ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

ஒரு பாவகத்தில் சுப கிரகமும் பாப கிரகமும் இணைந்திருக்கும் பொழுது தொடர்புடைய பாவகத்தின் தசா புத்தி பலன் எப்படி இருக்கும்?

பொதுவாகவே ஒரு பாவகத்துடன் சுப மற்றும் பாபகிரகங்கள் தொடர்பில் இருக்கும் பொழுது நன்மை மற்றும் தீமைகள் கலந்த நிலையிலேயே அந்த பாவக பலன்கள் இருக்கும்.
இணைந்துள்ள சுப மற்றும் பாப கிரகங்களில், எந்த கிரகத்திற்கு அது நட்பு வீடு,எந்த கிரகத்திற்கு பகை வீடு என்பதைப் பொருத்து பலன்களில் மாறுபாடு இருக்கும்.
ஒரு பாபகிரகம், ஒரு சுபகிரகம் ஒரு பாவகத்தில் இணைந்திருக்கும் பொழுது குறிப்பிட்ட  பாப கிரகம் சம்பந்தப்பட்ட தசா புத்திகள் நல்லபடியாகவும், சுப கிரகம் சம்பந்தப்பட்ட தசா புத்திகள் தீய பலன்களை தரக் கூடிய வகையிலும் இருக்கும்.

உதாரணத்திற்கு லக்ன ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் சனி இணைந்திருப்பதாக எடுத்துக்கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒன்பதாம் பாவகம் ஒருவருடைய தந்தை மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு இடமாகும். #Iniyavan 

ஒன்பதாம் பாவகத்தோடு சுபகிரகங்கள் தொடர்பில் இருப்பது நல்ல அமைப்பாகும். ஒன்பதாம் பாவகத்தோடு பாவ கிரகங்கள் தொடர்பில் இருப்பது ஒன்பதாம் பாவகத்தை  கெடுக்கக் கூடிய அமைப்பு. அதோடு இணைந்துள்ள கிரகத்தின் காரகத்துவ, ஆதிபத்ய பலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சுக்கிரன் மற்றும் சனி ஒன்பதாம் பாவகத்தில் இணைந்திருப்பதை பொருத்தவரையில் சுக்கிரனால் சனி இங்கே கட்டுப்படுத்தப்படுவார். அதாவது சனியின் கெடுபலன்கள் இல்லாத நிலை இருக்கும்.
இந்நிலையில் சனியால் கெடு பலன்களை தர இயலாது. #Iniyavan

சனி சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் ஒன்பதாமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களில் பாதிப்புகள் இருக்காது.
9-ஆம் இட நற்பலன்கள் நல்லபடியாகவே இருக்கும். குறிப்பிட்ட ஜாதகத்துக்கு சனி எந்த பாவகத்தின் அதிபதி என்பதைப் பொருத்து அந்த பாவகம் சார்ந்த நற்பலன்களும் நடக்கவே செய்யும்.

ஆனால் சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் ஜாதகருடைய தந்தை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதோடு சுக்கிரனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட பெண்கள், ஆடம்பர வாழ்க்கை, வாகனம், வாழ்க்கை துணை போன்ற விஷயங்களால் ஜாதகருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பிட்ட ஜாதகத்தில்  சுக்கிரன் எந்த பாவக அதிபதியோ  அந்த பாவகம் சார்ந்த விஷயங்களிலும் பிரச்சனைகள் இருக்கும். #Iniyavan

அந்த வகையில் ஒரு பாவகத்தில் ஒரு சுப கிரகமும், பாப கிரகமும் இணைந்திருக்கும் பொழுது சுபகிரகத்தின்  தசா வராமல் இருப்பதே சிறப்பாகும்.மேற்கண்ட அமைப்பில் சுக்கிர தசா வராமல் இருப்பது சிறப்பாகும்.
தசா வராத பொழுது சுக்கிரனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு பாதிப்புகள் இருக்காது. புத்திகளில் மட்டுமே சிறிய அளவில் பாதிப்புகள் இருக்கும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக