பொதுவாக ஒரு பொருள் காணாமல் போவதையும் அல்லது ஞாபக மறதியால் ஒரு பொருளை வைத்த இடம் தெரியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்ட கூடிய இடம் எட்டாம் இடம்.
மேற்கண்ட ஜாமக்கோள் பிரசன்னத்தில் எட்டாம் அதிபதி புதன் உள்கட்டத்தில் ஏழில் இருந்து உதயத்தை பார்க்கிறார், வெளிக்கட்டத்தில் உதயத்தை நோக்கி எட்டாம் அதிபதி வருகிறார்.எட்டாம் அதிபதி இங்கே நீச நிலையில் வெளிக்கட்டத்தில் இருக்கிறார்.புதன் ஞாபக சக்தியை சுட்டிக்காட்ட கூடிய கிரகம். இங்கே நீசநிலையில் இருப்பதால் ஞாபக மறதியின் காரணமாக வைத்த பொருள் எங்கே என அவர்களுக்கு தெரியவில்லை.
இது மட்டுமின்றி உதயத்தில் சனி, ஆருடத்திலும் சனி இருப்பது ஞாபக மறதியின் காரணமாகவே வைத்த பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.உதயத்திலும் சனி, சனி மருந்தினை சுட்டிக்காட்டக் கூடிய கிரகம் ஆகும். அவ்வகையில் காணாமல் போனது மருந்து பொருட்கள் என்பது தெளிவாகிறது.
பொதுவாக ஒரு பொருள் வைத்த இடம் தெரியவில்லை எனும்போதும் (அ) காணமால் போன பொருள் எங்கே இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய இடம் ஜாமக்கோள் பிரசன்னத்தை பொறுத்தவரை நான்காம் இடமாகும்.
நான்காம் இடம், நான்காம் வீட்டு அதிபதி, நான்காம் இடத்தோடு தொடர்பு கொண்ட கிரகங்கள் அல்லது நான்காம் வீட்டு அதிபதி எங்கு இருக்கின்றாரோ அது சம்பந்தப்பட்ட இடங்களில் நாம் தேடும்போது பொருட்கடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.இங்கே நான்காம் வீட்டு அதிபதியான சுக்கிரன் உதயத்திற்கு 12-ம் வீட்டில் இருக்கின்றார்.உள்கட்டத்தில் இருக்கக்கூடிய சுக்கிரனும் 12 ஆம் வீட்டையே பார்த்து தொடர்புப்படுத்துகிறார்.இரண்டு சுக்கிரனும் சனியின் வீடான மகரத்தையே சுட்டிக்காட்டுகின்றனர்.
இது மட்டுமின்றி உதயத்திலும் சனி ஆருடத்திலும் சனி, ஆகையால் சனி குறிக்கக்கூடிய வீட்டில் உள்ள பழைய பொருட்களில் தேடிப் பார்க்கச் சொன்னேன்.இங்கே உதயாதிபதி உள்கட்டத்தில் ஆட்சியாகவும் வெளிக்கட்டத்தில் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் கண்டிப்பாக பொருள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நிமிடங்கள் கழித்து தேடிப் பார்த்த அவர்கள் வீட்டில் உள்ள பழைய மேஜையில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மருந்து பொருட்கள் இருந்ததாகச் சொன்னார்கள்.
வீட்டில் உள்ள பழமையான பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு சனியே காரகத்துவம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசன்னம் பார்த்தவரின் தாயார் தான் மருந்து பொருட்களை ஞாபக மறதியின் காரணமாக வைத்த இடத்தை தேடியதாகச் சொன்னார்.இங்கே தொலைந்து போன அல்லது மறந்து போன பொருள் உள்ள இடத்தை சுட்டிக்காட்டக்கூடிய நான்காம் வீட்டு அதிபதி தாயாரைக் குறிக்கக்கூடிய சந்திரனுடன் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்த ஜாமக்கோள் பிரசன்னத்தில் சுக்கிரன் தாயாரை சுட்டிக்காட்டக்கூடிய நான்காம் வீட்டு அதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது உள்கட்ட சுக்கிரனும் தாயாரைக் குறிக்கக்கூடிய சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
Cell 9659653138
ஜோதிடம், பிரசன்னம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக