12- 8-1984 நாளன்று கன்னி லக்னம் கும்ப ராசியில் இந்த ஜாதகர் பிறந்துள்ளார்.
இவருடைய ஜாதகத்தில் தற்போதைய தசா புத்தியினை பொறுத்தவரையில் சனி தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது.
கன்னி லக்கினத்தில் பிறந்த இவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் தன்னுடைய அதிநட்பு வீடான சிம்மத்தில், திக்பலத்திற்கு அருகில் இருப்பது நல்ல அமைப்பே.
லக்னாதிபதியான புதன் தன்னுடைய நட்பு கிரகமான சுக்கிரனுடன் இணைந்த நிலையில் இருப்பதும் சிறப்பிற்குரிய அமைப்பு. அடுத்ததாக லக்னாதிபதியான புதன் ஆட்சி பெற்ற குருவின் பார்வையில் இருப்பதும் சிறப்பான அமைப்பு.
இந்த ஜாதகர் பௌர்ணமிக்கு அடுத்த நாளில் பிறந்திருக்கிறார். அந்த வகையில் வலிமை பொருந்திய ஒளி பொருந்திய சந்திரனுடைய பார்வையில் லக்னாதிபதி இருப்பதும் சிறப்பான அமைப்பு.
ஒருவகையில் லக்னாதிபதி மூன்று சுபர்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் சிறப்பான அமைப்பு.
ஜாதகர் இயல்பிலேயே நல்ல புத்திசாலித்தனம் மிக்கவராக இருப்பார். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நல்ல திறன் இருக்கும் .
அதற்கான காரணம் லக்னாதிபதியே இங்கே பத்தாம் அதிபதி ஆகிறார்.
கன்னி லக்கினத்திற்கு நன்மைகளை செய்வதற்கு கடமைப்பட்ட கிரகமான இரண்டு மற்றும் ஒன்பதாம் வீட்டு அதிபதியான சுக்கிரனுடன் லக்னாதிபதி இணைந்த நிலையில் இருப்பது பணம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நல்ல அமைப்பு.
பொதுவாக திருமணம் தாமதமாவதற்கான காரணங்களைப் பொறுத்தவரை லக்ன ராசிக்கு 2, 7, 8 ஆம் இடங்களுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்களின் தொடர்பு இருக்கும் போது திருமணம் தாமதமாகும்.
பொதுவான களத்திரகாரகன் என்று அழைக்கப்படக்கூடிய சுக்கிரன்,
சனி செவ்வாய், ராகு போன்ற பாபர்களுடைய நெருங்கிய தொடர்பை பெறும்போதும் திருமணம் தாமதமாகும்.
களத்திரகாரகன் சுக்கிரனுடைய ராசிகளான துலாம் மற்றும் ரிஷபத்தில் பாப கிரகங்களான சனி மற்றும் ராகு, சுபர் தொடர்பின்றி இருக்கும் பொழுதும் திருமணம் தாமதமாகும்.
ஏழாம் அதிபதி, சுபர் தொடர்பின்றி வலுப்பெற்ற நிலையில் உள்ள சனி மற்றும் செவ்வாயின் தொடர்பை பெரும் பொழுதும் திருமணம் தாமதமாகும்.
இவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பாப கிரகமான சனி உச்சம் பெற்று நிலையில் இருக்கின்றார். உச்சம் பெற்றுள்ள சனிக்கு எந்தவிதமான சுபர்களுடைய தொடர்பும் கிடையாது.
இரண்டில் உச்சம்பெற்ற சனி, ஏழாம் அதிபதியான குருவை தன்னுடைய மூன்றாம் பார்வையால் பார்த்து பலவீனப்படுத்திகிறார்.
இரண்டில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் ராசிக்கு ஏழாம் அதிபதியான சூரியனைப் பார்க்கின்றார்
சுக்கிரனுடைய மற்றொரு ராசியான ரிஷபமும், அட்டமாதிபதி செவ்வாயால் பார்க்கப்
பட்ட ராகுவால் பாதிப்பை பெறுகிறது.
லக்னத்திற்கு எட்டாம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்ற சனி பார்ப்பது நல்லதல்ல.
எட்டாம் இடத்துடன் பாபகிரகங்களின் தொடர்பு இருந்தாலும் திருமணம் தாமதமாக நடக்கும்.
அந்த வகையில் இவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்தை குறிக்கக்கூடிய இரண்டாமிடம்,
சனியால் பாதிக்கப்பட்டுள்ளது.
மனைவி மற்றும் திருமண விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடிய லக்னத்திற்கு ஏழாம் வீட்டு அதிபதியான குருவும், மற்றும் ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதியான சூரியனும், சனியால் பார்க்கப்பட்டு பாதிப்படைகின்றனர்.
இதுவே திருமணம் தாமதமாகுவதற்கான காரணங்கள்.
தசாபுத்தி நிலைகளைப் பொருத்தவரை ஏழாம் அதிபதியான குருவின் தசா காலம் முடிந்தும் திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் ஏழாம் அதிபதியான குரு உச்ச சனியின் பார்வையில் இருப்பதே ஆகும்.
திருமணம் நடக்குமா என்பதைப் பொறுத்தவரையில்
பொதுவான களத்திரகாரகன் என்று அழைக்கப்படக்கூடிய சுக்கிரன், இங்கே நல்ல நிலையில் இருப்பதால் திருமணம் கண்டிப்பாக நடக்கும்.
எப்போது நடக்கும் என்பதை பொறுத்தவரையில் தசா புத்தியினை பார்த்தாக வேண்டும்.
தற்போது இவருக்கு சனி திசையில் சனி புத்தி நடந்து கொண்டிருக்கிறது..
கோட்சார ரீதியாகவும் கும்ப ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தை பலவீனப்படுத்திய அமைப்பில் தசா நாதனான சனி, புத்தி நடத்துவதாலும் கோட்சார ரீதியாக அடுத்து ஜென்ம சனி நடக்க இருப்பதாலும் சனி புத்தி முடியும் வரை (07/04/2024) திருமணம் நடப்பது சற்று கடினமே.
சனி புத்தி முடிந்த பின்பு ராசிக்கு ஏழாம் இடமான சிம்மத்தில் களத்திரக்காரன் சுக்கிரனுடன் இணைந்த நிலையில் உள்ள, ஏழாம் அதிபதி குருவின் பார்வை பெற்ற புதன் புத்தியில் திருமணம் நல்லபடியாக நடக்கும்.
குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற நிலையிலிருந்து புத்தி நடத்தக்கூடிய சனியின் பாதிப்புகள் குறைவதற்கு கால பைரவரை வழிபட்டு வருவது நன்மை தரும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
08/10/1984
பதிலளிநீக்கு4:30am
Attur.
Marriage epa nadakum solunga sir
உண்மையான மற்றும் வெளிப்படையான அலசல் ஐயா. மிக்க நன்றி.
பதிலளிநீக்கு