புதன், 23 டிசம்பர், 2020

சிம்ம இலக்னத்தில் பிறந்தவரின் குணங்கள்

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சூழலிலும் மன உறுதியை இழக்காதவர்கள்.இறுதிவரை போராடி எந்த ஒரு முடிவையும் மற்றும் மனப் பக்குவம் உடையவர்கள்.

தங்களுடைய விருப்பங்களையும் இலக்குகளையும் லட்சியங்களையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாதவர்கள்.

தயக்கம் இல்லாத தலைமைத்துவம் பெற்றவர்கள்.முன் கோபமும் பிடிவாதமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்.
எந்த ஒரு சூழலிலும் விளைவுகளைப் பற்றி அஞ்சாது செயல்படுபவர்கள்.
தன்னை நாடி அடைக்கலம் தேடி வந்தவர்களை அரவணைத்து காப்பவர்,அதே நேரத்தில் தன் எதிரிகளை துவம்சம் செய்பவர்கள்.கொண்ட கொள்கையில் இறுதிவரை கடமை உணர்வோடு திகழ்பவர்கள்.எடுத்துக்கொண்ட வேலைகளில் இறுதிவரை நேர்மையை பின்பற்றுபவர்கள்.இவர்களின் வரையறையில் நேர்மை என்பதன் பொருள் வேறு.
பொழுதுபோக்குகளில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதவர். அவற்றை அலட்சியப்படுத்தும் மனப்பான்மை உடையவர்.
எவரிடத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அடிபணிவதில் விருப்பம் இல்லாதவர். தமக்கே மற்றவர் அடிபணிந்தாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.
இவரின் இரண்டாவது வீடாக வருவது புதன் பேச்சாற்றலும் அதிக புத்திசாலித்தனமும் ஒருங்கே பெற்றவர்,ரசிக்கக்கூடிய பேச்சாற்றல் அதே நேரத்தில் அதிகாரமும் கலந்து இருக்கும்.
இரண்டாம் அதிபதியே பதினொன்றாம் அதிபதியாக வருவதால் தன்னுடைய பேச்சை லாபமாக மாற்றுவதில் திறமை உடையவர்.
மூன்றாம் அதிபதியாக சுக்கிரன் வருவதால் தன்னுடைய சகோதரர் சகோதரிகளுடன் அதிக பாசம் உடையவர். பெரும்பாலும் அவர்களிடம் தோற்றுப் போவார் பாசத்திற்காக.

நான்காம் அதிபதியாக செவ்வாய் வருவதால் நிலபுலன்களை அதிகம் வாங்குபவராக இருப்பார்.
நான்காம் அதிபதியே ஒன்பதாம் அதிபதியாகவும் வருவதால்
தந்தை மற்றும் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார். 
இவரின் தாய் ஆதிக்கம் நிறைந்தவராகவும் அதிகாரம் மனப்பான்மை உடைய வராகவும் இருப்பார்.

இவர்களின் 5ம் அதிபதியாக குரு வருவதால் நல்ல புத்திரனை பெரும் யோகம் உடையவராக இருப்பார். பூர்வ புண்ணியங்கள் ஆகியவற்றை அதிகம் பெற்றவராக இருப்பார்.
தன்னுடைய குழந்தைகளை ஆன்மீக உணர்வுள்ள, தர்மத்தில் அதிக ஈடுபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பதில் விருப்பம் உடையவராக இருப்பார்.

இவரின் ஆறாம் அதிபதியான சனி வருவதால் பலவீனமும் சோம்பலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. அடிக்கடி வயிறு தொடர்பான பிரச்சனை, கால்வலியும் சசந்திப்பவராக இருப்பார்.
அதிக எதிரிகளை பெற்றவராகவும் இருப்பார்.
பொதுவான பிரச்சனைகளில் இவரின் ஈடுபாடு, தலையீடு இல்லாவிட்டாலும் அந்த பிரச்சனையிலும் இவர் எதிரிகளைப் பெற்று இருப்பார்.அதிக உழைப்பும் குறைந்த வருமானமும் பெற்றவர்.

ஆறாம் அதிபதியே ஏழாம் அதிபதியாகவும் வருவதால் மனைவி இவருக்கு அடங்காதவராக  இருப்பார்.
ஐந்தாம் அதிபதியான குருவே எட்டாம் அதிபதியாக வருவதால் அவ்வப்போது குழந்தைகளால் துன்பங்கள்,தொல்லைகளை அனுபவித்து வருபவராகவும் இருப்பார்.
எட்டில் குரு ஆட்சி பெறுவதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவ்வப்போது பிரச்சினைகள், இவர் மீது குற்றச்சாட்டுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

இவரின் ஒன்பதாவது வீடாக செவ்வாய் வருவதால் தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவராக இருப்பார்.தந்தையின் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டெனிலும் விரையாதிபதி சந்திரன் இங்கே இருத்தல் கூடாது.

லக்னாதிபதியான சூரியனும் செவ்வாயும் வீட்டில் உச்சம் பெறுவதால் அரசு வழியில் அனுகூலம், கெளரமான பதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பத்தாம் அதிபதி சுக்கிரனாக வருவதால் தொழிலில் அதிக ஈடுபாடு, எல்லா விஷயங்களையும் லாப நோக்கோடு அணுகுவதுது இவரின் இயல்பாக இருக்கும்.
பதினொன்றாம் அதிபதியாக புதன் வருவதால் தன்னுடைய சுய முயற்சியால் தன்னுடைய அறிவுக் கூர்மையால் புத்திசாலித்தனத்தால் தன்னுடைய பேச்சாற்றலால் தொழிலில் மேன்மை அடைவபவராக இருப்பார்.இவருடைய தாய் மாமன் வகை உறவுகளால் இவர் அதிக ஆதாயம் இருப்பவராகவும் இருப்பார்.

இவருடைய எண்ணங்கள், அபிலாசைகள் ஆகியவை விரைவில் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

அவருடைய 12ம் அதிபதியாக சந்திரன் வருவதால் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் புண்ணிய காரியங்கள் , கௌரவத்திற்காகவும் செலவுகள் இவருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
காஞ்சி மகா பெரியவர், கவியரசு கண்ணதாசன் போன்றோர் சிம்ம லக்கினக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன், குரு, புதன் மற்றும் செவ்வாய் இவர்களின் தசா புத்திகள் இவர்களுக்கு மேன்மை தரும்.இவர்களின் சாரம் பெற்ற கிரகங்களும் ஒரளவு நன்மை தரும்.

சனி மற்றும் சுக்கிரன் பெரும்பாலும் நன்மைகள் தருவதில்லை. ராகு கேதுக்கள் சிம்ம லக்கினத்திற்கு பொதுவாக சிரமம் தருபவர்கள். எனினும் லக்ன சுபர் தொடர்பு இருப்பின் தீமை செய்வது இல்லை.

இவை அனைத்தும் பொதுப் பலன்களே.
சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
நன்றி 
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன். MA.B.ED
CELL 9659653138

1 கருத்து: