ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அரசருக்கு நிகரான அந்தஸ்து உடையவராக கருதப்படுவார். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் இலக்னாதிபதிக்கு இணையாக, அடுத்த நிலையில் கருதப்படக் கூடிய கிரகம் சூரியன் ஆவார். அதனால்தான் சூரியன் இலக்னக் காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது அந்த மனிதனை வழிநடத்திச் செல்லக்கூடிய கிரகம் சூரியனே ஆவார். ஒரு மனிதனுடைய ஆளுமை, தன்னம்பிக்கை, அவனுக்கான அங்கீகாரம், சமுதாயத்தில் அவனுக்கான செல்வாக்கு, புகழ் போன்றவற்றை சூரியனே குறிப்பார். #Iniyavan
சுய ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருப்பது என்பது சர்ப்ப கிரகங்ளுடன் இணைந்திருப்பது, சுபத் தொடர்பில்லாத சனியின் பார்வையில் இருப்பது, சனியுடன் இணைந்து இருப்பது, சனியின் வீடுகள் மறைவு ஸ்தானங்களாகி அதில் சூரியன் இருப்பது, பகை, நீசமாகி மறைவு ஸ்தானங்களில் இருப்பது
போன்றவை சாதகமான நிலை அல்ல.
சுய ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருக்கும் பொழுது கீழ்க்கண்ட எதிர்மறை விஷயங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் தென்படலாம்.
வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளுடன் தொடர்ச்சியான கருத்து மோதல்கள் ஏற்படும். மேலதிகாரிகள் இவர்களை அங்கீகரிக்காத நிலை அல்லது மேல் அதிகாரிகளை இவர்கள் சரியாக மதிக்காத தன்மையும் உண்டு.
உயர் பொறுப்பில் இருப்பவர்களை எப்போதும் குறை சொல்பவர்களாக இருப்பார்கள்.
தந்தையுடன் சுமுகமான உறவை பேண இயலாத நிலை.
எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், உயர் பதவிகளுக்கு ஆசைப்படுதல், எல்லா விஷயங்களிலும் நேரத்தை சரியாக பயன்படுத்தாத தன்மை, அலட்சியமான சுபாவம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடும் குணம். அதன் காரணமாகவே அதிகப்படியான பணிச்சுமையை சந்திப்பது, குறைந்த சுயமரியாதை உணர்வோடு இருத்தல், யாரையும் மதிக்காது செயல்படுதல், எப்போதும் எதிர்மையாக பேசுதல், செயல்படுதல் இரக்க உணர்வின்றி செயல்படுதல் தனது கவலைகளை பொருட்படுத்தாது மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்திப் பேசுதல், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை அதிகப்படியாக விமர்சித்தல், தந்தை மற்றும் மாமனாரை மதிக்காது செயல் படுதல், அறியாமையுடன் இருத்தல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாதிருத்தல், உற்சாகமின்றி செயல்படுதல், தாழ்வு மனப்பான்மை, ஒரு விஷயத்திற்கு தான் தகுதி இல்லை என இவர்களாகவே நினைத்துக் கொள்ளும் நிலை.
நியாயமற்ற கோபம் மற்றும் அகங்காரம், அனைத்தையும் விமர்சிப்பார்கள், ஆனால் தன்னைப் பற்றி விமர்சனங்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், எந்த ஒரு விஷயத்திலும் விதிமுறைகளை பின்பற்றாத இருத்தல், விதிமுறைகளை பாதிப்பு வரும் என்று தெரிந்தே மீறுதல்.
கண்ணிய உணர்வின்றி இருத்தல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறையின்மை
ஒரு செயலைத் தொடங்குவதில், தொடர்ந்து செயலாற்றுவதில் கவனமின்றி இருத்தல்,
எப்போதும் விரக்திக்கு உள்ளான மனநிலையோடு இருத்தல்.
உடல்ரீதியாக வெப்ப வியாதிகளால் பாதிக்கப்படுதல், வயிறு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல்.
ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருக்கும்போது மேற்கண்ட விஷயங்களில் பலவீனத்தின் அளவிற்கு ஏற்ப பாதிப்புகளை எதிர்கொள்வார். எந்தெந்த விஷயங்களில் பாதிப்புகள் இருக்கின்றனவோ அவற்றை சரி செய்து கொள்வதற்கு தன்னால் ஆன முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவது மட்டுமே நல்லதாகும்.மனதை எப்போதும் புத்துணர்வாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வதும் இவர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
வாழ்வில் முன்னேறிய நபர்களில் ஒருவரை வழிகாட்டியாக கொண்டு அவருடைய திட்டங்கள், செயல்பாடுகளை பின்பற்றிச் செயல்படுதலும் நல்லதாகும்.
அனுதினமும் அதிகாலையில் எழுந்து ஆதித்ய ஹிருதயம் அல்லது சூரிய காயத்ரி சொல்லி சூரிய பகவானை வழிபடுவதை வழக்கப்படுத்திக் கொள்வது அவசியம்.போதுமானவரை ஞாயிற்றுக்கிழமை அசைவம் தவிர்ப்பதும், ஞாயிற்றுக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வதும் நலம் தரும். #Iniyavan
அனுதினமும் அதிகாலையில் எழுந்து தனது அன்றாட செயல்களை அட்டவணைப்படுத்தி அதன்படி செயலாற்றுதலை பழக்கப்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதாகும்.
எல்லா விஷயங்களிலும், விழிப்புணர்வுடன் இருத்தலும், அலட்சியப்படுத்தாது நேரம் தவறாமையை பின்பற்றுதலும் அவசியம்.
இல்லையெனில் இவர்களுடைய செயல்பாடுகளே நாளடைவில் இவர்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும், திருப்தியையும் தராது போகும்.
"The time to repair the roof is when the sun is shining"
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக