ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

வேத ஜோதிடத்தில் திக்பலம் என்றால் என்ன? திக்பலம் அடையக் கூடிய கிரகங்கள் தரக்கூடிய நன்மைகள் என்னென்ன?



ஜோதிட  சாஸ்திரத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுபவை ஒன்று, நான்கு, ஏழு, மற்றும் பத்தாவது பாவகங்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட திசையை உணர்த்துபவை. ஒன்றாவது வீடு கிழக்கு திசையினையும், நான்காவது வீடு வடக்கு திசையினையும், ஏழாவது வீடு மேற்கு திசையினையும், பத்தாவது வீடு தெற்கு திசைனையும் குறிக்கும். மேற்கண்ட திசைகளின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட திசையில் வலுவாக கருதப்படும்.

இந்த அமைப்பே வேத ஜோதிடத்தில் திக்பலா என்று அழைக்கப்படுகிறது சமஸ்கிருதத்தில் திக் என்றால் திசையையும்(Direction) பலா என்றால் வலிமையும் (power) குறிக்கும்.

முழு சுபராக கருதப்படக் கூடிய கிரகமான குருவும், வித்யாக்காரகனான புதனும் கிழக்கு திசையில் வலிமை பெற்ற கிரகங்களாக கருதப்படும். ஆகையால் இவை முதலாவது வீட்டில் அதாவது லக்னத்தில் இருக்கும் போது பலம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படும்.

மாதாக்காரகனான சந்திரன் மற்றும் களத்திரக்காரகனான சுக்கிரன் வடக்கு திசையில் பலம் பெறக்கூடிய கிரகங்கள்.
ஆகையால் வடக்கு திசையாக குறிப்பிடப்படும் லக்னத்திற்கு நான்காவது வீட்டில் இவை நிற்கும் பொழுது பலம் பெற்றதாக கருதப்படுகிறது.

சனி மேற்கு திசையில் வலுப்பெறக்கூடிய கிரகமாக கருதப்படுவதால் மேற்கு திசையை குறிப்பிடும் லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் நிற்கும்பொழுது சனி பலம் பெற்ற கிரகமாக கருதப்படும்.

ராஜ கிரகங்களான சூரியன் மற்றும் செவ்வாய் தென்பகுதியில் பலம் பெறக்கூடிய கிரகங்களாக  கருதப்படுவதால் இவை தெற்கு திசையை குறிப்பிடும் லக்னத்திற்கு பத்தாவது வீட்டில் இருக்கும் பொழுது பலம் பெறுகின்றன.

ஒருகிரகம் ஸ்தான பலத்தில் பகை, நீசம் போன்ற பலவீனமான நிலையில் இருந்தாலும் அவை திக்பலம் பெரும்பொழுது நல்ல பலன்களைத் தருகின்றன.

திக்பலம் பெற்ற கிரகங்கள் தரக்கூடிய நன்மைகள்:
 லக்கனத்தில் குரு: குரு லக்னத்தில் இருக்கும் பொழுது அந்த மனிதர் ஒழுக்கம் நிறைந்தவராகவும், பெருந்தன்மையான குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார்.சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெறுபவராகவும் இருப்பார்.குரு லக்னத்தில் இருக்கும் போது 5, 7, 9 போன்ற பாவகங்களை பார்ப்பதால் நல்ல குழந்தைகள், நல்ல ஞானம், நல்ல புத்திசாலித்தனம், நல்ல வாழ்க்கை துணை, நல்ல தந்தை போன்ற பலங்களை பெறுபவராகவும் இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலும் லக்னத்தில் குரு இருக்கும் பொழுது அது அந்த பலவீனத்தை போக்கக்கூடிய அமைப்பாக இருக்கும்.பொதுவாக லக்னத்தில் குரு இருப்பது ஜாதகத்தில் உள்ள அனைத்து சாதகமற்ற நிலைகளையும் சரி செய்யும் என்ற ஒரு கருத்தும் உண்டு.#Iniyavan

லக்னத்தில் புதன்:  லக்னத்தில் புதன் இருக்கும்பொழுது அந்த மனிதர் நல்ல புத்திசாலியாகவும், தீர்க்கமாக யோசித்து செயலாற்றுபவராகவும் நல்ல ஞாபக சக்தி இதோடு நுண்ணறிவு, கணிதம், ஜோதிடம், ஓவியம் , சிற்பம், நல்ல பேச்சுத்திறமை, நல்ல எழுத்தாற்றல் போன்றவற்றில் திறமைகளை கொண்டவராக இருப்பார்.
இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக, மகிழ்ச்சியான சுபாவம் கொண்டவர்களாக, இளமையான தோற்றம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.கல்வி மற்றும் பட்டறிவு சார்ந்த விஷயங்களிலும் போதுமான ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களின் உதவி இன்றி தாங்களாகவே எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ளக்கூடிய திறன், தங்களுடை புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பிழைத்துக் கொள்ளக்கூடிய திறன் போன்றவற்றை லக்னத்தில் உள்ள புதன் ஜாதகருக்கு தருவார்.#Iniyavan

நான்கில் சந்திரன்:  சந்திரன் நான்காம் வீட்டில் இருக்கும் பொழுது அந்த மனிதர் அன்பனவராக, அர்ப்பணிப்பு உடையவராகவும், நல்ல மனோபலம் கொண்டவராக, தாயார் மீது அதிக பாசம் உடையவராக, தாயார் வழியில் பரிபூரணமான ஆதரவினை பெற்றவராக, தாய்மொழி விஷயங்களில் நல்ல திறமை உடையவராக இருப்பார்.

நான்கில் சுக்கிரன்:  சுக்கிரன் நான்கில் இருக்கும் பொழுது நல்ல வாழ்க்கை துணை, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை,எதிர் பாலினரிடையே சுமூகமான நல்லுறவு போன்ற பலன்களை பெறுவார். அதோடு நான்காம் இடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நிலம், பூமி, வீடு, வாகனம், உயர்தரமான வாழ்க்கைச் சூழல் போன்றவற்றில் நல்ல பலன்களை பெறுபவராக இருப்பார். திரைப்படம், ஆடல், பாடல், இசை போன்ற கலை சார்ந்த விஷயங்களிலும் ஈடுபாடுகள் அதிகம் இருக்கும்..#Iniyavan

ஏழில் சனி:  எழில் சனி இருப்பதை பொறுத்தவரை சனியின் சுப தொடர்புகளுக்கு ஏற்ப 
ஜாதகர் கர்மா, பாவம், புண்ணியம், நீதி, நியாயம் போன்ற விஷயங்களில் இயல்பிலேயே நம்பிக்கை கொண்டவராக, ஆயுள் பலம் கொண்டவராக, மெதுவாக செய்யக்கூடிய இயந்திரவியல் சார்ந்த வேலைகளில் நிபுணத்துவம் உடையவராக  இருப்பார்.
பொதுவாக சனி ஏழாம் வீட்டில் இருக்கும் பொழுது திருமணத்தை தாமதப்படுத்துவார். அதே நேரத்தில் நல்ல பக்குவம் உள்ள, சற்று (வயது அல்லது தோற்றத்தில்) முதிர்ச்சியான நம்பகமான வாழ்க்கை துணையையும் தருவார்.இதோடு பொதுநல விஷயங்களில் ஈடுபாடு, சமூகம் சார்ந்த பணிகளுக்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருவார்.
ஏழாம் வீட்டில் சனி இருக்கும் பொழுது சுப தொடர்புகளை பெறுவது கூடுதல் நன்மைகளை தரும்.

பத்தில் சூரியன்: சூரியன் பத்தில் இருப்பதை பொறுத்தவரை சூரியனுக்குரிய காரக விஷயங்களான புகழ், அங்கீகாரம், சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு, பூர்வீகத்தில் சிறப்பாக வாழ்தல், தந்தையுடன் நல்ல உறவு, தொழில்துறையில் சாதிக்கும் தன்மை, அதிகார குணம், ஆளுமைத் திறன், Iniyavan தலைமைப் பதவிகள், ஒரு நிறுவனத்தை வழிநடத்தக் கூடிய திறன்,அரசியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு போன்றவற்றை தருவார்.

பத்தில் செவ்வாய்:  தொழிற்சார்ந்த விஷயங்களில் தனித்திறன், எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளிக்கும் திறன், வைராக்கியமாக செயல்படக்கூடிய தன்மை, சகோதரர் மற்றும் நிலம் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் போன்றவற்றை தருவார்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக