வியாழன், 10 ஜூலை, 2025

உங்களுடைய ஜாதகத்தின் தரத்தினை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?

ஒரு ஜாதகத்தின் தரத்தினை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்கள்: லக்னம், லக்னாதிபதி, ராசி மற்றும் அடுத்தடுத்து வரும் தசா புத்திகளின் முக்கியத்துவங்கள்

ஒரு ஜாதகத்தின் தரம் எதைப் பொருத்து  நிர்ணயிக்கப்படுகிறது? 

இயல்பாகவே ஒரு நல்ல ஜாதகம் என்பதற்கான அடிப்படையான விஷயங்கள் என்னென்ன?
முதன்மை அமைப்பாக லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்.லக்னாதிபதி என்பது ஜாதகரை குறிக்கும். லக்னாதிபதி நல்ல நிலையில் இருப்பதும், லக்னாதிபதியின் வீடான லக்னம் நல்ல நிலையில் இருப்பதும் மிக மிக அவசியம். லக்னம் நல்ல நிலையில் இருப்பது என்றால் இயற்கை சுப கிரகங்கள் லக்னத்தில் இருப்பதும் லக்னத்தை பார்ப்பதும் சிறப்பானதாகும். லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்கிறார் என்றால் ஸ்தான பல அடிப்படையில் ஸ்தான பலத்தை இழக்காமல் இருப்பது அவசியம். ஸ்தான பலத்தை இழந்திருக்கும் பொழுது வேறு ஏதேனும் ஒரு வகையில் பலம் பெற்று இருப்பது நல்லது. அதாவது லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் வலுப்பெறுவது, வலுப் பெற்ற சுப கிரகத்தின் பார்வையில் அல்லது இணைவில் லக்னாதிபதி இருப்பதும் சிறப்பு. #Iniyavan 
லக்னாதிபதி இயற்கை பாபர்களாக  இருக்கும் போது மறைவு ஸ்தானங்களில் வலுப்பெறுவது சிறப்பு.

லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருப்பது என்பதே முதல் தரமான ஜாதகத்திற்கான முதன்மையான அடிப்படை விதி ஆகும்.
லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இல்லாத பொழுது மட்டுமே ஒரு ஜாதகர் திசை மாறிப் போகின்றார்.இவருடைய எண்ணங்கள் பலிப்பதில்லை. முயற்சிகள் போதுமான அளவிற்கு பலன் தருவதில்லை.

அடுத்ததாக லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு துணை செய்கின்ற பாவகங்களான ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். லக்னம் மற்றும் லக்னாதிபதி சரியில்லாத நிலைகளிலும் திரிகோண பாவகங்களான ஐந்து, ஒன்பதாம் பாவங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது ஜாதகருடைய முயற்சிகள் பலிதமாகும். தசா புத்திகளின் அடிப்படையில் ஓரளவிற்கு நல்ல வாழ்க்கை சூழலில்தான் ஜாதகர் இருப்பார்.

எந்த ஒரு பாவகமும், கிரகமும், பாப கிரகங்களின் தொடர்பினால் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு இருக்க கூடாது. பாவகமோ, கிரகமோ பாப கிரகங்களின் தொடர்பில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாவகத்தின் அதிபதி வலுப்பெற்று இருக்க வேண்டும். அல்லது பாதிப்படைத்த பாவகம் மற்றும் கிரகம் வலுப்பெற்ற சுபர் பார்வையில் இருக்க வேண்டும்.

இதற்கு அடுத்ததாக மிக முக்கியமான விஷயம் எதுவென்றால் ஜாதருடைய வாழ்நாள் முழுமைக்கும் நடைபெறக்கூடிய தசா புத்திகள். ஜோதிடத்தில் தசா புத்திகளின் பங்கு மிக மிக முக்கியமானது  ஜாதகருடைய வாழ்க்கை  எப்படிப்பட்ட பாதையில் செல்லும் என்பதை நிர்ணயம் செய்வதில் தசா புத்திகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கின்றன.#Iniyavan

ஒரு ஜாதகம் இயல்பிலேயே எவ்வளவு யோகம் மிக்கதாக இருந்தாலும் யோகத்தை தரக்கூடிய கிரகங்களின் தசா புத்திகள் நடப்பில் இல்லாத பொழுது அந்த கிரகங்களின் பலனை ஜாதகரால் உணரவே முடியாது. அதுபோல ஜாதக ரீதியாக ஜாதகருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பாதிப்பு நடக்க வேண்டும் என்ற அமைப்பு இருக்கிறது என்றாலும் பாதிப்பை தரக்கூடிய கிரகங்களின் தசா புத்திகள் நடப்பில் வரவேண்டும். அப்பொழுதுதான் அந்த பாதிப்பு ஜாதகருக்கு நடக்கும். நடப்பில் வராத பொழுது பெரிய அளவில் பாதிப்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இதிலிருந்தே தசா புத்திகளின் முக்கியத்துவம் எந்த அளவிற்கு முக்கியம் என்பது உணர முடியும்.

ஒரு சிலருக்கு வாழ்க்கையில் ஒரு சில முயற்சிகளிலேயே எல்லா விஷயங்களும் கை கொடுகின்றன. ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் வெற்றியினை தருவதில்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணம் தசா புத்திகள் தான். தசா புத்திகள்தான் ஜாதகருக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை நிர்ணயம் செய்கின்றன.
லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுக் குறைந்த நிலையில் இருந்தாலும், மேற்கண்ட லக்னத்திற்கு ஏற்ற யோக தசாக்கள் நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தின் வாயிலாக எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கை சூழலில் பிழைத்துக் கொள்கின்றார்கள்.
தாய் தந்தையினர், உறவினர்கள், வாழ்க்கை துணை, நண்பர்கள் என யாரேனும் ஒருவருடைய உதவியால் ஜாதகருடைய வாழ்க்கை போதுமானவரை நல்லபடியாகவே செல்லும். யாருடைய உதவியின் வாயிலாக ஜாதகருடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சுய ஜாதகத்தில் எந்த பாவகம் அல்லது எந்த கிரகம் வலுப்பெற்று இருக்கிறது என்பதை வைத்து சொல்லிவிட இயலும். யோக தசாக்கள் தொடர்ச்சியாக  நடக்கும் பட்சத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி சரியில்லாத நிலைகளில் இருந்தால் கூட ஜாதகர் பெரிய அளவிற்கான துயரங்களை சந்திக்க போவதில்லை

யோக தசாக்கள் என்றால் என்ன?

நவகிரகங்களை பொதுவாக இரு அணியாக வகைப்படுத்தலாம்.
 1.குரு அணியில் வரக்கூடியவர்கள்
 2.சுக்கிர அணியில் வரக்கூடியவர்கள்

குரு அணியில் வரக்கூடிய கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், 
குரு..

சுக்கிர அணியில் வரக்கூடிய கிரகங்கள் சனி, புதன் மற்றும் சுக்கிரன்..

நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள் சுய ஜாதக ரீதியாக எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றார்களோ அதற்கு ஏற்ப செயல்படுவார்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் செவ்வாயின் லக்னமான விருச்சகத்தில் பிறந்தவர் என்றால் நீங்கள் குரு அணி லக்னத்தில் வரக்கூடியவர் ஆவார். அதே போல  புதனுடைய லக்னமான மிதுனத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சுக்கிர அணி லக்னத்தில் பிறந்தவர் என்று அர்த்தம்.

குரு அணியில் பிறந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சூரிய, சந்திர, செவ்வாய் குருவின் தசா காலங்கள் வருவது சிறப்பு..

அதேபோல் சுக்கிர அணியில் பிறந்தவர்களுக்கு சனி, புதன்,  சுக்கிரனுடைய தசா காலங்கள் வருவது சிறப்பு.

நிழல் கிரகங்களான ராகு, கேதுக்களைப் பொருத்தவரை நின்ற வீட்டு அதிபதியினை போல் செயல்படுவார்கள் என்பதால் ராகு,கேதுக்கள் குரு அணியில் பிறந்தவர்களுக்கு சூரிய, சந்திர, செவ்வாய் மற்றும் குருவின் வீடுகளில் அமைவது சிறப்பு. அதேபோல சுக்கிர அணியில் பிறந்தவர்களுக்கு ராகு, கேதுக்கள் சனி, புதன், சுக்கிரனுடைய வீடுகளில் அமைவது சிறப்பு..

மேற்கண்ட அமைப்பின் அடிப்படையில் தசா காலங்கள் தொடர்ச்சியாக வருவதைத் தான் யோக தசாக்கள் என்று கூறுகின்றோம்.

அவயோக தசாக்கள் என்றால் என்ன?

குரு அணி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சனி, புதன், சுக்கிர தசாக்கள் வருவது சரியற்ற நிலை. அதேபோல் சுக்கிரன் அணி இலக்னங்களில் பிறந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சூரிய, சந்திர, செவ்வாய் குரு தசாக்கள் வருவதும் நல்லதல்ல. 

இதுபோன்று தசா காலம் முற்றிலுமாக மாறி தொடர்ந்து வரக்கூடிய பட்சத்தில் மட்டுமே , சுய ஜாதக ரீதியாக பாதிப்படைந்த பாவகம் அல்லது கிரகத்தின் வாயிலாக ஜாதகருக்கு கஷ்டங்கள் இருக்கும். எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பது மேற்கண்ட கிரகத்திற்கு கிடைத்திருக்க சுப, பாப தொடர்புகள் மற்றும்  லக்னம்,லக்னாதிபதியின் நிலையைப் பொருத்தது ஆகும்.

அவயோக கிரகங்களின் தசா காலமே தொடர்ச்சியாக வந்தாலும் லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்கும் பொழுது மேற்கண்ட தசாவால் ஜாதகருக்கு பெரிய அளவிற்கான பாதிப்புகள் இருக்காது.

லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து யோக தசாக்களும் எவ்வித பங்கமின்றி நடைபெறக்கூடிய பட்சத்தில் ஜாதகர் பிறந்ததிலிருந்து தன்னுடைய வாழ்வின் இறப்பு வரை எல்லா விஷயங்களிலும் போதுமானவரை நல்ல சூழலில் மட்டுமே இருப்பார்.

அவயோக கிரகங்களின் தசா காலங்கள் தொடர்ச்சியாக நடப்பில் இருந்தாலும் மேற்கண்ட கிரகங்கள் துர்ஸ்தான வீடுகளுடன் தொடர்பு கொள்ளாமல் மூன்று, ஆறு, பத்து, 11 போன்ற நட்பு வீடுகளில் நின்று தசா நடத்துவது பெரிய பாதிப்புகளை தராத சூழ்நிலையில் இருக்கும்.
 
லக்னம் மற்றும் லக்னாதிபதி, ராசி சரியற்ற நிலையில் இருந்து அவயோக கிரகங்களின் தசா காலங்கள் தொடர்ச்சியாக வரக்கூடிய பட்சத்தில் ஜாதகர் திசை மாறிப் போவார். எதை படிக்க வேண்டுமோ அதை படிக்காமல் வேறு ஒன்றை படிப்பார்.  வாழ்க்கைக்கு தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்திக்கொண்டு வாழ்க்கையை சரி இல்லாத சூழலுக்கு கொண்டு சென்று இருப்பார்.

லக்னம், லக்னாதிபதி, ராசி போன்றவை சரியற்ற நிலைகளில் இருப்பது என்பது எதைக் குறிக்கிறது என்றால் லக்னம் பாபர்களின் தொடர்பிலிருந்து லக்னாதிபதியும் பாபர்களின் தொடர்பினை பெற்று அல்லது இயல்பாவே ஸ்தான பலத்தை இழந்து பலவீனமான நிலையில் இருந்து, ராசியும் பாபர்களின் தொடர்பினை பெற்று பலவீனமாக இருப்பதையே சரியற்ற நிலை என்கிறோம்

லக்னம் பாபக்கிரகங்களின் தொடர்பில் பலவீனமாக இருந்து, லக்னாதிபதியும், ராசியும், சரியற்ற  நிலையில் இருந்து, தசா புத்திகளின் வரிசையும் சரியில்லாமல் அவயோக கிரகங்களின் தசாக்கள் தொடர்ச்சியாக நடப்பில் இருக்கும் பொழுது மட்டுமே ஒருவர் சராசரிக்கும் கீழான  நிலையில் அதாவது  உயிர் வாழ்வதற்கு போதுமான விஷயங்களை விஷயங்களை மட்டுமே செய்வதற்கு  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜாதகர் இருப்பார். 

லக்னம், லக்னாதிபதி மற்றும் ராசி போன்றவை சரியில்லாத நிலைகளில் இருந்தால் கூட தசா புத்திகள் தொடர்ச்சியாக நன்றாக இருந்துவிட்டால் வாழ்க்கை ஓரளவிற்கு நன்றாக செல்லும். லக்னம், லக்னாதிபதி, ராசி சரியில்லாத நிலைகளில் கேந்திர, (4,7,10) திரிகோணங்களை(1,5,9) இயக்கக்கூடிய தசாக்கள் தொடர்ச்சியாக வருமாயின் வயதிற்கு ஏற்ற வகையில் ஓரளவேனும் ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்.#Iniyavan

கேந்திர,திரிகோண பாவகங்களை இயக்கக்கூடிய தசாக்களுக்கு பதிலாக ஆறு, எட்டு போன்ற துர்ஸ்தான பாவகங்களை இயக்கக்கூடிய தசா புத்திகள் தொடர்ச்சியாக வருமாயின் ஜாதகர் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி பிரச்சனைகளுக்கு உள்ளாகுதல்,  தீராத நோய் பாதிப்பு, விபத்தினை சந்தித்து செயல்பட முடியாத நிலைக்குச் செல்லுதல், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகுதல், தேவையற்ற தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவில் பணத்தை முதலீடுகளை செய்து கடன் பட்டு போதல், உறவுகளுடன் பகையாகுதல்,  உறவுகளை பகைத்துக் கொள்ளுதல், தொடர்ச்சியாக முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையில் இருத்தல், குடும்பத்தை பிரிந்து வாழுதல் போன்ற சூழலில் ஜாதகர் இருப்பார். இது போன்ற சூழ்நிலைகளில் ஜாதகர் இருக்கும் பொழுது அவற்றிலிருந்து விடுபட்டு வருவதற்கு மற்றொருவர் நல்ல அறிவுரைகளை  கூறினாலும் அதை  ஏற்றுக்கொள்ள முடியாத பிடிவாதமான மனநிலையில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற முரண்பாடான குணத்தினைக் கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
ஏதேனும் ஒரு வகையில் லக்னம், லக்னாதிபதி, ராசி போன்றவைகளுக்கு வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பு இருக்கும்பொழுது மட்டுமே பிறருடைய நல்ல அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய மனோபாவம் ஜாதகரிடத்தில் இயல்பாக இருக்கும்.

லக்னம் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து, யோக தசாக்களும் நடப்பில் உள்ள ஒருவருக்கு வாழ்க்கை நல்ல பாதையில் செய்யும். நடக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தும் தகுந்த காலத்தில் சரியானபடி நடக்கும். முயற்சிக்கு ஏற்ற பலன், அங்கீகாரம், புகழ் என அனைத்தும் கிடைத்தே தீரும்.#Iniyavan நன்றிகள்
Astrologer 
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology📞 Cell: 9659653138

📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks

திங்கள், 7 ஜூலை, 2025

ஏழாம் அதிபதி உச்சம் பெற்று இருந்தும் ஏன் 41 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை?

கடந்த புதன்கிழமை அன்று "பலன் தரும் ஜோதிட தகவல்கள்" என்ற பகுதியில் எட்டாவது விதியாக  "இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் அதிபதி உச்சம் பெற்று இருந்தும்" திருமணம் தாமதமாவது ஏன்? என்ற கேள்விக்கு ஏழாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும், புத்திர பாவகமான ஐந்தாம் பாவகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான நிலையில் இருக்கும்பொழுது, புத்திர பாக்கியம் தாமதமாக கிடைக்க வேண்டும் என்ற விதி அடிப்படையில் திருமணம் தாமதமாகும் என்று குறிப்பிட்டு இருந்தேன். 

ஒரு சில ஜோதிட ஆர்வலர்கள் இந்த விதியை ஒரு உதாரண ஜாதகத்தின் வாயிலாக விளக்க முடியுமா? என கேட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்று ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம். #Iniyavan 

"ஜாதகத்தில் ஏழாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி ஜாதகரின் திருமணத்தை குறிக்கின்றன. குறிப்பாக ஏழாம் பாவக அதிபதி ஆட்சி அல்லது உச்சத்தில் இருப்பது திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு நல்லது எனப் படித்திருப்போம் — இது திருமணம் தாமதமின்றி நடைபெறும் என்பதைக் குறிக்கிறது. ஆனால், எல்லா சூழ்நிலைகளிலும் இது பொருந்துமா? என்றால் கேள்வி எழுகின்றது. ஏனெனில், சில சமயங்களில் ஏழாம் அதிபதி வலுவான நிலையிலும், திருமணம் மிக அதிக தாமதமாகவே நடைபெறுகிறது. இதற்கான ஒரு முக்கியமான காரணம், ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தின் நிலைமை  பாதிப்படைந்த ஒன்றாக இருக்கும்.

தனுசு இலக்னம், மீன இராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு தற்பொழுது 41 வயது முடிவடைந்து பத்து மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை இன்னும் திருமணம் ஆகவில்லை. இராசிக்கு பத்தாம் அதிபதியாக குரு இருப்பதாலும், இலக்னத்திற்கு ஆறாம் வீட்டை குரு பார்ப்பதாலும், அதுமட்டுமின்றி இராசிக்கு இரண்டாம் வீட்டு அதிபதி செவ்வாயினை குரு பார்ப்பதாலும் இவர் ஆசிரியர் தொழில் இருக்கிறார். 

ஒரு ஜாதகத்தில் இலக்னம் மற்றும் இராசிக்கு இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்களுடன் குரு தொடர்பில் இருக்கும் பொழுது அவர் சொல்லிக் கொடுக்கக்கூடிய துறையில் அதாவது மற்றவர்களுக்கு போதிக்கக்கூடிய தொழில் அல்லது  வங்கித்துறை, பணம் சார்ந்த கொடுக்கல், வாங்கல் தொடர்புடைய  துறைகளில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு பேச்சிற்கு காரக கிரகமாகிய புதன் வலுப்பெற்று இருந்து, வாக்கு ஸ்தானம் வலுப்பெற்று இருந்தாலும் வாக்கு ஸ்தான அதிபதி குருவுடைய தொடர்பில் இருந்தாலும் ஜாதகர் ஆசிரியர் தொழிலில் இருப்பார் என்பது விதியாகும்.

 இந்த ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கிறார், அடுத்ததாக வாக்குஸ்தான அதிபதியான இரண்டாம் வீட்டு அதிபதி சனி உச்சம் பெற்ற நிலையில் இருப்பதால்  வாக்கு ஸ்தானம் வலுவடைந்துள்ளது. அதேபோல் இராசிக்கு இரண்டாம் வீட்டு அதிபதியான செவ்வாயும் குருவுடைய பார்வையில் இருக்கிறார். அதன் காரணமாக இவர் ஆசிரியர் தொழிலில் இருக்கிறார்.#Iniyavan

தற்போது 41 வயது முடிந்தும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

இலக்னத்திற்கு ஏழாம் அதிபதியான புதன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கிறார். இராசிக்கு ஏழாம் அதிபதியும் புதனே ஆவார்.  இலக்னம் மற்றும் இராசிக்கு ஒருவரே ஏழாம் அதிபதியாகி, அவர் வலுப்பெற்று இருந்தும், அதாவது ஸ்தான பலத்தின்  அடிப்படையில் உச்சம் பெற்று இருந்தும் 41 வயதை கடந்தும் இவருக்கு இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை என்பதே பிரதான கேள்வி? 

இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் பாவகத்தோடு எவ்வித பாப கிரகங்களின் தொடர்பும் கிடையாது. சில நிலைகளில் இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் பாவகத்தோடு பாவ கிரகங்களின் தொடர்பு இருந்தாலும் திருமணம் தாமதமாகும். இங்கே பாப கிரகங்களின் தொடர்பு இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் இடத்திற்கு  கிடையாது. 

நீங்கள் களத்திரக்காரகனான சுக்கிரன் சூரியனுடன் ஒரே டிகிரியில் அஸ்தங்கமாக இருப்பதால் திருமணம் சார்ந்த விஷயங்கள் தாமதமாகிறது என்று சொல்லலாம். இங்கே சுக்கிரன் சூரியனுடன் மிக நெருங்கிய நிலையில் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும், சுக்கிரன் சந்திர அயோகத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுய ஜாதகத்தில் சந்திரன் முழு ஒளித்திறனுடன் பௌர்ணமி சந்திரனாக இருக்கும் பொழுது அல்லது பௌர்ணமிக்கு முன் நான்கு நாட்கள், பின் நான்கு நாட்களான சந்திரனாக இருக்கும் பொழுது சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இருக்கக்கூடிய சுப கிரகங்கள் வலுப்பெறும் என்பது பொதுவான விதியாகும்.

அதே போல சந்திரனுக்கு  ஆறு, ஏழு எட்டில் இருக்கக்கூடிய கிரகங்கள் பாதிப்பை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் மேற்கண்ட கிரகம் சந்திர அதியோகத்தில் இருக்கும் பொழுது பாதிப்புகள் பெரிய அளவிற்கு இருக்காது என்பதும் மற்றொரு விதியாகும். பௌர்ணமிக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பிறந்த இந்த ஜாதகருடைய ஜாதகத்தில் சந்திரன் ஓரளவு வலுப்பெற்ற நிலையில் குருவின் வீட்டில், குருவின் பார்வையிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு இலக்னத்திற்கு நான்காம் இடத்தில் இருப்பதால் அவர் கூடுதலாக திக்பல அடிப்படையில் வலிமையாகவும் இருக்கிறார். மேற்கண்ட சந்திரனுக்கு ஆறாம் இடத்தில்தான் அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் சந்திர அதியோகத்தில் இருக்கும் பொழுது அஸ்தங்க பாதிப்பு விலகும் என்பதும் ஒரு பொதுவான விதியாகும். அதன் அடிப்படையில் இங்கே சுக்கிரனுக்கு அஸ்தங்க பாதிப்பு பெரிய அளவிற்கு கிடையாது.#Iniyavan

ஏழாம் வீட்டு அதிபதியும் வலுப்பெற்று, சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் சந்திர அதி யோகத்தில் இருந்தும், ஏழாம் இடத்திற்கு எவ்வித பாவ கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்தும் திருமணம் சார்ந்த விஷயங்கள் ஏன் இந்த அளவிற்கு தாமதம் ஆகிறது என்று பார்த்தோமேயானால் இந்த இடத்தில் தான் புத்திர பாவகம் என்று அழைக்கப்படக்கூடிய ஐந்தாம் பாவகத்தின் நிலையையும், ஐந்தாம் பாவக அதிபதியின் நிலையையும் நாம் பார்த்தாக வேண்டும்.
இந்த ஜாதகத்தில் இலக்னத்திற்கு ஐந்தாம் வீட்டை உச்ச சனி பார்த்து, இலக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயையும் உச்ச சனி பார்க்கிறார். இங்கே புத்திர பாக்கியத்தை சுட்டிக்காட்டக்கூடிய ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய், இலக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மறைந்து, நீசம் பெற்ற நிலையில் மேற்கொண்டு, உச்சம் பெற்ற சனியின் பார்வையில் சற்று அதிக பாதிப்படைந்த நிலையில் இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச சனியின் பார்வையில் இருக்கக்கூடிய கிரகங்களின் காரக, ஆதிபத்திய விசயங்களில் ஜாதகருக்கு அதீத தாமதங்கள், காரக ரீதியான குறைபாடுகள் ஏற்படும் என்பதும் ஒரு ஜோதிட விதியாகும்.

அடுத்ததாக இராசிக்கு ஐந்தாம் இடத்தை எடுத்துக் கொண்டாலும், இராசிக்கு ஐந்தாம் வீட்டிலும் செவ்வாயே நின்று, நீசம் பெற்ற நிலையில், சனியின் பார்வையில் இருக்கிறார். அந்த வகையில் இலக்னத்திற்கு ஐந்தாம் பாவகம், இராசிக்கு ஐந்தாம் பாவகம் பாதிப்படைந்த நிலையில் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
இலக்னத்திற்கு ஐந்தாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி வலுப்பெற்ற சனியின் பார்வையில் பாதிக்கப்பட்டிருப்பதும், இராசிக்கு ஐந்தாம் பாவகமும், சனி மற்றும் செவ்வாய் போன்ற பாப கிரகங்களின் தொடர்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் புத்திர பாக்கியம் சார்ந்த விஷயங்கள் அதீத தாமதமாகும் என்பது தெளிவாகிறது. 

இது மட்டுமின்றி  புத்திர பாக்கியத்திற்கு காரக கிரகமான குரு இலக்னத்திற்கு 12-ல் மறைந்து கேதுவுடன் இருக்கிறார். வீடு கொடுத்த செவ்வாயும் நீசம் பெற்ற நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் பாவகம், அதன் அதிபதி பலம் இழந்த நிலையில் இருக்கும் பொழுது புத்திர பாக்கியத்திற்கு காரக கிரகமான குரு வலுத்திருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவிற்கான தாமதம் இருக்காது. இந்த ஜாதகத்தை பொருத்தவரை காரக கிரகமான குரு, இலக்னத்திற்கு 12 மறைந்து கேதுவுடன் இணைந்து நீசனின் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் வீட்டு அதிபதி, கடுமையான பாதிப்படைந்த நிலையில் இருக்கும் பொழுதும் அவருக்கு புத்திர பாக்கியம் சார்ந்த விஷயங்கள் தாமதமாக வேண்டும் என்பதன் அடிப்படையிலும் திருமணம் தள்ளிப் போகும். மேற்கண்ட விதியின் அடிப்படையில்தான் இந்த ஜாதகருக்கு இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் இடம்,  ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும், புத்திர பாவகமான ஐந்தாம் பாவகம் இலக்னம் மற்றும் இராசிக்கு பாதிக்கப்பட்டு இருப்பதால் திருமணம் இந்த அளவிற்கு தாமதம் ஆகியது.

மேற்கண்ட ஜாதகருக்கு திருமணம் நடக்குமா?

வாழ்க்கைத் துணை சார்ந்த விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடிய ஏழாம் வீட்டு அதிபதி இலக்னம் மற்றும் இராசிக்கு ஒரே கிரகமே அதிபதியாக வந்து இங்கே உச்சம் பெற்ற நிலையில் வலுத்திருப்பதாலும், மண வாழ்க்கைக்கு  காரக கிரகமான சுக்கிரன், சந்திரனின் அதியோகத்தில் இலக்னத்திற்கு திரிகோண பாவகமான ஒன்பதாம் பாவகத்தில் இருப்பதாலும் நிச்சயம் திருமணம் நடக்கும். தற்போது அவருக்கு சுக்கிர திசையில் ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. சுய ஜாதகத்தில் ராகு சுக்கிரனுடைய வீட்டில், குருவின் பார்வையில் இருக்கிறார்.
அதுமட்டுமின்றி இலக்னாதிபதி குருவிற்கு ஏழாம் பாவகத்தில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் ராகு புத்தி முடிவடைவதற்குள் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு.

சுக்கிரனுடைய வீட்டில் நின்ற ராகு கேதுக்கள் திருமண பாக்கியத்தை தங்களுடைய தசா புத்திகளில் தருவார்கள் என்பதன் அடிப்படையில் இங்கே ராகு புத்தி முடிவடைதற்குள்  ஜாதகர் சற்று கடினமாக முயற்சி செய்தால் திருமணம் நடப்பதற்காக வாய்ப்புகள் உண்டு. 

 இலக்னம் மற்றும் இராசிக்கு ஐந்தாம் பாவகம் பாதிக்கப்பட்டிருந்து, காரக கிரகமான குருவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது, ஐந்தாம் பாவகத்தை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளிலும், காரக கிரகமாகிய குருவை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளிலும் ஜாதகர் சற்று அதிக கவனம் செலுத்தும் போது பாதிப்புகள் சரியாகி திருமணம் நடக்கும்.#Iniyavan

 அவ்வகையில் குருவிற்குரிய வழிபாட்டினையும்  மற்றும் ஐந்தாம் அதிபதியான செவ்வாயினை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் ஒன்றான முருக வழிபாட்டையும் ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கடைபிடிப்பது நலம் தரும்.

இந்த உதாரண ஜாதகம் நமக்கு உணர்த்தும் மெய்ப்பொருள் என்னவென்றால், ஜாதகரின் திருமணம் எப்போது நடக்கும் என்பதை தீர்மானிப்பது ஏழாம் பாவகத்தின் தன்மையை மட்டும் வைத்து அல்ல. சில சமயங்களில், புத்திர பாக்கியத்துடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய ஐந்தாம் பாவகத்தின் பாதிப்பும் திருமண தாமதத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. எனவே திருமணம் எப்போது நடக்கும்? ஏன் அதிக தாமதங்கள் ஏற்படுகிறது என்ற கேள்வி எழும் பொழுது ஏழாம் பாவகத்தின் நிலையை மட்டும் பார்க்காமல், ஐந்தாம் பாவகத்தின் நிலையினையும் சற்று கூர்மையாக கவனிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்...
 நன்றிகள்
 Astrologer 
 ப.இனியவன் கார்த்திகேயன் 
 MA Astrology
 Cell: 9659653138

📲 

சனி, 21 ஜூன், 2025

மூன்றாவது பாவகத்தின் தனித்தன்மைகள்

🌟 எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் இந்த விஷயத்தை தொடர்ந்து செய்ய மற்றவர்களின் தூண்டுதல், மோட்டிவேஷன் உங்களுக்கு தேவை இல்லை எனில் உங்களுடைய ஜாதகத்தில் மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொருள்..#Iniyavan
🔹 மூன்றாம் பாவகம் செயலிழந்தவர்களுக்கு ஊக்கப்படுத்துபவர்கள் கண்டிப்பாக தேவை.
🔹 12 பாவங்களில் முயற்சி ஸ்தானமான மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தாலே சுய முயற்சியால் ஜாதகர் முன்னேற்றம் அடைந்து விடுவார்.
🔹 வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எவருடைய ஆதரவும் உதவியும் இவர்களுக்கு தேவையில்லை.
🔹 வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தன்னுடைய முயற்சி ஒன்றை மூலதனம் என்பதை அறிந்து வைத்திருப்பவர்கள்.
🔹 மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பவர்கள் எந்த விஷயத்தில் பெரிய இழப்பினை சந்தித்தாலும் அதற்காக முற்றிலுமாக துவண்டு போய்விட மாட்டார்கள்.
🔹 இழந்ததை மீட்கக்கூடிய திறனை இயல்பாகவே பெற்றிருப்பார்கள்.
🔹 மூன்றாம் பாவகம் இடமாற்றத்தை சுட்டிக்காட்டக்கூடிய பாவகம் என்பதால் மூன்றாம் பாவம் வலுப்பெற்றவர்கள் இடமாறுதல் மூலம் நல்ல உயர்வையும் புகழையும் அடைவார்கள்.
🔹 அடிக்கடி ஊர்மாற்றம், வீடு மாற்றம், வெளியூரில் சென்று கல்வி பயில்வது போன்றவை மூன்றாவது பாவகம் வலுப்பெற்றுகளுக்கு நடந்திருக்கும்.
🔹 பொதுவாகவே மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும் பொழுது வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய எந்த ஒரு மாற்றமும் பெரும்பாலும் நன்மையை தரக்கூடியதாக இருக்கும்.
🔹 மூன்றாம் பாவகம் நல்லநிலையில் இருக்கும் போது தொலைதொடர்பு, கம்யூனிகேஷன், மீடியா, எழுத்துத்துறை, இசை, ஓவியம், நடனம், கலை சார்ந்த தொழில்களில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
🔹 மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும் போது பொன், பொருள் சேர்க்கையில் ஆர்வம் இருக்கும்.
🔹 மூன்றாம் பாவகம் இருக்கும் பொழுது அவருடைய கையெழுத்து தெளிவாக அழகாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
🔹 தன் வாழ்நாளில் நடக்கக்கூடிய முக்கிய விஷயங்களை வரவு, செலவு திட்டங்களை ஒருவர் அனுதினமும் எழுதி வைக்கிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில் மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம்.
🔹 சுய ஜாதகத்தில் மற்ற பாவங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தாலும் மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும் பொழுது மற்ற பாவக பாதிப்புகளை தன்னுடைய தொடர் மற்றும் மாற்று முயற்சிகளின் வாயிலாக முயற்சி எளிதில் கடப்பார்.#Iniyavan
🔹 எல்லா விஷயங்களிலும் இரு திட்டங்கள், அதாவது ஒன்று சரி இல்லாமல் போனாலும் கூட மற்றொரு திட்டத்தின் வாயிலாக அதை சரி செய்யக்கூடிய முயற்சிகளை மூன்றாம் பாவகம் வலுப்பெற்றவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பார்கள்.
🔹 விளையாட்டில் ஆர்வம், உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.#Iniyavan
🔹 போட்டி தேர்வுகளில் தொடர் தோல்விகளை தழுவிக் கொண்டிருந்தாலும் அதற்காக வருத்தப்படாமல் தொடர்ச்சியாக முயற்சியை ஒருவர் எடுத்துக் கொண்டே இருக்கிறார் என்றால் அவருக்கு ஜாதகத்தில் மூன்றாம் பாவம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொருள்.
🔹 தன்னுடைய முயற்சி நிச்சயம் ஒரு கட்டத்தில் வெற்றியைத் தரும் என்ற எண்ணத்தை இயல்பாகவே பெற்றிருப்பார்கள்.
🔹 மேற்கண்ட எண்ணமே இவர்களை தொடர்ந்து செயல்பட செய்து ஒரு கட்டத்தில் வெற்றியும் புகழையும் ஈட்டி தரும்.
🔹 மூன்றாம் பாவம் முயற்சி, தைரியம், சகோதரர்கள், பேச்சுத்திறன், எழுத்து, சுய முன்னேற்றம் போன்றவற்றை குறிக்கும் முக்கியமான பாவமாகும்.
🔹 இது வலுவிழந்திருந்தால், செயல்பாடுகளில் உற்சாகக்குறைவு, முயற்சியில் இடைஞ்சல், பயம், சோம்பல், தாமதம் போன்றவை ஏற்படலாம்.
---

🛠️ மூன்றாம் பாவத்தை வலுப்படுத்த வாழ்வியல் பரிகாரங்கள் (Practical Remedies):

➊ 📝 தினசரி கட்டுப்பாடு மற்றும் முயற்சி பழக்கம்:
• 🕗 நேரம் தவறாமல் தூங்கவும் எழவும் பழக்கப்படுங்கள்
• 📋 அன்றாடக் குறிக்கோள்கள் / To-do List எழுதி, ஒரு முறையில் செயல்படுங்கள்
• ✅ முயற்சியைத் தவறாமல் செய்வதே மூன்றாம் பாவகத்திற்கான ஆகச் சிறந்த பரிகாரம்

➋ 🏃 உடற்பயிற்சி (Physical Activity):
• 🧠 மூன்றாம் பாகம் பலம் இழந்தவர்களுக்கு இயல்பாகவே தைரியக் குறைவு இருக்கும்
• 🏋️‍♀️ தங்களுடைய உடலை வலுப்படுத்திக் கொள்வதற்கான உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளில் அனுதினமும் ஈடுபட வேண்டும்

➌ 👨‍👩‍👧 சகோதர உறவைப் பாதுகாத்தல்:
• 🤝 மூன்றாம் பாவம் தம்பி / தங்கை பாவமாகவும் காணப்படுகிறது
• ❤️ அவர்களுடன் நல்ல உறவு பேணுவது அவசியம்
• 🎁 உதவி செய்வதும், அன்பு வைப்பதும் முக்கிய பரிகாரம்

➍ 🧘 தைரியச் செயல்கள் – Mind Training:
• 🌱 பெரிய அளவிற்கான எதிர்பார்ப்புகள் இல்லாமல்
• 🧭 “நான் முயற்சிக்கிறேன், தோல்வியும் ஓர் அனுபவம்” என்ற மனப்பாங்கு வளர்த்தல்
• 📖 சாதனையாளர்களின் வாழ்க்கைக் வரலாறுகள் வாசிக்கவும்

➎ 🎁 தானம் மற்றும் சேவை:
• ✋ கையால் செய்யக்கூடிய உதவிகளை (volunteering) செய்யுங்கள்
• 📚 கல்வி, எழுத்து, போட்டி தேர்விற்கான புத்தகங்களை தானம் செய்யலாம்

➏ 🗂️ எதிலும் backup plan வைத்திருக்கும் பழக்கத்தை வளர்த்தல்:
• 🎯 அனுதினமும் உங்களுக்கு பிடித்தமான விளையாட்டினை மேற்கொள்ளலாம்
• 🧘 மனதை புத்துணர்வாக வைத்துக்கொள்ள
• 📚 நூலகத்திற்கு சென்று புதிய புத்தகங்கள் படித்து
• 🛠️ நீங்களாக ஒரு திறனைக் கற்றுக் கொள்வது போன்றவை
---
🔹 இவை அனைத்தும் மூன்றாம் பாவகத்தின் தனித்திறன்களை அன்றாட வாழ்வில் செயல்படுத்த உதவும்.
🔹 பரிகாரங்கள் என்பது வெறும் பூஜை அல்ல;
🔹 வாழ்வியல் பழக்கங்களை மாற்றியெடுக்கும் முயற்சி என்பதே உண்மை---

🙏 நன்றிகள்
      Astrologer 
     ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
     📞 Cell: 9659653138

📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks

லக்னாதிபதி நின்ற பாவகமும் உங்கள் வாழ்க்கையின் நோக்கமும்...



ஜோதிடத்தில், வாழ்க்கையின் ஆழமான பாதையைக் கூர்ந்து புரிந்து கொள்ள ஒரு முக்கியமான வழி, உங்கள்  அதிபதியான லக்னாதிபதியின் (Lagna Lord)  நிலையை கவனிப்பதாகும். இது உங்கள் ஆளுமையை வடிவமைக்கும் முக்கிய கிரகமாக இருக்கும், மேலும் உங்கள் ஆன்மா எதை நோக்கி இயற்கையாக ஈர்க்கப்படும் திசையை இது சரி படிக்கின்றது. இந்த லக்னாதிபதி எந்தத் திரிகோணத்தில் (Trikona)—தர்ம, அர்த்த, காம, அல்லது மோட்ச—நிலைகொண்டிருக்கிறதோ, அதன் அடிப்படையில் உங்கள் வாழ்க்கை நோக்கம் பல்வேறு விதமான சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கும்.#Iniyavan

தர்ம திரிகோணத்தில் இலக்னாதிபதி (1, 5, 9 வீடுகள்)

இந்த திரிகோணம் ஆன்மிக நோக்கம், தர்மம் மற்றும் கல்வியை பிரதிபலிக்கிறது.

1 ஆம் வீடு: நீங்கள் உங்கள் உண்மையான சுயத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். நீங்கள் பிறருக்கு வழிகாட்டி, ஆற்றல் மிகுந்தவர். மற்றவர்தளுடைய கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படுவது இவர்களுக்கு இயல்பான குணமாக இருக்கும். எல்லா வீடு சவால்களையும் எதிர் நோக்க கூடிய  தைரியத்தை பெற்றிருப்பார்கள்

5 ஆம் வீடு: கல்வி, குழந்தைகள், கலை மற்றும் படைப்பாற்றலுடன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை. உங்களுக்கான ஆனந்தம் கல்வியிலும் படைப்பாற்றலிலும் இருக்கும். பெரும்பாலும் லக்னாதிபதி இங்கே இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடிய குணம் அதிகம் இருக்கும். இரக்க மனப்பான்மை கொண்டவர்களாக பிறர் துன்பத்தை அனுபவிக்கும் பொழுது அதில் தன்னை பொருத்தி பார்த்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

9 ஆம் வீடு: ஆன்மிகம், உயர்ந்த ஞானம், நீண்ட பயணங்களில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கலாம். இயல்பிலேயே இறை பக்தியில் நாட்டம் இருக்கும்.குருமார்களின் ஆசிர்வாதம் பெற்றவர்கள், மெய் ஞான தத்துவங்கள் மற்றும் விசாலமான பார்வை, பெருந்தன்மையான குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். தந்தைக்காக சில தியாகங்களைச் செய்பவர்களாக இருக்கலாம்.தான தர்மங்களில் மிக விருப்பம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். தன்னலமின்றி பிறருடைய நலத்திற்காகவும் மனிதன் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாக பெற்று இருப்பார்கள்.#Iniyavan

அர்த்த திரிகோணத்தில் லக்னாதிபதி (2, 6, 10 வீடுகள்)

இவை பொருளாதார நிலைத்தன்மை, சேவை மற்றும் தனிப்பட்ட திறன்களுடன்  தொடர்புடையவை.

2 ஆம் வீடு: குடும்பம், செல்வம், பேச்சுத்திறன், மற்றும் மதிப்பீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிலையை அடைந்தாக வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடத்தில் பிரதானமாக இருக்கும்.

6 ஆம் வீடு: சவால்கள், எதிரிகள், போட்டிகள், சேவை. வாழ்க்கையின் நோக்கம் கடுமையான முயற்சியில் இருக்கலாம். பல சவால்களைப் கடந்து வாழ்க்கையில் முன்னேறக்கூடிய குணத்தை இயல்பாக பெற்று இருப்பார்கள். பெரும்பாலும் போராட்டமான சவால்கள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். போராடியே எதையும் பெற்றாக வேண்டும் என்ற கடினமான மனோபாவத்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.

10 ஆம் வீடு: தொழில், புகழ், பொது வாழ்க்கையில் விருப்பம், நீங்கள் சமூகத்திற்காக செயல்பட வேண்டும்.
தொழிலில் உயர்நிலையை அடைய வேண்டும் எனும் ஆளுமைத் திறன் உடையவர்களாக இருப்பார்கள்

காம திரிகோணத்தில் லக்னாதிபதி (3, 7, 11 வீடுகள்)

இவை ஆசைகள், உறவுகள் மற்றும் சமூக உறவுகளை பிரதிபலிக்கின்றன. ஜாதகரின் உடைய தனிப்பட்ட விருப்பங்களை இங்கு பிரதானமாக இருக்கும்

3 ஆம் வீடு: தைரியம், தொடர்புகள், கலைகள் சார்ந்த  தொழில் முயற்சிகள். சுய முயற்சியில் எதையும் பெற்றாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கக்கூடும்.

7 ஆம் வீடு: வாழ்க்கைத் துணை, கூட்டாளிகள், மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல், உறவுகள் மூலம் வளர்ச்சி. யாரையாவது சார்ந்து வாழுதல்..

11 ஆம் வீடு: நண்பர்கள், லாபங்கள், குழு உழைப்பு, தன்னுடைய அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வதே இவர்களுடைய முக்கிய வேலையாக இருக்கும்.#Iniyavan

உலகத்தில் கிடைக்கக்கூடிய எல்லாவிதமான சந்தோசங்களையும் அனுபவித்தாக வேண்டும் என்ற மனோபாவங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் எனும் மனநிலையே இவர்களுக்கு பிரதானமாக இருக்கும். வாழ்க்கைத் துணை மீது அதிக விருப்பம் மற்றும் எதிர்பார்புகள், பொழுதுபோக்கு மற்றும்உல்லாச விஷயங்களில் மற்றவர்களுடன் கூடுதல் இருக்கும் போது கொண்டவர்களாக இருப்பார்கள்.எல்லா விஷயங்களிலுமா தன்னுடைய லாபம், தன்னுடைய இன்பமே பிரதானம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். #Iniyavan 

மோட்ச திரிகோணத்தில் லக்னாதிபதி (4, 8, 12 வீடுகள்)

இவை ஆன்மிக வளர்ச்சி, உள்நோக்கு மற்றும் விடுதலைக்கான தேடல். முக்தியை நோக்கிய பாதை..

4 ஆம் வீடு: பாதுகாப்புணர்வு முக்கியம், எல்லா விஷயங்களும் தனக்கான மன அமைதி கெடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அன்னை மற்றும் குடும்பத்திற்காக வாழுதல்.. 

8 ஆம் வீடு: நிறைய மாற்றங்கள், மறைபொருள் விஷயங்களில் அதிக நாட்டம், நிறைய தடை தாமதங்களை சந்தித்தல், தனித்துவமான சிந்தனை திறன் கொண்டவர்களாக இருக்கலாம்..

12 ஆம் வீடு: தனிமை, துறவு, வெளிநாட்டு அனுபவங்கள், ஆன்மிக பயணம். போக விஷயங்களில் மற்றவர்களை விட சற்று கூடுதலான நாட்டம், பிறந்த இடத்தை தவிர்த்து வெளி தேசங்களுக்கு சென்று பொருளீட்டுவதில் ஆர்வம் அங்கே நிரந்தரமாக வசிப்பிடத்தை அமைத்துக் கொள்ளுதல்.

திரிகோணங்களின் செயல்பாடுகள்

பலவித கிரக நிலைகள் ஒரே நேரத்தில் பல திரிகோணங்களை செயல்படுத்தலாம். உதாரணமாக, லக்னாதிபதி 3ஆம் வீட்டில் இருந்தாலும், பல கிரகங்கள் 5 ஆம் வீட்டில் இருந்தால், தர்ம திரிகோணத்தில் லக்னாதிபதி நின்ற பலனும் உங்களுக்கு பொருந்தக்கூடும். அதுமட்டுமின்றி லக்னாதிபதி எந்த திரிகோண அதிபதியுடன் இணைந்துள்ளாரோ லக்னாதிபதியை எந்த திரிகோண அதிபதிகள் பார்க்கின்றார்களோ அதற்குரிய குணத்தையும் ஜாதகர் இயல்பாகவே பெற்றிருப்பார்.
உங்கள் லக்ன அதிபதி எந்த வீட்டில் இருக்கிறான் என்பதை ஆராய்வது, உங்கள் வாழ்க்கையின் சுயநிலை நோக்கத்தை அறிந்து கொள்ள உதவும். இது உங்கள் வாழ்க்கையை பெரியளவிலான எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் இன்றி உங்களுக்கான வாழ்வினை தெளிவாகவும், சீராகவும் வழிநடத்த உதவும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

இயற்கை சுப கிரகங்கள் மறைந்தால் பார்வையின் பலம் குறையுமா?


சுப கிரகங்கள் மறைந்தால் அதாவது லக்னத்திற்கு மறைவு ஸ்தான வீடுகளில் நின்றால் பார்வை பலம் குறையுமா என்று கேட்டால் கிடையாது. பார்வை பலம் கண்டிப்பாக இருக்கும். ஒரு கிரகத்தின் பார்வை பலம் என்பது எதனைப் பொருத்து அமையும் என்றால் அந்த கிரகத்தின் ஸ்தான பலத்தை பொறுத்துதான் அமையும்.  அதாவது அக்கிரகம் உச்சமா? ஆட்சியா? மூலத்திரிகோண வீட்டில் உள்ளதா? நட்பு வீடா? பகை வீடா? நீசநிலையா? என்பதை பொறுத்தது அதாவது மேற்கண்ட நிலைகளில் கிரகம் எந்த அளவிற்கு வலுவான அளவில் ஸ்தான பலத்தை பெற்றுள்ளதோ அதற்கு ஏற்ப பார்வை பலம் இருக்கும் என்பதே நிதர்சனம். #Iniyavan 

மறைவு ஸ்தானத்தில் நின்று விடுவதால் ஒரு இயற்கை சுப கிரகத்தின் பார்வை பலம் குறைந்து  என எடுப்பது தவறான கருத்தாகும்.

உதாரணமாக சிம்ம லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு குரு 12 இல், கடகத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் போது, அவருக்கு பார்வை பலம் இல்லை என எடுப்பது தவறான கருத்து.இங்கே குரு ஸ்தான பல அடிப்படையில் உச்சம் பெற்ற நிலையில் இருப்பதால், பார்வை பலம்  இயல்பை விட அதிகமாக இருக்கும்.

இதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்றால் அவர் பார்வை படக்கூடிய பாவகங்கள் அல்லது பார்வை பெறக்கூடிய கிரகங்கள் வாயிலாக ஜாதகர்  பலன்களை அனுபவிப்பார்.

4 ஆம் பாவகத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் நான்காம் இடம் குறிக்கும் விஷயங்களான நிலம், வீடு, வாகனம், கல்வி, தாயார் ஆதரவு போன்றவற்றில் நல்ல பலன்களை பெறுவார்.

ஆறாம் பாவகத்திற்கு குரு பார்வை இருப்பதால் அடிமை உத்யோகம், குருவின் காரகத்துவம் சார்ந்த துறைகளான ஆசிரியர், வங்கித்துறை, பணம் சார்ந்த துறைகள், தங்கம் போன்ற அணிகலன்கள் சார்ந்த துறைகளில் இருக்க வாய்ப்புண்டு.
சுப கடன்கள், லக்னாதிபதி வலுவிற்கு ஏற்ப நோய் தொந்தரவு  போன்ற பலன்கள் உண்டு. எட்டாம் பாவகத்திற்கு குரு பார்வை இருப்பதால் ஆயுள் பலம், தீடிர் அதிர்ஷ்டம், வெளி தேசங்களில் வசிப்பதற்கான சூழல் போன்ற பலன்களைத் தருவார்.#Iniyavan

எப்போது பார்வை பலம் குறையும்?
   
சனி,ராகு போன்ற பாபர்களுடன் மிக நெருங்கிய நிலையில் இருப்பது, சனி மற்றும் ராகு இணைந்துள்ள நிலையில் சனியின் பார்வையில் சுப கிரகங்கள் உள்ள போதும், ஆட்சி, உச்சம் பெற்று எவ்வித சுபர் தொடர்பும் இல்லாத நிலையில் சனியின் பார்வையில் சுப கிரகம் இருக்கும் போதும்,
சனி, செவ்வாய் இணைந்துள்ள நிலையில் சனி, செவ்வாயின் பார்வையில் சுப கிரகம் இருக்கும் போதும் சுப கிரகத்தின் பார்வை பலம் குறையும். சூரியனுடன் ஒரிரு டிகிரியில் மிக  நெருங்கி அஸ்தமானமான நிலையில் சுப கிரகம் இருக்கும் போது பார்வை பலம் குறையும்.
இப்படிப்பட்ட நிலைகளில்  சுப கிரகங்கள் இருக்கும் போது மட்டுமே பார்வை பலம் குறையும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

https://t.me/Astrologytamiltricks

🌕 சந்திரன்: மனதின் அதிபதி, உங்களது எண்ணங்களுக்கான காரகன்...


சந்திரன் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகம். அதை “மனோகரகன்” என்றும், மனதையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவனாகவும் கருதுகிறோம். இந்தக் கிரகம் நமது எண்ணங்கள், உணர்ச்சி நிலைகள், தாய்மையின் தன்மை, நினைவுத்திறன், மனோநிலை, ஸ்ம்ருதி, வளர்ப்பு மற்றும் பராமரிப்பை குறிக்கிறது.

🌙 சந்திரனின் முக்கிய பங்களிப்பு:
சந்திரன் தாயை குறிக்கிறார். தாயின் பராமரிப்பு, அன்பு, பாதுகாப்பு ஆகியவை சந்திரனின் வலிமையைப் பொறுத்தே அமையும். சந்திரன் மனதை அடையாளப்படுத்துகிறார். மனதின் அமைதி, குழப்பம், கவலை, நெகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவை அனைத்தும் சந்திரன் வலிமையைச் சார்ந்தவை.
சந்திரன் நினைவுத்திறனை, ஞாபக சக்தி (memory power) பிரதிபலிக்கிறார்.
உடனடி தீர்மானம் எடுக்கும் திறன், நுட்பமான மனப்பக்குவம், நேர்த்தியான பாவனை—all are ruled by Moon.

🌑 ஜாதகத்தில் அவரது பங்கு:

பூரண சந்திரன் ஜாதகத்தில் இருந்தால் மனவலிமை, கலைத்திறன், புகழ், மக்கள் ஆதரவு போன்றவைகளில் சிறந்த நிலை அடையும். குறைவான ஒளித்திறன் உடைய சந்திரன், பாபியர் தொடர்பு அல்லது மறைவு ஸ்தானங்களில் பலவீனமான நிலையில் இருந்தால் மனதளவில் சோர்வு, மன அழுத்தம், தாயுடன் பிணைப்பு குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
#Iniyavan

🌊 சந்திரனுடன் தொடர்புடைய துறைகள்:

உணர்ச்சி சார்ந்த தொழில்கள்: கவிதை, இலக்கியம், இசை, சமூகவாழ்க்கை, சமூக சேவை, மனநல ஆலோசனை தரும் மனநல மருத்துவர், விளம்பரத்துறை, ஊடகம், தொலைக்காட்சி. உணவு சார்ந்த தொழில்கள், நீர் சார்ந்த தொழில்கள், தாய் மொழியியல் சார்ந்தவை, போதிக்கும் துறைகள்.

💫 சந்திரன் வலுவாக இருப்பதற்கான அமைப்புகள்: சந்திரன் நன்றாக இருந்தால் மனம் தூய்மையானதாக அமையும்.
முழுமையான ஒளித்திறனுடன் இருப்பதும் (பௌர்ணமி), உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, திக்பலம், வர்க்கோத்தமம் பெறுவது, வலுப்பெற்ற சுபரின் தொடர்பில் இருப்பது சிறப்பு. சனி மற்றும் ராகு-கேது சேர்க்கை இல்லாமல் சந்திரன் இருப்பது நல்லது.
சனியின் பார்வையில் இருப்பதும் நல்லது கிடையாது.இது போன்ற நிலைகளில் வலுப்பெற்ற சுபர் தொடர்பு கிடைத்திருப்பது நல்லது.
செவ்வாயின் தொடர்பினை சந்திரன் பெறுவதைப் பொருத்தவரை அது பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் ஒரே நேரத்தில் இயற்கை பாவர்களான சனி மற்றும் செவ்வாயின் தொடர்புகளை சந்திரன் பெறாமல் இருப்பதும் அவசியம்.
நீசம் பெற்ற நிலையில் இருக்கும் போது பௌர்ணமி சந்திரனாக இருப்பதும் வலுப்பெற்ற சுபரின் தொடர்பில் இருப்பதும் நல்லதாகும்.#Iniyavan

🎭 சந்திரன் மற்றும் கலைகள்:

கலைஞர்கள், கவிஞர்கள், இசைஞர்கள் போன்றவர்களுக்கு படைப்பாற்றல் திறன் மற்றும் கற்பனை வளம் அவசியம்.
அத்தகைய கற்பனை வளத்திற்கு காரக கிரகமாகிய சந்திரன் இவருடைய ஜாதகத்தில் பெரும்பாலும் நல்ல நிலையில் இருப்பார்.


திரிகோண பாவகங்களில் பாபர் தொடர்பின்றி இருக்கக்கூடிய சந்திரன் ஜாதகருக்கு நல்ல மனநிலையைத் தருவார்.நல்ல சந்திரன் ஒருவரை மனதளவில் சிறந்தவனாக்கி, மற்ற கிரகங்களின் பலனையும் முழுமையாக்கும்.
மனம் வலுவாக இருந்தாலே வாழ்க்கை வெற்றியடையும், அதற்குப் பின் இருக்கின்ற அதிபதி சந்திரனே.

🌗 சந்திரன் – ஒரு “மல்டிபிள்” முகம் கொண்டவன்:  பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரன் பக்கவாட்டிலான ஒரே முகமே தென்படுகிறது.
மற்ற பக்கம் "Dark Side of the Moon" என அழைக்கப்படுகிறது.
இது ஒரு ஆன்மீகத்தன்மை கொண்ட உருவகம்: “நாம் மற்றவர்களின் வெளிப்புறத்தைப் பார்க்கிறோம், அவர்களின் மனதின் இருண்ட பக்கம் எப்போதும் மறைந்தே காணப்படும்.”
ஜாதகத்தில் சந்திரனின் வலுவையும் மனதிற்கு காரண பாவகமான ஐந்தாம் பாவகத்தையும் நன்கு ஆராயும் பொழுதே ஒருவர் மனரீதியாக எப்படிப்பட்டவர் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.#Iniyavan

⚖️ சந்திரன் வலுத்தவர் ஒரு பிரச்சனையை எதிர்கொள்வதற்கும் சந்திரன் வலுவில்லாதவர் ஒரு பிரச்சனையை எதிர்கொள்வதற்கும் பல வித்தியாசம் இருக்கிறது:

முதல் எதிர்வினை:
வலிமை வாய்ந்தவர் - மன அமைதியுடன் “இது தற்காலிகம்” என்று நம்பிக்கை உடனே உருவாகும். அமைதியாக செயல்படுவார்.
பலஹீனமானவர் - பதட்டம், பயம், எதிர்காலம் பற்றிய சஞ்சலம் ஏற்படும். நம்பிக்கை இழக்கப்படும்.

உணர்வின்படி நடத்தல்:
வலிமை உள்ளவர் - உணர்வுகளை கட்டுப்படுத்தி, சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவார்.
பலஹீனமானவர் - உணர்ச்சியின் உச்சத்தில் சென்று தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உண்டு.

தீர்மானம் எடுக்கும் திறன்:
வலுவான சந்திரன் - தெளிவான சிந்தனையுடன் தீர்வு நோக்கி முன்னேறுவார்.
பலஹீன சந்திரன் - குழப்பம், மனதுடைவு, தீர்மானமெடுக்க முடியாத நிலை.

சமூக நிலைமை மற்றும் வெளிப்படையான நடத்தை:
வலுவான சந்திரன் - தன்னை சமாளித்து நம்பிக்கையுடன் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வார்..
பலஹீன சந்திரன் - தனிமைப்படுத்திக் கொள்வார், இவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை அதிகமாக காணப்படும்

முன்னோக்குப் பார்வை:
வலுவான சந்திரன் - எதிர்காலத்தை நோக்கி புதிய வழிகள் தேடி செயல்படுவார்.
பலஹீன சந்திரன் - கடந்ததை மீண்டும் மீண்டும் நினைத்து மனக்கசப்பில் உறைந்திருப்பது.

மனநிலை:
வலுவான சந்திரன் - மன உற்சாகம், இவர்கள் இழப்பின் போது நம்பிக்கை மீண்டு வருவது சுலபம்.
பலஹீன சந்திரன் - மன அழுத்தம், தூக்கக் குறைவு, உள் குழப்பம் ஏற்படும். இவப்பினை நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலையில் இருப்பது.

🕉️ தசாபுத்திகள் சரியில்லாத பொழுதும் கோச்சார நிலைகள் பாதிப்பை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுதும் சந்திரன் நல்ல நிலையில் இருக்கக் கூடியவர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். ஏனெனில் இவர்கள் தங்களது மனநிலையை தெளிவாக வைத்துக்கொள்வதன் வாயிலாக பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்து கடந்து விடுவார்கள்.
அல்லது பிரச்சனைகளின் தீவிரத்தை கடப்பதற்கான உதவிகள் இயல்பாகவே கிடைத்துவிடும்...#Iniyavan
சந்திரனை பலப்படுத்தவதற்கான ஆகச்சிறந்த பரிகாரம் நம்முடைய மனநிலையை போதுமானவரை நேர்மறை எண்ணங்களுடன் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய அளவிற்கான சுயநல எண்ணங்கள் இன்றி மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதுதான், வேறொன்றுமில்லை.
“பதட்டமும் மனச்சோர்வும் இல்லாத மனநிலை தான் சந்திரனை சரியாக செயல்படுத்த உதவும்."
எண்ணங்களை சரி செய்து கொண்டால்       எல்லாமே சரியாகிவிடும்...
🙏 நன்றிகள்
      Astrologer 
     ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
     📞 Cell: 9659653138

📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks

சுய ஜாதகத்தில் இலக்னம் மற்றும் ராசிக்கு 7வது இடத்தில் ராகு இருப்பின் என்ன விளைவுகள்?


ராகு 7-ம் வீட்டில் இருப்பது என்பது, அதே சமயம் கேது லக்னத்தில் (1-ம் வீட்டில்) இருப்பதை குறிக்கும். இது தனக்கு திருமண வாழ்க்கையில் முழுமையான திருப்தி இல்லாத உணர்வினை தரக்கூடும்.  ராகு 7-ம் வீட்டில் உள்ள நபர்கள் தாங்கள்  எதிர்பார்க்கும் வாழ்க்கைத் துணையை அவர்களால் அடைய இயலாது. அவர்களுக்குக் கிடைப்பவர்கள் பெரும்பாலும் கஷ்டமான, மோசமான, அல்லது நேர்மையற்றவர்கள் ஆக இருக்க வாய்ப்பு அதிகம். ராகுவிற்கு கிடைத்துள்ள சுபர் மற்றும் பாபர் தொடர்புக்கு ஏற்ப மேற்கண்ட பலன்களில் மாறுபாடு இருக்கும்
ஜாதவருடைய கேரக்டருக்கு முற்றிலும் நேர்மாறான துணையாக அவர்கள் இருக்கக்கூடும்.

முக்கிய அம்சங்கள்:

லக்னத்தில் கேது இருப்பதன் காரணமாக இவர்களுக்கு தனிமை பிடிக்கும், தங்களாகச் செயல்பட விரும்புவார்கள்.

திருமண வாழ்க்கை மிக முக்கியம், திருமண வாழ்வினை தவிர்த்து விடவும் முடியாது ஆனால் அதில் தடை, பிரச்சனைகள் ஏற்படும்.

பண்பாட்டை மீறி கல்யாணம் செய்வார்கள் — பிற இனத்தவர், மதம், சமூக நிலை, வயது போன்றவற்றில் பரஸ்பர மாற்றங்கள் இருக்கலாம்.

பொதுவாக பண்பாட்டின் வாயிலாக எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.

சில சமயங்களில்,  துணைவன்/துணைவி உடல் நலமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. (ராகுவின் பாதிக்குறிகள்/அஸ்பெக்ட்கள் கெட்டவையாக இருந்தால்)

ஆண்கள் மற்றும் பெண்கள்:

இருவருக்கும் தங்களுக்கு கிடைத்துள்ள துணை வாயிலாக வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொள்வது முக்கியம்.

சமூகத்தில் சிறந்த இடத்தை பிடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்.

துணையால் சுதந்திரம் குறைகிறது அல்லது கண்காணிக்கப்படுகிறது என்ற உணர்வு வந்தால், உறவினை உடைத்துவிட தோன்றும். இது போன்ற சூழ்நிலைகளில் நிதானத்தோடு செயல்படுவதும் வாழ்க்கைத் துணை இடத்தில் வாழ்க்கைத் துணையின் முரண்பாடான செயல்பாடுகளை சகிப்புத்தன்மையுடன் கடக்க முயல்வது அவசியம்.

வாழ்க்கையில்ஒவ்வொரு கணத்திலும் நேசத்துடன் உறவாட கற்றுக்கொள்ள வேண்டும். லக்னத்தில் கேது இருப்பதன் காரணமாக உலகியல் விருப்பங்களில் இவர்களுக்கு பெரிய அளவிற்கான விருப்பங்கள் இல்லாத நிலையிருக்கும் இதனால் இவர்களை, மற்றவர்கள் அல்லது இவருக்கு அமைந்திருக்கக் கூடிய வாழ்க்கை துணை  "நீ  காதல் கல்யாண வாழ்க்கை க்கு செட்டாக மாட்டே?" எனக் கேட்பது தொடரும்.

கார்‌மிக உறவுகள்:

ராகு 7-ம் வீட்டில் இருந்தால் கார்மிக உறவுகள் (past life karmic bond) வரும்.

எத்தனை தடவை தப்பிக்க அல்லது தவிர்க்க நினைத்தாலும், அந்த உறவுகள் இவர்களின் வாழ்வினில் இடம் பெற நேரிடும். 
தனக்கு அமைந்த வாழ்க்கை துணையிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது.

அந்த உறவுகள் பழைய ஜன்ம உறவுகளாக இருக்கும்.

உறவுகள் நீண்ட காலம் நீடிக்கும்.

இவர்கள் சண்டை மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக ஒருவரை மற்றொரு புறக்கணித்து தனியாக வாழ முயற்சித்தாலும் வாழ்க்கையில் தனியாக வெற்றி பெற முடியாது. ஏனெனில் மற்றவர்களின் மூலமாகவும் இவர்களுக்கு ஆதரவு கிடைப்பது குறைவாகவே இருக்கும். அவ்வகையில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மீண்டும் அவசியம் தேவைப்படும். அது பெயரளவிற்கான ஆதரவாக கூட இருக்கலாம். ஆனாலும் அதுவும் தேவைப்படும்

இணைந்து வாழும் உறவுகளில் தான் வளர்ச்சி, அதுவே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் சிலர் வாழ்க்கை துணை தேடவே மாட்டார்கள். அவர்களிடத்திலும் பெரிதாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் தன்னம்பிக்கையுடன் தனியே வாழ விரும்புவார்கள்.

இவர்களுக்கு துணை தேவையில்லை என்று தானாகவே எண்ணிக்கொள்வார்கள்.

துணையின் மீது அதிகமான ஆசை,  பிணைப்பு இருக்கும். ஆனால் அதே நேரத்தில் உறவில் சந்தேகம், ஆதிக்கம், உரிமை உணர்வு அதிகமாகும்.

உண்மையான நெருக்கம் இருக்க வேண்டிய இடத்தில், மனதளவில் தூரம் இருக்கும்.

அச்சத்தில், சந்தேகத்தில், அல்லது கர்ம பந்தத்தில் இந்த உறவுகள் நீடிக்கும்.

திருமண வாழ்க்கையில் இருவருக்குமான உணர்ச்சிப் புரிதல் குறைவாக இருக்கும்.

🔸 ராகு கிரகத்தின் இயல்பு

ராகு எப்போதுமே மாயை, ஆசை, எதார்த்தங்களை தாண்டி யோசிக்க வைக்கும் கிரகம்.

7-ம் வீட்டில் வந்தால், அது வாழ்க்கை துணை சார்ந்த விஷயங்களில் மிகுந்த ஆசை, எதிர்பார்ப்பினை உருவாக்கும்.

ஆரம்ப காலகட்டங்களில் துணை இருந்தால் தான், வாழ்க்கை பூரணமா இருக்கும் என்று எண்ண வைக்கும்.

ஆனா அவங்க தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் கஷ்டம் தரக்கூடிய உறவுகள் தான்.

இவர்களுக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணை பெரும்பாலும் ஒரே நேரத்தில் அன்பும், வெறுப்பும் உணர்த்தும் உறவாக இருக்கக்கூடும்.
உறவுகளில் அதிகமான நம்பிக்கை, அதே சமயம் அதிர்ச்சி, ஏமாற்றம் அடையும் நிலை.

ராகு 7-ம் வீட்டில் இருக்கும்போது, வணிகத்தில் கூட்டாளிகளுடன் பிரச்சனை, துரோகம், ஏமாற்றம் ஏற்படும். கவனம் அவசியம்

7-ம் வீட்டில் ராகு இருப்பது ஒரு ஜன்மத்திற்கான முக்கியமான கர்ம பந்தத்தை குறிக்கிறது. கடந்த ஜென்மத்தில் அதீத சுயநலம், பிறருடைய உணர்வுகளை சுக துக்கங்களை புரிந்துகொள்ளாது, தன்னுடைய இன்பங்களே முக்கியம் என்ற வாழ்ந்த காரணத்தின் காரணமாக இந்த  ஜென்மத்தில் எதிர் தரப்பினர் வாயிலாக சாதகம் அற்ற பலன்களை எதிர்கொள்ள கூடும். சில நிலைகளில் ராகு ஏழாம் இடத்தில் இருக்கும் போது வாழ்க்கை துணையிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாளடைவில் உணர வைக்கும்.

உண்மையான உறவுகளுக்காக ஏங்க வைக்கும்..

7-ம் வீட்டில் ராகு இருப்பவர்கள், உறவு, திருமணம், நண்பர்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொண்டு, தன்னலத்தை விட்டு, மற்றவர்களோடு இணைந்து வாழ கற்றுக்கொள்வது தான் இந்த ஜாதக அமைப்பின் முக்கிய நோக்கம்.
சுய ஜாதகத்தில் ராகுவுக்கு கிடைத்துள்ள சுபகிரகங்களின் தொடர்பு ராவுக்கு வீடு கொடுத்த கிரகமான ஏழாம் அதிபதியின் பலம், களத்திரகாரர்கள் என்று அழைக்கப்படக்கூடிய சுக்கிரனின் பலம் இவற்றைப் பொறுத்து பலன்களில் பெரிய அளவிற்கான மாறுபாடுகளும் இருக்கலாம்.
அதாவது எதிர்மறைப் பலன்கள் குறைந்து நல்ல பலன்கள் இருக்கக்கூடும்.
சுய ஜாதகத்தில் ராகு சனி செவ்வாய் போன்ற பாபர்களின் தொடர்பினை பெற்று சரியில்லாத நிலைகளில் இருக்கக்கூடிய பட்சத்தில் ராகு காலத்தில் தொடர்ச்சியாக துர்க்கை அன்னை வழிபாட்டினை கடைபிடிப்பது நலம் தரும்.

🙏 நன்றிகள்
      Astrologer 
     ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
     📞 Cell: 9659653138

📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks

ராகு அல்லது கேதுவுடன் ஒரு கிரகம் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்


ஜோதிட ரீதியாக சுய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவுடன் ஒரு கிரகம் நெருக்கமாக இணைந்திருந்தால் அந்த கிரகம் "கிரகணநிலை"  அடைகிறது. இது அந்த கிரகத்தின் இயல்புகளை மங்க வைக்கும் அல்லது தரக்கூடிய பலன்களில் வித்யாசமான எதிர்மறையான விளைவுகளை தரும். அதாவது ராகு அல்லது கேதுவுடன் ஒரு கிரகம் மிக நெருங்க நிலையில் இருக்கும் பொழுது தன்னுடைய காரக மற்றும் ஆதிபத்திய விஷயங்களை ஜாதகருக்கு வழங்குவதில் பிரச்சனைகள் இருக்கும்.

★ இணைவின் வலிமை மற்றும் அதன் தாக்கம்

➝ இதில் எந்த அளவுக்கு பிரச்சனை என்பது எந்த அளவிற்கு மேற்கண்ட கிரகங்கள் ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கின்றன என்பதை பொறுத்ததாகும்.
➝ இணைவின் அளவு டிகிரி அடிப்படையில் மிக நெருங்கி காணப்படும் பொழுது பாதிப்பின் வீரியம் அதிகம் இருக்கும்.
➝ இருவருக்குமான இடைவெளி அதிகரிக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
➝ இருவருக்குமான இடைவெளி எட்டு டிகிரிக்குள் உள்ளாக இருக்கும் பொழுது ராகு மற்றும் கேது மேற்கண்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களை வழங்குவதில் ஜாதகருக்கு தடைகளை ஏற்படுத்துவார்கள்.
➝ இருவருக்குமான இடைவெளி 13 டிகிரிக்கு மேலாக அதிகரிக்கும் பொழுது பெரிய அளவில் குறைபாடுகள் இருக்காது. ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமாக கிடைத்தாலும் கிடைக்க கூடிய அளவிலேயே இருக்கும்.

★ இணைவாக எப்போது கருதப்படும்?

➝ இதில் இணைவு என்பது ஒரே ராசியில்தான் இருந்தாக வேண்டும் என்று இல்லை

அதாவது ஒரு கிரகம் ராசியின் 29-வது டிகிரியில் இருந்து மற்றொரு கிரகம் அடுத்த ராசியில் முதல் ஐந்து டிகிரிக்குள் ஒரு கிரகம் இருந்தாலும் மேற்கண்ட நிலையையும் இணைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
➝ அதேபோல ஒரே ராசியில் இரு கிரகங்கள் இருந்தாலும் இருவருக்குமான இடைவெளி அதிகரித்து காணப்பட்டால் அதை இணைவாக கருத வேண்டியதில்லை.#Iniyavan

★ ராகுவின் பாதிப்பு கேதுவை விட அதிகம்

➝ இதில் கேதுடன் இணைந்த கிரகத்தை காட்டிலும் ராகுவுடன் இணைந்த கிரகத்தின் காரக, ஆதிபத்திய விஷயங்களிலே ஜாதகருக்கு பெரிய அளவிற்கான குறைபாடுகள் இருக்கும்.

★ ஸ்தான வலிமை முக்கியம்

➝ அதேபோல் ராகு கேதுடன் இணைந்த கிரகம் எந்த அளவிற்கு ஸ்தான வலிமையை பெற்று இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
➝ அதாவது உச்சம், ஆட்சி, மூலத்திரிகோண வீடுகளில் நின்று ராகு மற்றும் கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்திருப்பதற்கும் ஸ்தான பலத்தின் அடிப்படையில் பகை, நீசம் பெறக்கூடிய வீடுகளில் இருந்து ராகு மற்றும் கேதுடன் மிக நெருங்க நிலையில் இணைந்து இருப்பதற்கும் பலன்களில் பெரிய அளவிற்கான வித்தியாசங்கள் இருக்கும்.

★ வலிமையான கிரகம் - தாமதத்தோடு பலன்

➝ ஸ்தான பலத்தின் அடிப்படையில் நல்ல நிலையில் இருந்து ராகு, கேதுடன் ஒரு கிரகம் இணைந்திருக்கும் பொழுது முடிந்தவரை தன்னுடைய காரக ஆதிபத்திய விஷயங்களை ஜாதகருக்கு தரவே முற்படும். அதாவது மேற்கண்ட கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியிலான பலன்கள் ஜாதகருக்கு தாமதத்திற்கு பின்பு நடந்தேறும்.#Iniyavan

★ பலவீனமான நிலையில் பாதிப்பு அதிகம்

➝ அதேபோல ஸ்தான பலத்தின் அடிப்படையில் மிக பலவீனமான நிலையில் இருந்து ஒரு கிரகம் ராகு மற்றும் கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்பொழுது மேற்கண்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களில் பிரச்சனைகள் இருப்பதை தெள்ளத் தெளிவாக ஜாதகர்களால் உணர இயலும்.
➝ உதாரணத்திற்கு நான்காம் அதிபதி நீசம் பெற்ற நிலையில் இருந்து ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கி நிலையில் இருக்கும் பொழுது நான்காம் இடம் குறிக்கக்கூடிய ஆதிபத்திய விஷயங்களான கல்வி, தாயார் ஆதரவு வீடு, வாகனம் சார்ந்த விஷயங்கள், மன நிம்மதி போன்றவற்றில் ஜாதகருக்கு குறைபாடுகள் இருப்பதை உணர முடியும். இதோடு மேற்கண்ட கிரகம் எதுவோ அந்த கிரகத்தின் காரகரீதியான குறைபாடுகளும் ஜாதகத்தில் மேலோங்கி இருக்கும்.

★ சுப கிரக பார்வை இருந்தால்?

➝ அடுத்ததாக ராகு மற்றும் கேதுவுடன் ஒரு கிரகம் மிக நெருங்கி நிலையில் இருந்தாலும் வலுப்பெற்ற சுப கிரகத்தின் பார்வை மேற்கண்ட இணைவிற்கு இருக்கும் பொழுது குறிப்பிட்ட கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான குறைபாடுகள் பெரிய அளவுக்கு ஜாதகருக்கு இருக்காது. பார்க்கக்கூடிய சுப கிரகத்தின் பார்வை வலுவைப் பொறுத்து பலன்களில் மாறுபாடு இருக்கும். அதாவது சுப கிரகம் எந்த அளவிற்கு ஸ்தான பலத்தை பெற்று மேற்கண்ட இணைவை பார்க்கிறதோ அதற்கு ஏற்ப பாதிப்பின் வீரியம் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

★ வீட்டு அதிபதியின் வலிமை

➝ அடுத்ததாக எல்லாவற்றிற்கும் மேலாக வீடு கொடுத்த கிரகத்தின் நிலையும் கவனித்தாக வேண்டும். ஏனெனில் வீடு கொடுத்த கிரகம் வலுப்பெற்று இருக்கும் பொழுது மேற்கண்ட வீட்டில் நின்ற கிரகம் போதுமானவரை தன்னுடைய காரக, ஆதிபத்திய விஷயங்களை தரக்கூடிய அளவிலேயே இருக்கும் என்பதால் ராகு மற்றும் கேதுடன் ஒரு கிரகம் மிக நெருங்கிய நிலையில் இருந்தாலும் வீடு கொடுத்த கிரகம் உச்சம், ஆட்சி, மூலத்திரிகோணம் என வலுவுடன் இருக்கும்பொழுது மேற்கண்ட கிரகத்தின் வீட்டில் நின்ற ராகு மற்றும் கேதுடன் இணைந்துள்ள கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான விஷயங்களில் ஜாதகருக்கு பெரிய அளவிற்கான குறைபாடுகள் இருக்காது.#Iniyavan

★ கிரகணம் அடைந்த கிரகத்தின் தசா காலம் வருகிறதா அல்லது இல்லையா?

➝ அடுத்ததாக கிரகணம் பெற்ற கிரகத்தின் தசா காலங்கள் வராமல் இருப்பதும் நல்லதாகும். ஏனெனில் எந்த கிரகம் பாதிப்பை அடைந்திருந்தாலும் அந்த கிரகத்தின் தசா வரும்பொழுது தான் ஜாதகர் அதிக பாதிப்பை உணர்வார் என்பதன் அடிப்படையில் கிரகணம் பெற்ற கிரகத்தின் தசா காலங்கள் ஜாதகருடைய வாழ்நாளில் வராமல் இருப்பதும் சிறப்பாகும்.

★ பலன்களில் தாமதம் மற்றும் மனநிலை

➝ பொதுவாக கிரகணம் பெற்ற கிரகத்தின் காரக, ஆதிபத்திய விஷயங்கள் வாயிலாக நடைபெற வேண்டிய பலன்கள் ஜாதகருக்கு கிடைப்பதில் அதீத தாமதங்கள் இருக்கும்.
➝ மேற்கண்ட கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவதற்கு ஜாதகர் அதிகமான முயற்சிகளை செய்தாக வேண்டும். ஏற்படக்கூடிய தாமதங்களை அவர் பொறுப்பெடுத்தாமல் கடக்க கூடிய மனநிலையை பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
➝ எதிர்மறை பலன்கள் நடக்கும் பொழுது அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லக்கூடிய சகிப்புத்தன்மையை ஜாதகர் அவசியம் தன்னிடத்தில் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.#Iniyavan

★ உதாரணம் - திருமணம் / தொழில் தாமதம்

➝ உதாரணத்திற்கு ஏழாம் அதிபதி ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்திருக்கும் போது திருமணம் அதீத தாமதம் ஆகுதல், திருமண வாழ்வில் பெரிய அளவிற்கான திருப்தியின்மை போன்ற பலன்கள் இருக்கும். திருமண வாழ்வில் சகிப்புத்தன்மையை அதிகமாக கடைப்பிடிப்பதன் வாயிலாக இந்த பிரச்சனையை ஜாதகரால் எதிர்கொள்ள முடியும்.
➝ அதே போல உதாரணத்திற்கு பத்தாம் அதிபதி ராகு அல்லது கேது உடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு அமைய வேண்டிய வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் அதீத தாமதம் இருக்கும். மற்ற கிரகங்களைப் பொறுத்து இவர்கள் இயல்பாகவே திறமையானவர்களாக இருந்தாலும் ஜீவனக்காரகனான பத்தாம் அதிபதி ராகு அல்லது கேதுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்து கிரகணம் பெற்று இருப்பதால் தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள், முயற்சி செய்தும் பெரிய அளவிற்கான முன்னேற்றம் இன்மை, உழைப்பினை தந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலை, தடை, தாமதங்கள் இருப்பதை இவர்களால் பெரிய அளவில் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக சரி செய்து விட முடியாது. மாற்று முயற்சிகளையும், மாற்று வழிகளையும் செய்வதோடு காரக ஆதிபத்திய ரீதியான விஷயங்களில் மிகுந்த விழிப்புணர்வுடனும், பொறுமையாகவும் திடமான மனதுடன் தொடர் முயற்சிகளை கைவிடாது செய்து கொண்டிருப்பது மட்டுமே ராகு மற்றும் கேதுடன் இணைந்து கிரகணம் பெற்ற  கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான குறைபாடுகளை எதிர்கொள்வதற்கான வழியாகும்.#Iniyavan

★ பரிகார வழிபாடுகள்

➝ சுய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுடன் ஒரு கிரகம் மிக நெருங்கி நிலையில் இணைந்து இருந்து நடைமுறை வாழ்வில் மேற்கண்ட கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான விஷயங்கள் அதிக குறைபாடுகளை எதிர்கொள்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய பிறந்த நட்சத்திர தினங்களில் ராகு, கேதுக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் சரியான பூஜை முறைகளுடன் வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லதாகும்.
➝ ராகுவால் அதிகமான தடை, தாமதங்கள் சந்திப்பவர்கள் போதுமான முயற்சிகளைச் செய்தும் நடைமுறை வாழ்வில் பெரிய அளவிற்கான முன்னேற்றங்கள் இன்றி தவிப்பவர்கள், பிரச்சனைகளை சந்திப்பவர்கள் அனுதினமும் துர்க்கை அன்னை அல்லது கால பைரவர் வழிபாட்டை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
➝ எந்த கிரகம் ராகுவால் மிக நெருங்கி நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த கிரகத்தின் கிழமைகளில் வரக்கூடிய ராகு காலத்தில் வழிபாடுகளை கடைப்பிடிப்பது பொதுவாக நல்லதாகும்.
➝ கேதுவால் தடை, தாமதங்களை சந்திப்பவர்கள் அனுதினமும் முழுமுதற் கடவுளான விநாயகர் வழிபாட்டை கடைபிடிப்பது நலம் தரும்.
➝ ராகு மற்றும் கேது நம்முடைய முன்னோர்கள் அதாவது பித்துருக்களை குறிப்பிடக்கூடிய கிரகம் என்பதால் ஆண்டுதோறும் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்றவற்றை சரியாக கடைபிடிப்பதும் அவசியமாகும்.#Iniyavan
➝ அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோயிலுக்கு சென்று அவர்களின் ஆத்ம சாந்திக்காக நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆதரவற்றோர்களுக்கு அன்னதா
னம் செய்யலாம்.
➝ பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குதல், பறவைகளுக்கு தானியங்களை உணவாக தருதல், தெரு நாய்களுக்கு உணவளித்தல், அனுதினமும் காகத்திற்கு தவறாது உணவு வழங்குதல் போன்றவை நல்லதாகும்.
🙏 நன்றிகள்
Astrologer 
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
📞 Cell: 9659653138


வக்ரம் பெற்ற சனி தரும் பலன்கள்

சனி வக்கிரம் பெற்றால் அல்லது எப்பொழுதும் வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுக்களுடன் இணைந்தால் ஏற்படும் பலன்கள் என்னென்ன?

சனி என்பது ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் கர்ம சிந்தனைகளின் கிரகம். இது நம் வாழ்க்கையில் இருக்கும் மாயங்களை அகற்றி, உண்மையைக் காட்டும் ஒரு சக்தி. சனி நம்முடைய பூர்வ ஜென்ம பாவங்களை தீர்த்து, ஆத்மாவை தூய்மையாக்க உதவுகிறது.
---
சனி வக்ரம்  (Saturn Retrograde) பெற்றிருந்தால் கிடைக்கும் சாதக, பாதக விஷயங்கள்:
🔹 1. உணர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சி
சனி பின்வழியில் சென்றால், நீங்கள் எதையோ இழந்துவிட்டது போல தோன்றும்.  கர்ம வினைகளின் காரணமாக வாழ்க்கையில் உங்களுக்கு நடைபெற வேண்டிய அனைத்து சுப நிகழ்வுகளும் மிகத் தாமதமாக நடப்பதாக தோன்றலாம். உங்கள் முன்னேற்றத்தை தடை செய்ய எல்லா விஷயங்களிலும் அதீத தாமதங்கள் மற்றும் முயற்சித்தும் வெற்றி கிடைக்காத நிலை உருவாகலாம் ஆனால் இதுவே உங்களை சுய ஆய்வினில் தொலை நோக்குப் பார்வை கொண்டவராக மாற்றும். உங்களுடைய பழைய தீய கர்மாக்களை முற்றிலுமாக அழித்துக் கொண்டிருக்கும் செயல் இதுவாகும். ஆகவே இதைப்பற்றி வருத்தம் கொள்ளத் தேவையில்லை. மன ஆற்றலிலும் ஆன்மீகமாகவும் உங்களை வளர்க்கும் வாய்ப்பு இது. #Iniyavan 

🔹 2. சுயவளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி...
இளம் வயதில் தன்னம்பிக்கையின்மை இருந்தாலும், வயதுடன் கூடிய அனுபவம் மூலம் உங்கள் நம்பிக்கையும் நிலைத்தன்மையும் நாளடைவில் நன்கு மேம்படும்.

🔹3. கடின உழைப்பின் மூலம் வெற்றி
சனி நம் முன்னேற்றத்தை தடை செய்யவில்லை. அது வெற்றிக்கான பாதையை கடினமாக்குகிறது – இது உங்களை சீராகவும் உறுதியானவராகவும் மாற்றுகிறது. உழைப்பின் பிறகு கிடைக்கும் வெற்றிக்கு மேலும் மதிப்பு இருக்கும். நாளடைவில் உங்களை எல்லா விஷயங்களிலும் மிகுந்த பொறுப்புணர்வு உடையதாக மாற்றுகிறது

🔹 4. திறமைகள் மேம்படும்.. 
சனி வக்ரம் ஜாதகருக்கு சிறந்த கவனத்தினையும் ஒழுங்கினையும் மற்றும் சீரான முயற்சியினையும்  தரும். தொடர் முயற்சியில் எடுக்க கூடிய மனோபாவம் இவர்களுக்கு மற்றவர்களை விட இயல்பானதாக இருக்கும்.
ஆரம்பத்தில் ஜாதகரின் கவனமின்மை காரணமாக இழக்கப்பட்ட நல்ல வாய்ப்புகளை நினைத்து ஒரு படிப்பினையைத் தரும். நாளடைவில் இது ஜாதகரை எல்லா விஷயங்களிலும் போதுமானவரை கவனம் உள்ளவராக மாற்றும்.#Iniyavan

🔹 5. புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்
சாதாரண  சனி வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் எல்லைகளை விதிக்கிறது. ஆனால், சனி வக்ரம் பெற்று இருந்தால்,  பல தடை தாமதங்கள் தோல்விகளுக்கு பிறகும் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் திறக்கப்படுவதை நீங்கள் காணலாம். அதில் ஏதாவது ஒன்றில் ஜாதகர் ஜொலிப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுப்பார்.

🔹 6. தெளிவான நோக்கம் மற்றும் செயல்பாடு
நீங்கள் ஆரம்பித்த காரியங்களை முடிக்க ஒரு ஆழ்ந்த உந்துதல் உண்டாகும். தாமதங்கள் இருக்கலாம், ஆனால் முடிவில் நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

🔹 7. தொழில்முறை மாற்றங்கள் – நல்ல முடிவுகளுடன்
தொழிலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் அவை அனைத்தும் உங்களை சிறந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்:

🔹 8 . சனி வக்ரம் பெற்றுள்ளவர்களின் உள்ளுணர்வுகள்

உங்கள் மனதுக்குள் எப்போதும் ஒரு “நான் இன்னும் போதுமானவனில்லை” என்ற உணர்வு இருக்கக்கூடும்.

நீங்கள் அதிகமாக உங்களை விமர்சிக்கக் கூடும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நிதானமாக சிந்திக்கக்கூடியவராக இருப்பீர்கள்.

ஆனால் இதுவே உங்களை மேம்படுத்தும் ஒரு உந்துதலாகும் — நீங்கள் சிறந்தவர் ஆக முயலுவீர்கள்.#Iniyavan

---

🔹 9. பூர்வ ஜென்ம கர்ம விளைவுகள்

சனி, குறிப்பாக வக்ரம் பெற்ற நிலையில் இருந்தால், இது உங்கள் கடந்த ஜென்மங்களில் நீங்கள் செய்த சரியில்லாத செயல்களின் விளைவுகளை இந்த ஜென்மத்தில் அவற்றைஅனுபவிக்க வேண்டியதைக் குறிக்கிறது. அதாவது நம்முடைய முன்னேற்றத்திற்கு தேவைப்படும் விஷயங்களில் தொடர் கவனம் செலுத்தப்படுவதையும்  தேவையற்ற விஷயங்களில் முற்றிலுமாக கவனம் செலுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது

சில சங்கடங்கள், தாமதங்கள், அல்லது உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்கள், இந்த கர்மத்தை தீர்க்கும் வாய்ப்பாகும்.---

🔹 10. உறவுகளில் அனுபவப்படும் சவால்கள்

சனி உங்கள் ஜாதகத்தில் ரெட்ரோக்ரேட் என்றால், தந்தை அல்லது வேறு அதிகாரம் கொண்ட நபர்களுடன் உறவில் பிரச்சனைகள் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.

அவர்களின் பாசம் இல்லாமை, உதாசீனத்துவம், அல்லது கடுமையான அணுகுமுறைகள் உங்களை ஆழமாக பாதித்திருக்கலாம்.

ஆனால் இந்த அனுபவங்கள் உங்களை தனிக்கட்டுப்பாட்டுடன் வளர்க்கும்.

---

🔹 11. சுயமேலாண்மை மற்றும் பொறுப்பு உணர்வு

சனி பின்வழியில் சென்றாலும், இது உங்களுக்கு வலுவான பொறுப்பு உணர்வை உருவாக்கும்.

நீங்கள் மற்றவர்கள் செய்ய தயங்கும் கடின வேலைகளையும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள், நீண்ட நாள் நிலையான பலன்களைத் தரும்.#Iniyavan

---

🔹 12. சனி எந்த வீட்டில் இருக்கிறது என்பதன் அடிப்படையில் விளக்கம்

சுயசாதக ரீதியாக எந்த பாவகத்தில் சனி இருக்கின்றதோ அந்த பாவக ரீதியான விஷயங்களில் வெற்றி பெறுவதற்கு, நற்பலன்களை பெறுவதற்கு ஜாதகருக்கு கூடுதல் முயற்சிகள் தேவைப்படும் என்பதை உணர்த்தும். உதாரணத்திற்கு ஏழாம் பாவத்தில் சனி இருக்கும் பொழுது திருமணம், நண்பர்களுடனான நல்லுறவு போன்றவற்றில் ஜாதகருக்கு அதிக முயற்சிகள் தேவைப்படும்.
ஐந்தாம் பாவத்தில் சனி இருக்கும் பொழுது குழந்தை பாக்கியம் குழந்தைகளிடத்தில் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல், மனதினை தூய்மையாக வைத்துக் கொள்ள மற்றவர்களை விட அதிக கவனம் செலுத்த நேரிடல் போன்றவைகள் தேவைப்படலாம்.
அதேபோல் ஆறு மற்றும் பத்தாம் பாவங்களில் சனி இருக்கும் போது வேலை மற்றும் தொழில் விஷயங்களில் உங்களுடைய திறமைகளை நிரூபிப்பதற்கு, உங்களுக்கான தகுதியை பெறுவதற்கு சற்று கடினமாக போராட வேண்டி இருக்கும். 11ஆம் பாவத்தில் சனி அக்ரம் பெற்ற நிலையில் இருக்கும் போது உங்களுடைய இயல்பான அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சற்று கடின முயற்சிகள் தேவைப்படும்.#Iniyavan
---

🔹 13. தாமதமான வெற்றி – ஆனால் உறுதியானது

நீங்கள் விரும்பிய விஷயங்களில் விரைவான வெற்றிகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், நீங்கள் வெற்றியடைந்தால் அது நீண்ட நாள் நிலையானதாக இருக்கும்.

சனி வக்ரம் பெற்றவர்கள் நாளடைவில் பல்வேறு தடை, தோல்விகளுக்குப் பிறகு,   பெரும்பாலும் மதிப்பும், அனுபவமும் கொண்ட நபர்களாக வளர்கிறார்கள். சமுதாயத்தில் அவர்களுக்கான அந்தஸ்து நிச்சயம் ஒரு நாள் உண்டு.#Iniyavan

---

🔹 14. சனி உங்களை சோதிக்கவில்லை — வளர்ச்சிக்குத் தள்ளுகிறது

சனி ஒரு ஆசிரியர் போல — கடுமையாகக் கற்பிப்பதற்காக இருக்கிறான்.

நீங்கள் ஒவ்வொரு சோதனையையும் கடந்து செல்லும் போது, உங்களுடைய ஆன்மா வலிமையாகிறது, உங்கள் வாழ்க்கை நோக்கம் தெளிவடைகிறது.

---

சுருக்கமாக: கூறுவதாகில்
சனி வக்ரம் என்பது ஒரு சாபமல்ல; அது ஒரு ஆழமான கர்ம பயணத்தின் தொடக்கமே. உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல், அதை உருவாக்கும் சக்தி இது.
---
சனி ரெட்ரோக்ரேட் என்பது சவால்கள் மட்டும் அல்ல, அது உங்கள் உள்ளார்ந்த பலவீனங்களைப் பார்த்து, அவற்றை வலிமைகளாக மாற்ற ஒரு வாய்ப்பாகும். இந்த நிலையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு, தனிப்பட்ட வளர்ச்சிக்கான பாதையை உருவாக்க முடியும்.#Iniyavan

---
நினைவில் வைக்க: சுய ஜாதகத்தில் சனி தரக்கூடிய விளைவுகள் கடுமையாகத் தோன்றலாம், ஆனால் அதன் நோக்கம் நம்மை உயர்த்துவதே. நம்முடைய பழைய கர்மாக்களை தீர்ப்பது, நீங்கள் அதை எதிர்கொள்ளும் பொழுது மன வேதனை மற்றும் வருத்தப்படுவதற்கு பதிலாக பதிலாக, புரிந்து கொண்டு ஒத்துழைக்கும்போது, வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் உயரங்களை தாமதத்திற்கு பின்பு எட்ட முடியும். உண்மை என்னவெனில் அந்த தாமதத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை உங்களிடத்தில் இயல்பாக இருக்காது. ஆனால் காலங்கள் கடந்த பிறகு அந்த  மனநிலையை நீங்கள்  பெற்று விடுவீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் தாமதமானாலும் அதை வருத்தம் தரக்கூடியதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்..
🙏 நன்றிகள்
      Astrologer 
     ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
     📞 Cell: 9659653138

📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks

வெள்ளி, 28 மார்ச், 2025

பரிகாரம் செய்து விடுவதால் எதிர்மறையான பலன்கள் நடக்க இருப்பதை தவிர்த்து விட முடியுமா?



இன்று பார்த்த ஜாதகம்.

கன்னி லக்னம், மீன ராசியில் பிறந்த அந்த ஜாதகருக்கு இலக்னத்தில் அட்டமாதிபதி செவ்வாயுடன் ராகு இணைவு, ஏழில் சனியுடன் கேது  மற்றும் சந்திரன், தற்போது அந்த ஜாதகருக்கு 28 வயது முடிந்து ஒரு மாதம் 18 நாட்கள் ஆகிறது
திருமணத்திற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்த வருடத்திற்குள் எப்படியாவது திருமணம் செய்து வைக்கலாம் என நினைக்கின்றோம். திருமணத்திற்கு எப்படிப்பட்ட பெண் அமையும் என்பதே  ஜாதகருடைய தந்தையின் கேள்வி..

கோட்சார ரீதியாக நாளையிலிருந்து 
(29 03-2025) ஜென்ம சனி அந்த பையனுக்கு ஆரம்பிக்க இருக்கின்றது. அதோடு நடந்து கொண்டிருப்பது அட்டமாதிபதி செவ்வாயின் பார்வையை பெற்று சனியுடன் இணைந்த கேதுவின் தசாவில், லக்னத்தில் செவ்வாயுடன் இணைந்து ராகுவின் புத்தி நடப்பில் இருக்கிறது..

இது மட்டுமின்றி அந்தப் பையனின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நீசம் பெற்றிருக்கிறார். பரிவர்த்தனை மூலமாக அவர் ஆட்சி பெற்று இருந்தாலும் ஏழாம் இடம் சனி செவ்வாய் ராகு  தொடர்பினால் அதீத பலவீனமாக இருக்கிறது.
இதோடு 11 ஆம் இடத்தை மூன்று சுபர்கள் பார்த்து வலுப்படுத்துகின்றனர்.

எப்பொழுது இலக்ன, ராசிக்கு ஏழாம் இடங்கள் பாபர்களின் தொடர்பை பெற்று ஏழாம் அதிபதியும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்திருக்கிறதோ அப்பொழுது திருமணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். இதுபோன்ற நிலைகளின் தாமதம திருமணமே பெரும்பாலும் சிறப்பு தரும். மிக விரைவில் அவசரப்பட்டு திருமண வாழ்க்கை அமைத்துக் கொள்வது கண்டிப்பாக பிரச்சினை ஏற்படுத்தி இருதார அமைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஜென்ம சனி காலகட்டம் முடியும் வரை திருமணத்தை தவிர்த்து விடுங்கள் என்றேன்.#Iniyavan

அதோடு ஜென்ம சனி முடிந்த பிறகு, கேது தசாவில் லக்னாதிபதி புதன் களத்திரக்காரனான சுக்கிரடன் இணைந்த நிலையில் இருப்பதால், புதன் புத்தியில் திருமணம் அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று கூறினேன்.


உடனே ஜாதகரின் தந்தையார் அவ்வளவு காலம் எங்களால் காத்திருக்க முடியாது. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள் பரிகாரத்தை செய்து கொண்டு திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.

தசா புத்திகள் சரியில்லாத நிலையில் எதிர்மறையான ஒரு நிகழ்வு நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, நாம் உணர்த்தும் போது அதற்காக ஒரு பரிகாரம் சொல்லுங்கள். நான் செய்து கொள்கிறேன் என்று கூறுவது சரியானது அல்ல. பரிகாரத்தால் நடக்கக்கூடிய பாதிப்பை முற்றிலுமாக பெரும்பாலும் நீக்கிவிடவே முடியாது.#Iniyavan

நீங்கள் பரிகாரம் செய்துவிட்ட  காரணமாக ஏழாம் இடத்தோடு தொடர்பு கொண்ட சனி, செவ்வாய், ராகு  போன்ற பாப கிரகங்கள் சுபர்களாக மாறி நல்ல பலன்களை தந்து விட மாட்டார்.

இயற்கை பாபர்கள் பாதிப்பை தரக்கூடிய நிலையில் இருக்கும் போது மேற்கொண்டு சுப கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது மட்டும்  அவர்கள் பாதிப்பை தர மாட்டார்கள். அதை விட்டுவிட்டு ஜாதகர் பரிகாரம் செய்து விட்டால், பாப கிரகங்கள் பாதிப்பை தர மாட்டார்கள் என்பது தவறான கருத்து. கிரகங்கள் பரிகாரம் செய்தவரை ஒருவகையாகவும், பரிகாரம் செய்யாதவரை வேறு வகையாகவும் நடத்துவது கிடையாது.#Iniyavan

இதோடு அவருக்கு நடப்பில் இருக்கக்கூடிய கேது தசா எதிர்பாலின ரீதியாக ஏமாற்றங்களை தந்திருக்கும் என்று கூறிய பட்சத்தில், ஜாதகரின் தந்தை, ஆம் ஏற்கனவே என் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். கடைசியில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார்.

நீங்கள் ஏற்கனவே பரிகாரத்தை செய்து அதை மாற்றி இருக்கலாமே எனக் கேட்டபோது அவர் பதில் பேசவில்லை..

அதோடு அவருடைய ஜாதகத்தில் கேது பிரிவினை,எதிர்ப்பு, வம்பு, வழக்கு போன்ற விஷயங்களை சுட்டிக்காட்ட கூடிய ஆறாம் அதிபதி  சனியின் இணைவினை பெற்று, அட்டமாதிபதி செவ்வாயின் பார்வையைப் பெற்று தசா நடத்துகின்றார். மாதாக் காரகன் என்று அழைக்கப்படக்கூடிய சந்திரனுடன்  பிரிவினையைத் தரும் ஆறாம் அதிபதி சனியுடன் இணைந்து இருக்கிறார். அது மட்டும் இன்றி, நான்காம் அதிபதி அவருடைய ஜாதகத்தில் நீசம், அதோடு சனியும் பத்தாம் பார்வையாக நான்காம் வீட்டை பார்க்கின்றார் . அட்டமாதிபதி செவ்வாயும் ராகுவுடன் இணைந்து தாய் சார்ந்த விஷயங்களை சுட்டிக்காட்டக்கூடிய நான்காம் வீட்டை, தன்னுடைய நான்காம் பார்வையால் பார்க்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அதனால் கேது தசாவில் ஜாதகருக்கு தாய், தாய் வழி சொந்த பந்தங்கள் வழியில் விரோதம் ஏற்பட்டிருக்கும். தாயார் சார்ந்த விஷயங்கள் அவ்வளவு தூரம் இந்த கேது தசாவில் சிறப்பாக இருந்திருக்காது என்று கூறினேன். உடனே ஜாதகருடைய தந்தையார் நானும் என்னுடைய மனைவியும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அதோடு தன்னுடைய பையன் படிக்காமல் போனதற்கு காரணமே தாயார் தான். பையனின் தாயார், பையனுக்கு படிப்பு வரவில்லை என்று சொல்லி பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பியதாக சொன்னார்.

இத்தனை விஷயங்கள் ஜாதகத்தில் தசா புத்தி ரீதியாக நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் மேற்கண்ட விஷயங்களை பரிகாரம் செய்து ஏன் நல்லபடியாக மாற்றவில்லை என கேட்ட பொழுது  அவரால் மீண்டும் பதில்கூற இயலவில்லை.#Iniyavan

பரிகாரம்  பலனளிக்கும் என்பது உண்மைதான். பரிகாரங்கள் மனிதனின் மனதிற்கு  உளவியல் ரீதியாக பாதுகாப்பு தரக்கூடிய கவசம் மட்டுமே. பெரும்பாலான பரிகாரங்கள் மனதிற்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடியவை. பரிகாரங்களால் தசா புத்திகள் தரக்கூடிய எதிர்மறையான விஷயங்களை அப்படியே முழுமையாக சாதகமாக்கிக் கொள்ள ஒரு காலமும் முடியாது.  நடக்கக்கூடிய தசா புத்திகள் சரியில்லாத நிலைகளில் ஒரு பாதிப்பு வரக்கூடும்  உணரக்கூடிய பட்சத்தில் அதற்காக பரிகாரம் செய்து விடுகிறேன். பரிகாரம் செய்துவிட்டு மேற்கண்ட பாதிப்புகளை தவிர்த்துக் கொள்கிறேன் என்று நினைப்பது அறிவுடைமை ஆகாது. பரிகாரம் செய்து விடுவதால் பாதிப்பை தரக்கூடிய இயற்கை பாப கிரகங்கள் தங்களுடைய இயல்பை மாற்றிக்  சுபகிரகங்களாக மாறிவிட மாட்டார்கள்.

பரிகாரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் கிரகங்கள் தங்களுக்குரிய இயல்பில்தான் இருப்பார்கள் என்பதுதான் உண்மை.

பொதுவாகவே ஏழாம் இடம் ராகு, கேதுக்களின் தொடர்பினை பெற்று பலவீனமாகி, ஏழாம் அதிபதியும் சரியில்லாத நிலைகளில் 11ஆம் பாவகம் வலுத்து இருக்கக்கூடிய பட்சத்தில் இளம் வயதில் திருமணத்தை தவிர்ப்பது நலம்.

மேலே பார்த்த ஜாதகத்தில் இந்த விதி 100 சதவீதம் பொருந்திப் போகிறது . இலக்னத்திற்கு மட்டுமின்றி, ராசிக்கு ஏழாம் இடமும் பலவீனமடைந்து ராசிக்கு 11ஆம் இடமும் வலுப்பெற்று நிலையில் இருக்கக்கூடிய ஜாதகம் இதுவாகும்.

அதோடு தற்போது நடப்பிலும் ஜென்ம சனி ஆரம்பிக்க இருக்கிறது. இத்தருணத்தில் பரிகாரம் செய்து விடுவதால் எதிர்மறையான பலனை  அவரால் மாற்றிவிட முடியும் என நினைப்பதே எதிர்மறையான விளைவுகள் நடக்கப் போவதற்கான துவக்கமே.. ஆகையால் 
இக்காலகட்டத்தை தவிர்ப்பது மட்டுமே நல்லதாகும்.#Iniyavan

 உண்மையில் வாழ்க்கையில் வரக்கூடிய சில தாமதமான நிகழ்வுகள், எதிர்கால நன்மைக்காகவே இருக்கும் என பெரியோர்கள் சொல்வது இதன் காரணமாகவே..

எப்போது திருமணம் செய்யலாம்?

2028 அக்டோபர் மாதத்திற்கு மேல் களத்திரக் காரகன் சுக்கிரன் மற்றும் ஏழாம் அதிபதி குருவுடன் இணைந்துள்ள புதன் புத்தியில் திருமணம் நடக்கும்.  அக்காலகட்டத்தில் மீன ராசிக்கு ஜென்மச் சனியும் நீங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக உங்கள் பையனுக்கு கன்னி இலக்னத்திற்கு யோகத்தை தரக்கூடிய ராஜ யோகாதிபதி சுக்கிரன்,  ஐந்தாம் இடத்தில் நின்று,  இலக்னாதிபதி புதன் இணைவினைப் பெற்ற நிலையில் சுக்கிர தசா வர இருப்பதால் உங்கள் பையனுக்கு  எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தாமத திருமணம் செய்வது மட்டுமே உங்களுடைய மகனின் ஜாதக ரீதியாக நல்ல மணவாழ்க்கையை தரும் என்று சொன்ன பிறகு அவர் ஓரளவு ஏற்றுக் கொண்டார்..

சில தாமதங்கள் நம் மனதிற்கு ஏமாற்றத்தை தரலாம். நம் மனதை அதிகப்படியான வருத்தத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் அவை எதிர்கால நன்மைக்காக அன்றி வேறொன்றும் இல்லை. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை திசை மாற்றக் கூடிய பெரிய அளவிற்கான  பிரச்சனைகளை கண்டிப்பாக தவிர்த்து விட முடியும்.#Iniyavan 

ஒரு விஷயத்தை தள்ளிப் போடுவதால் ஏற்படக்கூடிய தாமதத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியுமே தவிர, பரிகாரத்தால் அல்ல என்பதே எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்...
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஞாயிறு, 9 மார்ச், 2025

குரு தரும் ஏமாற்றம்...



சுய ஜாதகத்தில் 1, 5, 9ஆம் பாவங்களில் குருவின் தாக்கம்| #Iniyavan 

ஜோதிடத்தில், குரு பகவான் ஆன்மிக ஈடுபாடு, நல்லறிவு, நற்செயல், விசுவாசம், நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வினை கொண்டு செல்லுதல் போன்றவற்றை குறிக்கிறது. 
சுய ஜாதகத்தில் லக்னம் (1), புத்ர ஸ்தானம் (5), பாக்கிய ஸ்தானம் (9) போன்ற பாவங்களில் குரு இருப்பது ஒரு பாக்கியமாக கருதப்படுகிறது.
லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பது, அதேபோல் ராசியினை, லக்னாதிபதியினை குரு பார்ப்பதும் நல்ல நிலையே...

ஆனால் இந்த நிலை ஒருவருக்கு மிகுந்த நம்பிக்கை, அன்பு, தர்ம உணர்வு, அதீத இரக்க சுபாவம் ஆகியவற்றை ஜாதகரிடத்தில் அதிகம் ஏற்படுத்துவதால்  இருப்பதால், பிறர் அவர்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். குரு 1, 5, 9 ஆகிய பாவங்களில் இருப்பது நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், சில நேரங்களில் இது  எல்லோரையும் அதிகப்படியாக நம்பும் தன்மை, மனிதர்களைப் பற்றிய நன்றியுணர்வு, மற்றும் கருணை உணர்வுகள் அதிகமாக இருப்பதை குறிக்கலாம். இதன் விளைவாக, அவர்கள் எளிதில் பிறரால் ஏமாற்றப்படக்கூடியவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஏன் குரு 1, 5, 9 பாவங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்?

1 ஆம் பாவத்தில் (லக்னத்தில்) குரு – எளிதில் நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்

இலக்னத்தில் குரு இருப்பவர்கள் மன ரீதியாக எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார்கள்.

தன்னைப் போலவே பிறரை நல்லவர்களாகவே கருதி நம்பி செயல்படுவார்கள்.

எளிதில் எவரையும் விசுவாசித்து ஏமாற்றம் அடையக் கூடும்.

எல்லோருக்கும் தயங்காமல் உதவி செய்வார்கள் தனக்கு ஒரு இக்கட்டான தருணம் வரும்பொழுது தயங்காமல் மற்றவர்களும் நமக்கு உதவி செய்வார்கள் என நினைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு இக்கட்டான தருணங்கள் ஏற்படும்பொழுது, இவர்களுக்கு யார் உதவுகின்றார்களோ அல்லது இல்லையோ இவர்கள் யாருக்கு உதவினார்களோ அவர்கள் இவர்களுக்கு நிச்சயம் உதவுவதில்லை

பெரும்பாலும் இவர்களுடைய திறன்களை, இவர்களுடைய ஆதரவை, மற்றவர்கள் தன்னுடைய தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்...

குரு நல்ல புத்திசாலித்தனத்தையும், நேர்மையையும் தரும். ஆனால், மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்ற எண்ணத்தினையும் இவர்களிடத்தில் தரும். இது ஆபத்தானது, எல்லா மனிதர்களும் இயல்பில் நல்லவர்கள் அல்ல..

இந்த குணம் அவர்கள் எதையும் சந்தேகிக்காமல் நம்புவதற்கு வழிவகுக்கும்.

தவறான நண்பர்களால் ஏமாற்றப்படக்கூடிய தன்மை அதிகம்.

தவிர்க்க வேண்டியவை:

யாரிடமும் உடனடியாக நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பு அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.

தனிப்பட்ட விவரங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

---

5ஆம் பாவத்தில் (புத்திர பாவத்தில்) குரு – கனிவான மனம் கொண்டவர்கள்

இவர்கள் குழந்தைகளைப் போல் தூய்மையான மனநிலையுடன் இருப்பார்கள்.

மற்றவர்களின் சொற்களை நேராக எடுத்துக் கொள்ளும் தன்மை உள்ளவர்கள்.

மற்றவர்கள் தங்களைப் பற்றி தவறுதலாக சொல்லும் பொழுது ஒரு சிறு விமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ளாத அளவிற்கு மெலிவான மனம் படைத்தவர்கள்.

பிறரின் போலியான உணர்வுபூர்வமான வார்த்தைகள் மற்றும் கனிவான சிந்தனைகள் இவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும்.

ஒருவரின் இக்கட்டான சூழ்நிலை கருதி ஒருவருக்கு இவர்கள் உதவினாலும் சில சூழ்நிலைகளில் அவர்கள் இவருக்கு எதிராகவே செயல்படுவார்கள். #Iniyavan

இது அதிகமான அன்பும், தாராள மனப்பான்மையும் கொடுக்கும்.

அன்பு என்ற பெயரில் ஒருவர் மனம் கவரப்பட்டு, பிறர் அவர்களை நன்மைக்காக பயன்படுத்தலாம்.

இந்த இடத்தில் இருக்கும் குருவால் காதல் தொடர்பான ஏமாற்றங்கள் அடிக்கடி ஏற்படலாம்.

தவிர்க்க வேண்டியவை:

யாரிடமும் உளம் கவிழ்ந்து அதிகம் பேசக்கூடாது.

பண உதவிகளை யாருக்கும் அனுபவமின்றி செய்யக்கூடாது.

எல்லோரிடத்திலும் முட்டாள்தனமாக அதீத தாராளமான மனப்பான்மையோடு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது

---

9ஆம் பாவத்தில் (பாக்கிய ஸ்தானத்தில்) குரு – ஆழ்ந்த விசுவாசம் கொண்டவர்கள்... #Iniyavan

இவர்கள் பெரும்பாலும் அறம் சார்ந்த நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்  என்ற எண்ணங்களை கொண்டவராக இருப்பார்கள்.

மற்றவர்களை மிகுந்த கருணையுடன் நேசிப்பார்கள். மற்றவர்களால் தான் ஏமாற்றப்படுவதைக் கூட பெரியளவில் பொருட்படுத்த மாட்டார்கள்..

9-ஆம் பாவம் தர்மம், நற்சிந்தனை, உயர்ந்த கொள்கைகளை குறிக்கும்.

இவர்கள் பிறரை மதிக்கிறார்கள், பெருந்தன்மையுடன் நினைக்கிறார்கள் அதேபோல் பிறரும் தன்னை மதிக்கிறார்களா? பெருந்தன்மையுடன் நம்மை நடத்துவார்களா? என அவர்களை இவர்கள் சந்தேகிக்க மாட்டார்கள் 

அவர்களது நல்ல மனதை சிலர் தவறாக பயன்படுத்தலாம், குறிப்பாக உறவினர்கள், நண்பர்கள், மற்றும் மதத் தலைவர்கள்.

தவிர்க்க வேண்டியவை:

ஒருவரைப் பற்றி முழுமையான பின்புலம் தெரியாமல் ஆன்மிகம்  தொடர்பான விஷயங்களில் முழு நம்பிக்கை வைக்கக்கூடாது.

எல்லோரிடத்திலும் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை

எந்த ஒரு மத அல்லது ஆன்மிக அமைப்பில் சேவை சார்ந்த இவர்களுக்கு பணம் அளிப்பதற்கு முன்பு  ஆராய வேண்டும்.
---
குருவால் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்கான வழிமுறைகள்

திரிகோண பாவங்களில் (1, 5, 9) குரு இருப்பவர்கள் பிறரால் எளிதில் ஏமாறக்கூடிய நிலை ஏற்படும், ஏனெனில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை, கருணை, தாராள மனப்பான்மை, மற்றும் நல்ல எண்ணங்கள் அதிகம் இருக்கும். இதனால், பிறரின் சொற்களை உடனே நம்பிவிடுதல், நல்லவர்களாகவே எண்ணுதல், தீயவர்களை அடையாளம் காண இயலாமை போன்ற பிரச்சினைகள் நேரிடலாம். அவர்கள் ஏமாறாமல் இருக்க மற்றும் பிறர் தங்களுடைய நல்ல மனப்பான்மையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க செய்ய வேண்டிய சில முக்கியமான செயல்பாடுகள்:

1. எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் (Set Boundaries)

அனைவருக்கும் நான் எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் உதவுவேன் என்ற எண்ணத்தை கொண்டிருக்கவே வேண்டாம்

நம்முடைய நேரம், பணம், ஆற்றல், உதவி ஆகியவற்றை யாருக்கெல்லாம் வழங்க வேண்டும் என்பதற்கு நியாயமான வரம்பினை வைத்திருக்க  வேண்டும்.

"நான் இதை செய்ய முடியாது" அல்லது "இது என்னால் சாத்தியமாகாது" என்று சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். #Iniyavan

2. யாரும் கூறியதை உடனே நம்பக்கூடாது (Verify Before Trusting)

பிறர் நம்மிடத்தில் சொல்லும் நம்பகமான வார்த்தைகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.

நம்மிடத்தில் அதிகம் கரிசனம் காட்டும் நபர்கள், அவர்களுடைய சொந்த லாபத்திற்காக மட்டுமே நடிக்கலாம், எனவே நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

முக்கியமான விஷயங்களில் ஒரே நபரின் வார்த்தையை மட்டும் நம்பாமல், பல்வேறு மூலங்களில் இருந்து அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

3. சூழ்நிலைகளைக் கவனிக்கவும் (Observe Situations Carefully)

யாராவது உதவி கேட்டால், அவர்கள் முன்பு எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

உங்களை ஒருவர் உதவிக்காக மட்டும் உபயோகிக்க நினைத்தால், அதைப் புரிந்து கொண்டு அவருடைய பழக்கவழக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும்

4. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் (Control Emotional Reactions)

குரு 5 அல்லது 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஒருவித  தன்மையான தாராள மனநிலை இருக்கும்:
"நாம் அனைவருக்கும் உதவ வேண்டும்". ஆனால், இது பிறரால் தவறாக பயன்படுத்தப்படும்.

எல்லோருக்கும் உதவ முடியாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நேரம், பணம், ஆற்றல் வீணாவதை குறைக்க சிந்தித்து செயல்பட வேண்டும்.

5. வன்மையாக "இல்லை" சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

நேரம், உதவி, பணம் போன்றவை அதிகம் கேட்கப்படும் போது எல்லோருக்கும் 'ஆம்' என்று சொல்லக்கூடாது.

"இல்லை" (No) என்று சொல்லும்போது பதட்டம் ஏற்படலாம், ஆனால் இது நீண்ட கால நன்மைக்காகவே. #Iniyavan

நல்ல மனநிலை கொண்டவர்களே பெரும்பாலும்  ஏமாறுவார்கள் என்பதால், ஒரு தடவை ஏமாற்றம் வந்தவுடன் அதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. உங்களை சுயமாக பாதுகாக்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

தயவுசெய்து நன்கொடைகளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டாம்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நல்ல நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

7. இன்றைய நண்பனும் நாளை நமக்கு எதிரியாகலாம் என்ற கண்ணோட்டத்துடன் எவரிடமும் பழக வேண்டும்.

8.யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக்கூடாது என்பதை தீர்மானிக்க எப்போதும் அறிவுடன் செயல்படுங்கள்.

9.ஒரு விஷயம் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் உடனடி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

10.சிறந்த ஆலோசகரை தேர்ந்தெடுங்கள்

ஒவ்வொரு முக்கியமான விஷயத்திலும் அனுபவசாலிகளிடம் வாழ்க்கையில் அடிபட்டு கற்றறிந்தவர்களின் ஆலோசனையுடன் செயல்படுவது அவசியம். #Iniyavan

எவரையும் உடனடியாக நம்புவதற்குப் பதிலாக, அவர்களைப் பற்றிய தகவல் சேகரியுங்கள்.

11. உதவி செய்யும் போது விழிப்புடன் இருங்கள்

உதவி செய்வதற்கு முன்பு யாருக்குப் பயன் அளிக்கப் போகிறது என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள் 

12.தியானம், யோகம் போன்றவை மனதை தெளிவாகவும் விழிப்புணர்வாகவும் வைத்திருக்க உதவும். அவ்வகையில் அனுதினமும் இவற்றை கடைபிடிப்பது சிறப்பு தரும்.

13.அனுதினமும் செய்தித்தாள்களில் வரக்கூடிய ஏமாற்ற சம்பவங்களை படித்து விழிப்புணர்வோடு செயல்படக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பிற மனிதரை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும்...

14.குரு என்றாலே தனம்...பண விஷயங்களில் இவர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்புகளே பெரிய அளவில் அதிகம். ஆகவே பண விஷயங்களில் கறாறாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். #Iniyavan

இறுதியாக.....

குரு 1, 5, 9ஆம் பாவங்களில் இருப்பவர்கள் மிகுந்த நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இது அவர்களை ஏமாற்றம் அடையக்கூடியவர்களாக மாற்றும். அவர்கள் தங்களின் பெருந்தன்மையான குணத்தை  கட்டுப்படுத்தி, யாரை எப்படி நம்ப வேண்டும் என்பதில் அறிவுடன் செயல்பட்டால் மட்டுமே, வாழ்வில் ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.

வாழ்க்கையில் இவர்கள் பெறக்கூடிய  ஏமாற்றமான அனுபவங்களே இவர்களை எதிர்காலத்தில் எச்சரிக்கை உள்ளவர்களாக மாற்றும்...

நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks

வியாழன், 6 மார்ச், 2025

செவ்வாய் தரும் தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகள்

தன பாவகத்தில் செவ்வாய் நின்று சுபர்களின் தொடர்பினைப் பெற்றால்.. (அ) ஆறு, பத்தாம் பாவகங்களுடன் செவ்வாய் தொடர்பு...

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் இரண்டாம் இடத்தில் (தனபாவகத்தில்) இருந்து சுப கிரகங்களின் தொடர்பு கிடைக்கும் பட்சத்தில்அந்த ஜாதகருக்கு பின்வரும் துறைகளில் இருந்து வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது:
இந்த நிலை இலக்னத்திற்கு இரண்டு மட்டுமின்றி, இலக்னாதிபதிக்கு இரண்டில் செவ்வாய் நின்று சுபகிரகங்களின் தொடர்பில் இருந்தாலும் பொருந்தும்.

1. நிலம், கட்டிடங்கள், சொத்து தொடர்பான தொழில்

செவ்வாய் பூமி மற்றும் கட்டுமானத்துடன் தொடர்புடையது.

ரியல் எஸ்டேட், வீடுகள், குடியிருப்புகள், கட்டடங்கள் வாங்கி விற்பனை செய்வது போன்றவை. நிலம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பொருந்தும்...


2. காவல்துறை, பாதுகாப்புத் துறைகள், 

செவ்வாய் வீரத்திற்கு காரக கிரகம்; போலீஸ், ராணுவம், பாதுகாப்பு சேவைகள், மருத்துவம்  போன்ற துறைகளில் வாய்ப்பு கிடைக்கும்., சண்டை பயிற்சி, தற்காப்பு பயிற்சி நிலையங்கள் தொடர்பானவை

3. பொறியியல், தொழில்நுட்பம்

மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் என எந்த இன்ஜினியரிங் துறையும் செவ்வாயால் பலம் பெறும்.

தொழில்நுட்பம், மெஷின்கள், மெக்கானிக்கல் தொடர்பான தொழில்கள்.


4. விளையாட்டு, உடற்கல்வி, யோகம்

செவ்வாய் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை குறிக்கிறது.

விளையாட்டு வீரர், உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகா ஆசிரியர் ஆகிய துறைகள் லாபகரமானவை.


5. மருத்துவத் துறை, அறுவை சிகிச்சை

செவ்வாய் இரத்தத்தை, அறுவை சிகிச்சையை குறிக்கிறது.

மருத்துவர் (சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை), ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்றவை.


6. எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், ஆயுதங்கள்

செவ்வாய் இயந்திரங்கள், ஆயுதங்கள், தொழில்துறை உற்பத்தி போன்றவற்றை குறிக்கிறது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயுத உற்பத்தி, மெஷின்கள் உற்பத்தி, எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை.


7. செவ்வாய் நெருப்பிற்கு கரகம் கிரகம் என்பதால் நெருப்பு தொடர்புடைய தொழில்களும் இதில் அடங்கும்..

வேகமான உணவு (Hot Foods) & சமையல் தொடர்பான தொழில்கள்

ஹோட்டல், உணவகம், சமையல் காரகர்கள்

பேக்கரி, சாஸ், மசாலா பொருட்கள் உற்பத்தி


8.ரசாயனங்கள் மற்றும் மருந்துகள்

ரசாயன தொழில் (Chemical Industry)

பிளாஸ்டிக், வண்ணச்சாயம், பெயிண்ட் உற்பத்தி

மருந்துகள், ஆயுர்வேத தயாரிப்பு (அதிக சூடான மருந்துகள்)

(ஒருவருடைய வேலையை குறிப்பிடக்கூடிய ஆறாம்  பாவகத்துடனும், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிப்பிடக்கூடிய பத்தாம் பாவகத்துடன் செவ்வாய் சுப கிரகங்களின் தொடர்பை பெற்று தொடர்பு கொண்டாலும் இது பொருந்தும்)

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/H9HNdLNl7g6AUdjsNbDRuT


https://t.me/Astrologytamiltricks

புதன் தரும் தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகள்

இலக்னத்திற்கு 2,6,10 புதன் – தொழில் & கல்வி வாய்ப்புகள்...

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,6,10ஆம் இடத்தில், அல்லது லக்னாதிபதிக்கு 2,6,10ஆம்  இடத்தில் சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் புத்திசாலித்தனம், வணிக நுணுக்கம், நல்ல தொடர்புத் திறன், கணக்கீட்டில் புலமை, & பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறன் இருக்கும். இதன் அடிப்படையில், அவர்களுக்கு சில தொழில்கள் & படிப்புகள் சிறப்பாக அமையும். #Iniyavan 
வேலை மற்றும் தொழிலை குறிப்பிடும் ஆறு பத்தாம் பாவகங்களுடன் வலுப்பெற்ற புதன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில்  கீழ்க்கண்ட தொழில்துறைகள் அதற்கேற்ற படிப்புகள்  அவருக்கு அமைய வாய்ப்புகள் உண்டு
---

தொழில்களில் வாய்ப்புகள்

புதன் வணிகம், கணக்கீடு, தகவல் தொடர்பு, & கல்வி ஆகியவற்றிற்கு காரக கிரகமாக இருப்பதால், இவர்களுக்கு கீழ்க்கண்ட தொழில்களில் வருமானம் இருக்க வாய்ப்பு உள்ளது:

1. கணக்கு & நிதி (Accounts & Finance)

அக்கவுண்டிங், புக்கீப்பிங், வங்கி & நிதி ஆலோசனை

ஷேர் மார்க்கெட் & இன்வெஸ்ட்மென்ட் துறைகள்

நிதி நிர்வாகம் (Financial Management)


2. வணிகம் & வர்த்தகம் (Business & Trade)

தகவல் தொடர்பு, வெளியீடு, எழுத்து, புத்தக வெளியீடு

டிஜிட்டல் மார்க்கெட்டிங், E-commerce வணிகம்

உதவி நிதி ஆலோசகர், Start-up Consultant


3. தகவல் தொழில்நுட்பம் (IT & Software)

மென்பொருள் அபிவிருத்தி, UX/UI டிசைன்

Data Science, Artificial Intelligence, Cyber Security

Web Development, Mobile App Development


4. பத்திரிகை & ஊடகம் (Journalism & Media)

பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி

Content Writing, Blogging, Copywriting

Public Relations (PR) & Corporate Communications


5. சட்டம் & மத்தியஸ்தம் (Law & Arbitration)

வழக்குரைஞர், சட்ட ஆலோசகர், Corporate Lawyer

மத்தியஸ்தம் & பேச்சு தொடர்பான பணிகள்

அரசியல், சமூகச் செயற்பாடு, அரசு நிர்வாகம்


6. கல்வி & பயிற்சி (Education & Training)

ஆசிரியர், கல்வி ஆலோசகர், Online Coaching

மொழிபெயர்ப்பு, இலக்கியம், பேச்சு பயிற்சி

மனையியல் அறிவியல், உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் #Iniyavan

ஜோதிடம்,

---

இவர்கள் எது மாதிரியான படிப்புகளை தேர்வு செய்திருக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் இவர்களுக்குப் பிடித்தமான படிப்புகள் பின்வருமாறு இருக்கலாம்:

1. கணக்கு & நிதி (Accounts & Finance)

B.Com, CA, CFA, MBA (Finance)

Stock Market, Investment Banking Courses


2. வணிக நிர்வாகம் & மேலாண்மை (Business & Management)

BBA, MBA (Marketing, HR, Operations)

Entrepreneurship & Digital Marketing


3. தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

B.Tech / B.Sc (Computer Science, IT)

Data Science, AI, Cyber Security

BCA, Software Development Courses


4. பத்திரிகை & ஊடகம் (Journalism & Mass Communication)

BJMC (Bachelor of Journalism & Mass Communication)

Content Writing, Blogging, Social Media Marketing


5. மொழிபெயர்ப்பு & இலக்கியம் (Linguistics & Literature)

B.A / M.A (English, Tamil, Other Languages)

Creative Writing & Translation Courses

இவ்விடத்தில் ராகுவின் நிலையும் பார்க்கப்பட வேண்டும்

6. சட்டம் & அரசு நிர்வாகம் (Law & Governance)

LLB, Corporate Law, Intellectual Property Law

Public Administration, Political Science



7. ஆசிரியராக & பயிற்சியாளராக (Teaching & Training)

B.Ed / M.Ed (Education, Psychology, Counseling)

Language & Speech Therapy Courses
இவ்விடத்தில் குருவின் தொடர்பு அவசியம்


8. சிறிய காலக்கெடுவில் முடிக்கக்கூடிய படிப்புகள்

Stock Market Trading

Digital Marketing & SEO

Graphic Designing & Animation

Foreign Languages (French, German, Spanish, etc.)

---
புதனுடைய வீடுகளில் நின்று ஒரு கிரகம் தசா புத்தி நடத்தினாலும் புதனுடன் இணைந்து ஒரு கிரகம் தசாபுத்தி நடத்தினாலும் இந்த பதிவு பொருந்தலாம்..
லக்னம் மட்டுமின்றி ராசியின் அடிப்படையில் இந்த பதிவு பொருந்தக்கூடும்.
ஜோதிடத்தில் புதன் என்னும் கிரகம் சர்வகலா வல்லவன் அவ்வகையில் சுய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருப்பபவர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை, தங்களின் நுண்ணறிவை & தொடர்புத் திறனை பயன்படுத்தி எந்த துறையிலும் வெற்றி பெறலாம்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks