சனி, 30 செப்டம்பர், 2023

ஒருவருடைய ஜாதகத்தின் மூலம் அவருடைய உறவுகளின் கேரக்டரை தீர்மானிப்பது எப்படி?குறிப்பிட்ட உறவு, உங்களிடத்தில் எவ்வாறு செயல்படுவார் என்பதை தெரிந்து கொள்வது எவ்வாறு?



ஜாதகருடைய உறவுகளின் குணநலன்கள் அவருடைய தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்தது என்றாலும்,
ஜாதகரிடத்தில் உறவுகள் எவ்வாறு செயல்படுவார், எப்படிப்பட்ட குணத்தை வெளிப்படுத்துவார் என்பது ஜாதகரருடைய தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்தே அமையும். #Iniyavan

ஏனெனில் எல்லோரும் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான குணங்களை வெளிப்படுத்துவதில்லை ஒருவருடத்தில் அன்பாக இருப்பவர் மற்றொருவரிடத்தில் 
கடினமானவராகவும், இரக்க உணர்வு இல்லாதவராக இருப்பதற்கு இவையே காரணம்.

ஜாதகத்தில் உறவினை சுட்டிக்காட்டக் கூடிய பாவக அதிபதி மற்றும் காரக கிரகம் எந்த ராசியில் அமைந்துள்ளதோ அந்த ராசியின் பஞ்சபூதத் தன்மைக்கு ஏற்ப ஜாதகரின் உறவுகளின் குணநலன்கள் அமையும்.#Iniyavan

உதாரணத்திற்கு வாழ்க்கைத் துணையின் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஏழாம் இடம், ஏழாம் வீட்டு அதிபதி அமர்ந்த வீடு, காரக  கிரகமான சுக்கிரன் அமர்ந்த ராசி இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உறவுகளைச் சுட்டிக் காட்டக் கூடிய பாவக அதிபதிகள் மற்றும் காரக கிரகங்கள் நெருப்பு ராசிகளில் 
(மேஷம், சிம்மம், தனுசு)
அமரும்பொழுது அந்த உறவுகள் ஜாதகத்திரிடத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், முன்கோபம் உடையவர்களாகவும், எல்லா விஷயத்திலும் அவசரம் காட்டக் கூடியவர்களாகவும், செயல்வேகம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
அதோடு அதிகாரத்தன்மை, நான் என்ற எண்ணம் போன்ற குணங்களுடன் செயல்படுவார்கள்.

நெருப்பு ராசியான மேஷம், உஷ்ண உலைகளில் எரியும் நெருப்பு மற்றும் கூரையில் எரியும் நெருப்பை சுட்டிக்காட்ட கூடிய ஒன்று. அந்த வகையில் 
உறவுகளை குறிக்கக்கூடிய பாவக அதிபதிகள் அல்லது காரக  கிரகங்கள் மேசத்தில் அமரும்பொழுது அத்தகைய உறவுகள் ஜாதகரிடத்தில் இரக்கணர்வு இல்லாதவராகவும், சண்டையின் போது  கடினமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தவர்களாகவும், 
தன்னுடைய சுயநலம், தன்னுடைய முன்னேற்றம் இவற்றினை  மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்களாகவும் சகிப்புத்தன்மை குறைவாக உள்ளவர்களாகவும், 
பந்தபாசம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.

அடுத்த ராசியான சிம்மம் வீட்டில் எரியக்கூடிய நெருப்பினை சுட்டிக்காட்டும்.உறவுகளை சுட்டிக்காட்ட கூடிய பாவக அதிபதிகள் அல்லது காரக கிரகங்கள் சிம்ம வீட்டில் அமரும் பொழுது மேற்கண்ட உறவுகள் ஜாதகரிடத்தில் தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்த முனைபவர்களாக இருப்பார்கள்.

அடுத்த நெருப்பு ராசியான தனுசு தீபத்தில் மற்றும் ஹோமத்தில் எரியக்கூடிய நெருப்பினை சுட்டிக்காட்டும் .அந்த வகையில் மேற்கண்ட தனுசு பாவகத்தில் உறவுகளை சுட்டிக்காட்டக்கூடிய காரக கிரகங்கள் அல்லது பாவக அதிபதிகள் அமரும் பொழுது அவர்கள் ஜாதகரிடத்தில் தேவையான  கண்டிப்பையும்  தேவையான போது இரக்கத்தினை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். இந்த பாவகத்தில் இருக்கக்கூடிய உறவுகள் ஜாதகருடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.#Iniyavan
உறவுகளை சுட்டிக்காட்டக்கூடிய பாவக அதிபதிகள் மற்றும் காரக கிரகங்கள் நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் போன்றவற்றில் அமரும் பொழுது மென்மையான தன்மையும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதலமும், சற்று சுயநல உணர்வும், பந்தபாசம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
நில ராசியான ரிஷபத்தில் உறவுகளை குறிப்பிடக்கூடிய பாவக அதிபதிகள் அமரும் பொழுது மேற்கண்ட உறவுகள் ஜாதகரிடத்தில் பொருளாதார ரீதியான 
ஆதரவை எதிர் நோக்குபவர்களாகவும்  இருப்பார்கள்.

உறவுகளை குறிக்கக்கூடிய பாவக அதிபதிகள் நில ராசியான கன்னியில் அமரும் பொழுது அத்தகைய உறவுகள்
நல்ல புத்திசாலியாகவும் ஜாதகரை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

உறவுகளை குறிக்கக்கூடிய பாவக அதிபதிகள் மகரராசியில் பொழுது  அவர்கள் சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தன்மை கொண்டவர்களாக ஆவேசமான செயல்பாடுகள், பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அடுத்ததாக உறவுகளை சுட்டிக் காட்டக்கூடிய பாவக அதிபதிகள் மற்றும் காரக கிரகங்கள் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் இவற்றில்  அமரும் பொழுது அத்தகைய உறவுகள் கலகலப்பான மற்றும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்டவர்களாக, அதீத சுயநல எண்ணம் கொண்டவர்களாகவும்,
பொறாமை, கோள் மூட்டல், புறம் பேசல் போன்ற குணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுனத்தில் அமரக்கூடிய பாவக உறவுகள் புத்திசாலியாகவும், இரட்டை தன்மை கொண்டவர்களாகவும், யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்களாகவும்,எவரையும் சரியாக எடை போடக்கூடியவர்களாகவும்,
எவரை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்ப வளைந்து கொடுத்து செல்பவர்களாகவும்
இருப்பார்கள்.

உறவுகளை குறிக்கக்கூடிய பாவக அதிபதிகள் துலாம் ராசியில் அமரும் பொழுது எவரையும்  எதையும் அலட்சியமாக கருதுதல்,ஒருவருடன் பழகுவதால், அல்லது ஒருவருக்கு உதவுவதால் அதனால் தனக்கு என்ன நன்மை என யோசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
உறவுகளை குறிக்கக்கூடிய பாவக அதிபதிகள் மற்றொரு நில ராசியான கும்பத்தில் அமரும்போது அந்த உறவுகள் ஜாதகரிடத்தில் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும், தன்னைப் பற்றி  புகழ்ச்சியாக பேச வேண்டும், தன்னை மிகுந்த மரியாதையாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்களாகவும், சற்று பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

உறவுகளை குறிப்பிடும் பாவகாதிபதிகள் அல்லது காரக கிரகங்கள் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இவற்றில் அமரும் பொழுது அந்த உறவுகள் ஜாதகரிடத்தில் மென்மையாக நடந்து கொள்பவர்களாகவும், சாந்தம், அன்பு, கருணை, இரக்க உணர்வு கொண்டவர்களாகவும்,
விட்டுக் கொடுத்து செல்பவர்களாகவும்
இருப்பார்கள்.உறவுகளை சுட்டிக்காட்டக்கூடிய  பாவக அதிபதிகள் அல்லது காரக கிரகங்கள் கடகத்தில் அமரும்போது அத்தகைய உறவுகள் ஜாதகரிடத்திடல் அதிக மென்மையுடன் நடந்து கொள்பவர்களாகவும் விருச்சகத்தில் அமரும்பொழுது அவ்வப்போதும் மென்மை, அவ்வப்போது கண்டிப்பினை வெளிப்படுத்துபவர்களாகவும், மீனத்தில் அமரும் பொழுது தேவைக்கேற்ற மென்மையை வெளிப்படுத்துவர்களாக இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட உறவிடத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துச் சென்றாலும் உங்களிடத்தில் அந்த உறவுகள் விட்டுக் கொடுக்கும் சுபாவமின்றி இருப்பது, நீங்கள் பாசத்தை செலுத்தினாலும் அவர்கள் பாசம் இன்றி இருப்பதற்கு காரணம் இத்தகைய வேறுபாடுகளே ஆகும்.

மேற்கண்ட விஷயங்களை உறவுகளை சுட்டிக் காட்டக்கூடிய காரக கிரகங்களுக்கு எடுத்துக்கொள்வதை விட பாவக அதிபதிகளுக்கு எடுத்து பலன் பார்க்கும் பொழுது அதிகம் பொருந்திப் போவதை அனுபவத்தின் மூலம் உணர முடிகிறது.#Iniyavan

உதாரணத்திற்கு தாயாருக்கு காரககிரகமான சந்திரன் அமர்வதை எடுத்துக் கொள்வதை காட்டிலும், தாயாரைக் குறிப்படும் பாவக அதிபதியான நான்காம் அதிபதி அமரக்கூடியதை எடுத்துக் கொள்ளும் பொழுது பலன்கள் பொருந்திப் போவதை அதிகம் உணர முடியும்.
வலுப்பெற்ற சுப கிரக மற்றும் பாப கிரக இணைவு மற்றும் பார்வை தொடர்பிற்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களில் மாறுபாடுகள் இருக்கும்.

நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக