ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தனிமனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கு தசா புத்திகளே காரணமாக அமைகின்றன. மனிதனின் சொல், செயல், எண்ணம், விருப்பம் வெறுப்பு என அனைத்தும் கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டதே.
கிரகங்களின் காரகத்துவம் பலன்கள் ஆயுள் முழுவதற்கும், ஆதிபத்திய பலன்கள் தசாவின் போதும் வெளிப்படும்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஜாதகரின் வயது,
ஏன் இங்கே வயது கவனிக்கப்பட வேண்டும் என்றால் வயதினைப் பொறுத்தே ஒவ்வொருவருக்கும் பலன்கள் இங்கே மாறுபடுகின்றன.
ஐந்து வயதுள்ள ஒரு குழந்தைக்கு வருகின்ற சுக்கிர புத்திக்கும்
21 வயது வாலிபருக்கு வருகின்ற சுக்கிரபுத்திக்கும் என்ன மாறுபாடு என்பதை வைத்தே இதை தெரிந்து கொள்ள இயலும்.
அந்த வகையில் ஜாதகம் பார்க்க வந்தவரின் வயதுடன், நடந்த, நடந்து முடிந்த தசா புத்திகளை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஜாதகருக்கு என்ன நடந்திருக்கிறது?
என்ன காரணத்திற்காக வந்திருக்கிறார் என்பது புரியவரும்.
எடுத்துக்காட்டாக 20 முதல் 25 வயது வாலிபர் ஜாதகம் பார்க்க வருகிறார். அவருக்கு அல்லது ஏழாம் அதிபதி புத்தி நடைபெறுவதாக கொண்டால்
காதல் திருமணம் சார்ந்த விஷயங்கள் கேள்வியாக இருக்க கூடும்.
இந்நிலையில் 30 to 45 வயதுடைய ஒட்டிய மனிதன் என்ற நிலையில் சுக்கிரனின் மற்றொரு காரகத்துவமான வீடு, வாகனம் தொடர்புடைய கேள்வியாக இருக்கும்.இங்கே நாலாம் அதிபதி நிலையையும் கவனித்தாக வேண்டும்.
வாலிப வயதில் சுக்கிர புத்தியில் கடந்தவர்களுக்கு சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தாலும் (அ) தசா நாதனுக்கு 6, 8 ஆக இருந்தாலும் கோட்சாரத்தில் ஏழரை,அட்டமச் சனி நடைபெற்றுக் கொண்டிருந்தால் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் ஜாதகர் இருப்பதை அறிந்து கொள்ள இயலும்.
இதே நிலையில் 50 வயதைக் கொண்ட ஆணுக்கு அவயோக கிரகமாக சுக்கிரன் அமைந்து ஆறு, எட்டாமிட தொடர்பினை பெற்று தசா புக்தி நடத்தும்போது கடன், நோய், எதிரிகள், வம்பு வழக்கு நஷ்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துவார்.
இதே நிலையில் சுக்கிரன் இலக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் பெறும் போதும், அவயோக கிரகமாக இருக்கும் பொழுது,
தீய ஆதிபத்திய இடங்களுக்கு மறைந்து நட்பு நிலையில் இருக்கும் பொழுத நல்ல பலன்களை காரகத்துவ, ஆதிபத்திய வாயிலாக நடத்தி செல்வச் செழிப்போடு வாழ வழி செய்வார்.
இதன் மூலம் நல்ல பலன் நடைபெற்றாலும், கெட்ட பலன் நடைபெற்றாலும் வயதைப் பொறுத்து நடைபெறும் என்பதை அறிய இயலும்.
அடுத்ததாக 2,7, எட்டாம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 30 வயதினைக் கடந்த வாலிபர் வருகிறார் என்றால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையை குறிக்கும்.
ஒரு வேளை இடையில் சுக்கிர புக்தி நடந்து திருமணமாகி, கோட்சாரம் சரியில்லாது அமைந்து ஜாதகத்தில் 11ம் இடம் வலுத்த நிலையில் இருந்து, நடக்கும் தசா புத்திகள் ஆறு,எட்டு அமைப்பாக இருக்கும் நிலையில் மண வாழ்க்கை பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர இயலும்.
35 வயது ஆகியும் திருமணம் ஆகாத நிலையைப் பொறுத்தவரை இராசி இலக்னத்துக்கு 2 7 8ஆம் பாவகங்களுடன் சனி செவ்வாய், பாபத்துவ இராகு, கேது தொடர்பு இருக்கும்.
இதுபோன்ற நிலையில் 35 வயதை கடந்த பின்பு வரும் ஏழாம் அதிபதி புத்தி தாம்பத்திய அமைப்பினை சுட்டிக்காட்டும் 12ம் அதிபதி, வீரிய ஸ்தானத்தை சுட்டிக்காட்டும் மூன்றாம் அதிபதி மற்றும் குடும்பாதிபதி, பொதுவான களத்திரகாரகன் சுக்கிரன் தசா புத்திகளில் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு.
ஒருவேளை 7ம் அதிபதியோ அல்லது சுக்கிரனையோ இராகு கேதுக்கள் பலவீனப்படுத்தி இருந்தால் ஏழாம் அதிபதி, சுக்கிரன் புத்தி, அந்தரத்திற்கு மாற்றாக ராகு கேதுக்கள் தொடர்புடைய புத்தி அந்தரங்களில் தான் திருமணம் நடக்கும்.
திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் தம்பதியினரின் ஜாதகத்தில் இராசி இலக்கினத்திற்கு ஐந்தாம் இடம், 5-ஆம் அதிபதி, பொதுவான புத்திரகாரகன் குரு பாதிக்கப்பட்டிருப்பதை காண இயலும்.
அடுத்ததாக தொழில் நிலைகளைப் பொறுத்தவரை பத்தாம் வீடு அல்லது பத்தாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற ஆறு, எட்டு தசா புத்திகளில் ஜாதகர் அவசரப்பட்டு தொழிலை ஆரம்பித்து,- பின்பு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து இருப்பதை உணர இயலும்.
இலக்னத்தைப் பொறுத்து அவ யோக கிரகங்களின் தசா புத்திகளும் ஜாதகருக்கு தங்களது ஆதிபத்திய ரீதியாக காரகத்துவ வழிகளில் வயதிற்கு ஏற்ப பிரச்சனைகளை தருகின்றனர்.
சிறு குழந்தைகளை பொருத்தவரை அவர்களுக்கு ஏழரை, அட்டமச் சனி நடைபெறும் பொழுது பெற்றோர் பாதிக்கப்படுவதையும்,
தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு நடைபெறும்பொழுது மற்றொருவரின் முறையற்ற நடத்தை நடத்தினால் மனவேதனை கொள்வதையும் காண இயலும்.
பொதுவாகவே ஒருவருக்கு சனி மற்றும் செவ்வாய் சுப தொடர்பின்றி பாப கிரகங்களுடன் இணைந்து அல்லது பார்வையைப் பெற்று, ஆறாம் அதிபதி தசா நடந்தால்
கடன், ஆரோக்கிய குறைபாடுகள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் தொடர்புடைய ஏற்படுத்துகின்றார்.
2 11 ஆம் பாவகங்களின் வலுவினைப் பொறுத்து பணப்பிரச்சனை இருக்கின்றதா? இல்லையா என்பதையும்,லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதியின் நிலையைப் பொறுத்து ஆரோக்கிய குறைபாடு இருக்கின்றதா இல்லையா என்பதையும் தீர்மானிக்க இயலும்.
இலக்னாதிபதி வலுக்குறைந்து,
ஆறாம் அதிபதி வலுப்பெற்று தசா நடக்கும் போது, வேலை பார்க்கும் இடத்தில் ஜாதகர், அதிக வேலைப்பளு, குறைவான ஊதியம், மேலாதிகரிகளால் தொல்லை போன்ற பிரச்சினைகளை சந்தப்பார்
கடன்,நோய், வம்பு வழக்கு அவமானங்கள் போன்ற பிரச்சினைகளைப் பொறுத்தவரை
அவயோக கிரகங்கள் வலுவாக துர்ஸ்தானங்களுடன் தொடர்புகொண்டு தசா புத்திகள் ஆரம்பமாகும் போது பாதிப்புகளும் ஜாதகருக்கு முளைவிடத் துவங்குகின்றன.
இதுபோன்ற நிலைகளில் ஜோதிடர் முன்கூட்டியே அதை தெரிவித்து ஜாதகரை எச்சரிக்கையுடன் இருக்க துணைபுரிதல் வேண்டும்.
இலக்ன அவயோக கிரகங்களின் மோசமான தசா புத்திகள் எப்போது சரியாகும் என்ற தீர்விற்கான கால கட்டத்தினை அறிய நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்திகளின் நேர் எதிர் நிலையை கவனிக்க வேண்டும்.
அதாவது ஒரு பாவகத்திற்கு 6, 8, 12 ஆக வரும் தசா புத்திகள் நேரெதிரான பலன்களை தரும்.
இந்த நிலையில் ஆறாம் அதிபதி தொடர்புடைய தசா புத்தி நடைபெறும்பொழுது, ஆறுக்கு, 6-ஆம் இடமான 11-ஆம் இடம் அதற்கான தீர்வினை தரும்.
அதேபோல் எட்டாம் அதிபதி தொடர்புடைய பாதிப்பான பலன்கள் நடைபெறும் போது, எட்டுக்கு எட்டாம் இடமான மூன்றாமிட தசா புத்திகள் அதற்கான தீர்வினை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. #Iniyavan
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL - 9659653138
சூப்பர்
பதிலளிநீக்கு