ரிஷப லக்கனத்தில் அதிபதி சுக்ரன் என்பதால் இவர்கள் தனித்துவம் நிறைந்தவர்களாகவும் சிற்றின்ப பிரியர்களாக, அனைத்தையும் அனுபவித்தாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர் களாகவும், விரும்பியதை அடைய வேண்டும் என்ற எண்ணம் உடையவராகவும் இருப்பார்கள்.
பொதுவாக ரிஷப லக்கின அன்பர்கள் கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர்கள்,மற்றவர்களிடத்தில் இனிமையாகப் பழகுபவர்களாகவும்,கலை, கேளிக்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாகவும் ஏதாவது ஒரு கலையில் தேர்ந்தவர்கள் ஆகவும் ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம் உடையவர்களாகவும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைகள் இல்லாமல் நிகழ்காலத்தில் வாழுங்கள் என்ற புத்தரின் வாக்கிற்கு ஏற்ப நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
கடின உழைப்பின்றி புத்திசாலித்தனமான உழைப்பினால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.
தம்முடைய பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பிலே உடையவர்களாகவும்,பணத்தை நோக்கியே பயணப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் இரண்டாவது வீடாக வருவது மிதுனம்.. அதன் அதிபதி புதன் என்பதால் பேச்சில் நளினம் காணப்படும். பேச்சினில் சாதுர்யம் காணப்படுவதால் பேச்சிலே சாதிப்பவர்கள், புத்திசாலித்தனம்,கணிதத்தில் ஈடுபாடு..
இவர்களின் மூன்றாவது வீடாக வருவது கடகம். கடகத்தின் அதிபதி சந்திரன் அவ்வகையில் அலைபாயும் மனநிலையை உடையவர்களாக, எப்போதும் எதையாவது நினைத்து கவலைப்படுபவர்களாகவும்,தங்களது சகோதரர் சகோதரிகளிடம் அதிக பாசம் உடையவர்களாகவும்
தங்களது நட்பு வட்டாரத்தில் அவ்வப்போது அதிக ஈடுபாடும் அவ்வப்போது ஈடுபாடு இல்லாத நிலையற்ற தன்மையும் இவர்களிடத்தில் காணப்படும்.
ரிஷப லக்னத்திற்கு நான்காவது வீடு சிம்மம், சிம்மத்தின் அதிபதி சூரியன் என்பதால் இவரின் குடும்பத்தில் தாய் என்பவரே தந்தையின் ஸ்தானத்தை ஏற்று நடத்துபவராகவும் அதாவது தாய் என்பவர் ஆதிக்கம்,அதிகாரம் நிறைந்தவராக இருப்பார்.
ரிஷப லக்கனத்தில் ஐந்தாவது வீடு கன்னி.
தங்களது குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும்,குழந்தைகளிடத்தில் அதிக அன்பு பாசம் கொண்டவராக இருப்பார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போனவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களது ஆறாம் வீட்டின் அதிபதியாக வருபவர் லக்னாதிபதியான சுக்கிரனே. நினைத்த வேலையை போராடி பெரும் குணம் உடையவர்களாகவும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் உடையவர்களாகவும் அடிமைத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
ஏழாம் வீட்டின் அதிபதியாக இருப்பவர் செவ்வாய் அவ்வகையில் தன்னுடைய குணங்களுக்கு மாறுதலான துணையைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவருக்கோ பணம், பொருளாதாரம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். ஆனால் வரக்கூடிய துணைக்கோ இவரின் மீது அதிக அன்பும் பாசமும், குடும்பத்தின் மீது அக்கறையும் நிறைந்திருக்கும்.
இவர்களது எட்டாம் வீடாக வருவது குருவின் தனுசு ராசி. தங்கள் வாழ்வில் நிறைய சங்கடங்கள் எதிர்ப்புகள் தொல்லைகள், குழந்தைகளால் அவ்வப்போது இன்னல்களை அடைபவர்களாகவும் இருப்பார்கள்.
இருப்பினும் எதிர்ப்புகளையும் சமாளித்து தன்னுடைய சுய கௌரவத்தை நிலைநாட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களது ஒன்பதாம் வீடாக வருவது சனியின் மகரம்..தெய்வ அனுகூலம், தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் பொறுப்புணர்வு உள்ள தந்தையை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பத்தாமிடம் வருவது சனியின் கும்பம் அதிக உழைப்பு ஆனால் குறைந்த வருமானம் கொண்டவர்களாகவும் செய்யக்கூடிய தொழில் தன்னுடைய வருமானத்தில் மட்டுமே அதிக கவனம் அதாவது சுயநல மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பதினொன்றாம் வீடாக குருவின் மீனம் வருவதால் இவர்களின் எண்ணம் அபிலாசைகள் பூர்த்தியாகும் ஆன்மீகத்தில் நாட்டம்,ஆன்மீகத்தில் ஈடுபாடும் நிறைந்திருக்கும்.
இவர்களது 12-ம் வீடான மேஷம் வருவதால் நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் ஈடுபடுவராகவும், அவ்வப்போது மருத்துவச் செலவுகள் அதாவது இவருக்கோ அல்லது இவரின் குடும்பத்தாருக்கோ மருத்துவச் செலவுகள் செய்பவராகவும் இருப்பார்.
கிருஷ்ண பரமாத்மா,விக்டோரியா மகாராணி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் போன்றவர்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இவை அனைத்தும் பொதுப் பலன்களே.
சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
அருமை நன்றி ஐயா
பதிலளிநீக்குஅருமையான பதிவு, எனக்கு பல தகவல்கள் பொருத்தமானதாக உள்ளது நன்றி
பதிலளிநீக்குஜீ.குமாரவேலு வேலூர்
பதிலளிநீக்குSuperb ayya
பதிலளிநீக்கு