அடிமை உத்யோகம், குருவின் காரகத்துவம் சார்ந்த துறைகளான ஆசிரியர், வங்கித்துறை, பணம் சார்ந்த துறைகள், தங்கம் போன்ற அணிகலன்கள் சார்ந்த துறைகளில் இருக்க வாய்ப்புண்டு.
சுப கடன்கள், லக்னாதிபதி வலுவிற்கு ஏற்ப நோய் தொந்தரவு போன்ற பலன்கள் உண்டு. எட்டாம் பாவகத்திற்கு குரு பார்வை இருப்பதால் ஆயுள் பலம், தீடிர் அதிர்ஷ்டம், வெளி தேசங்களில் வசிப்பதற்கான சூழல் போன்ற பலன்களைத் தருவார்.#Iniyavan
எப்போது பார்வை பலம் குறையும்?
சனி,ராகு போன்ற பாபர்களுடன் மிக நெருங்கிய நிலையில் இருப்பது, சனி மற்றும் ராகு இணைந்துள்ள நிலையில் சனியின் பார்வையில் சுப கிரகங்கள் உள்ள போதும், ஆட்சி, உச்சம் பெற்று எவ்வித சுபர் தொடர்பும் இல்லாத நிலையில் சனியின் பார்வையில் சுப கிரகம் இருக்கும் போதும்,
சனி, செவ்வாய் இணைந்துள்ள நிலையில் சனி, செவ்வாயின் பார்வையில் சுப கிரகம் இருக்கும் போதும் சுப கிரகத்தின் பார்வை பலம் குறையும். சூரியனுடன் ஒரிரு டிகிரியில் மிக நெருங்கி அஸ்தமானமான நிலையில் சுப கிரகம் இருக்கும் போது பார்வை பலம் குறையும்.
இப்படிப்பட்ட நிலைகளில் சுப கிரகங்கள் இருக்கும் போது மட்டுமே பார்வை பலம் குறையும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
https://t.me/Astrologytamiltricks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக