கடக லக்ன அன்பர்கள் மற்றவர்களிடத்தில் அதிக அன்பு மிகுந்தவர்கள்.
அதே நேரத்தில் அன்பிற்காக ஏங்குபவர்கள்.நிமிடத்திற்கு ஒரு புத்தி,நிமிடத்திற்கு ஒரு சிந்தனை என்பதற்கேற்ப நிலையில்லாத மனநிலைக்கு சொந்தக்காரர்கள்.எண்ணிலடங்கா கற்பனை ஆற்றல்களுக்கு சொந்தக்காரர்.கடந்த காலத்தில் வாழ்பவர்கள்.அதே நேரத்தில் எதிர்கால வாழ்க்கையை நினைத்து கற்பனை கோட்டை கட்டுபவர்களும் கூட.கற்பனை உலகில் மெய்மறந்து போகக் கூடியவர்கள்.மற்றவர்களுக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யக் கூடியவர்கள்.தன்மானம் மிக்க தலைவராக வரும் தகுதி படைத்தவர்கள், மனிதநேயம் மிக்க மாண்பாளர்கள்.தாராள மனம் கொண்டவர்கள் அதே நேரத்தில் மிகவும் சிக்கனமாகவும் செயல்படக்கூடியவர்கள்.தன்னுடைய தனித்தன்மையும் அறிவாற்றலையும் நினைத்து கர்வம் கொள்பவர்கள்.
இயல்பிலேயே தாயின் மீது அளப்பரிய அன்பும் பாசமும் உடையவர்கள் தாயின் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள்.
தந்தை மற்றும் முன்னோர்களின் சொத்துக்கு உரியவர் ஆவார்.
இவர்களின் இரண்டாம் அதிபதி சூரியன். பேச்சில் கர்வம் அதிகம் நிறைந்திருக்கும்.
மனதில் பட்டதை பேசும் தைரியம் உடையவர்கள்.வாக்கின் மூலம் பெறும் வளம் பெரும் வாய்ப்பும் உண்டு.பேச்சில் கவனம், நாவடக்கம் மேன்மை தரும்.
இவர்களின் மூன்றாம் அதிபதி புதன்,எழுத்தாற்றல் மிக்கவர், தகவல் தொடர்பில் சிறந்து விளங்குபவர்கள், புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் அதீத ஆர்வம் உடையவர்கள், அதில் தன்னையே மறப்பவர்கள்.
4-ஆம் இடத்திற்கு சுக்கிரன் அதிபதியாவதால் ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகம் உடையவர்.இவர்களின் ஐந்தாம் வீடு செவ்வாய். ஐந்தில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். அதே நேரத்தில் லக்னாதிபதி 5-ம் இடத்தில் நீசமும் அடைகின்றார்.
பிடிவாத சுபாவம் அதிகம் உள்ள குழந்தைகளை கொண்டவர்.
ஆறாம் அதிபதி குரு இவர்களின் எதிரிகள் இவர்களைவிட வல்லமை படைத்தவர்கள், இருப்பினும் இவர்கள் எதிரிகளை வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள்.
ஒன்பதாம் அதிபதியே ஆறாம் அதிபதியாவதால் தந்தை வழி உறவினர்கள் இடத்தில் விரோதத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். சில சமயம் தந்தையையே எதிர்க்க வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். அனுசரித்து செல்லல் மேன்மை..
இவர்களுக்கு ஏழாம் அதிபதி சனியாவதால் தாமத திருமணம் இவர்களுக்கு மேன்மையை நல்கும்.
இவர்களின் குணங்களுக்கு நேர்மாறான துணை அமையும்.ஏழாம் அதிபதி 10இல் நீசமடைவதால் மனைவிவழி உறவினர்கள் மூலம் ஜாதகரின் தொழிலுக்கு தொல்லைகள் உண்டாகலாம்.
கூட்டுத் தொழில் மேன்மை தருவதில்லை,
7-க்குடையவர் 10-ல் நீசமடைவதால் தொழிலில் நண்பர்களால் நன்மை கிடையாது.
எட்டாம் அதிபதியும் சனி என்பதால் தொழில் பொதுஜன தொடர்புகளில் அவ்வப்போது இடையூறுகள் , கடன் தொல்லை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்.
ஒன்பதாம் இடம் குருவாவதால் தர்ம குணம், ஆன்மீக எண்ணங்கள், செயல்பாடுகளில் அதிக விருப்பம் உடைய தந்தை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மேலும் ஜாதகர் தர்ம ஸ்தாபனங்கள் வைத்து நடத்துவதற்கு வாய்ப்புகள்,
புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பத்தாம் அதிபதி செவ்வாய் என்பதால் உயர் பதவிக்கான வாய்ப்புகள்,பெயர்,புகழ் ஆகியவற்றை தரும் பணியில் அமர்தல் ,அரசியல்,மருத்துவம் சட்டம், நிர்வாகம், காவல் சம்பந்தப்பட்ட துறைகள் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பத்தாமிடத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் அரசியல் சார்ந்த விஷயங்களில் அதிக செல்வாக்கு உடையவர். அரசியலில் மேன்மையான பதவிகளை வகிப்பவர். பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அக்கறையுடன் செயலாற்றுபவர்.
தொழில் ஸ்தானத்தில் இரண்டாம் அதிபதி உச்சம் பெறுவதால் தந்தை மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்,தொழில் மூலம் ஜாதகர் பெரும் பொருளீட்டும் திறன் பெற்றவர் ஆவார்.
இவர்களின் பதினொன்றாம் இடம் சுக்கிரனின் வீடாவதால் அபிலாஷைகள் பூர்த்தியாகும்.
குருவின் பன்னிரெண்டாம் இடமாக புதன் வருவதால் அறிவு சார்ந்த விஷயங்களான புத்தகங்கள், ஜோதிடம், கணிதம், அறிவியல் தகவல் தொழில் நுட்ப பொருட்களுக்காக அதிகம் செலவிடுபவராக இருப்பார்.
12ஆம் வீட்டிற்கு உரியவர் புதனாவதால் ஆழ்ந்த நித்திரைக்கு சொந்தக்காரர்கள்.
சந்திரன்,சூரியன், குரு, செவ்வாய் திசைகள் இவர்களுக்கு மேன்மையைத் தரும்.இவர்களின் சாரம் பெற்றவர்களும் நன்மை செய்வார்கள்.
சனி, புதன்,சுக்கிரன் திசைகள் இவர்களுக்கு பெரும்பாலும் நன்மை தருவதில்லை. சாரத்தை பொறுத்து நன்மைகள் நடைபெறலாம்.
இவர்களுக்கு செவ்வாய் பலம் பெறல் அவசியம் மற்றும் மேன்மையாகும்
மகா ஞானி புத்தர், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி தமிழகத்தின் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர் ,கலைஞர் இவர்களெல்லாம் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும்.சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன்.MA.B.ED
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக